தைத் திருவிழா
ஒவ்வொரு வருடமும் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி பதினோரு நாட்கள் நடைபெறுகின்றன.
பதினோரு நாட்களும் திருவிழாக்கள் மேலே கண்டவாறே நடைபெறுகின்றன.
வைகாசித் திருவிழா
வைகாசித் திருவிழா
ஒவ்வொரு வருடமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை தொடங்கி பதினோரு நாட்கள் நடைபெறுகின்றன.
இத்திருவிழாக்களும் மேலே கண்டவாறே நடைபெறுகின்றன. குறிப்பிட்டுக் கூறும்படியான
வித்தியாசங்கள் ஏதுமில்லை.
திரு ஏடு வாசிப்புத்
திருவிழா
ஒவ்வொரு ஆண்டும்
கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அல்லது இரண்டாவது வெள்ளிக்கிழமை திருஏடு
வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது.சிலவேளை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் திரு
ஏடு வாசிப்புத் திருவிழாவை நடத்துகின்றனர். இத்திருவிழா பதினோரு நாட்கள்
நடைபெறுகின்றன. இது மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை நிறைவடைகின்றது.
அகிலத்திரட்டு
அம்மானையை ஓலைச் சுவடியில் (ஏடு) எழுதி வைத்து வாசிக்கப்பட்டதால் ஏடு என்று
அழைத்தனர். அதனையே இன்றும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அகிலத்திரட்டு ஒருவர்
படிக்க மற்றவர்கள் கேட்பது என்னும் மரபில் அமைந்தது. தென் திருவிதாங்கூரில்
பத்தொன்பதாம் ±ற்றாண்டின் இறுதிவரை ஏட்டில் எழுதிப் படிப்பது என்னும்
பழக்கம் பரவலாக இருந்துள்ளது. இதற்குக் காரணம் அச்சுப் பயன்பாடு வெகுசனப்படவில்லை
என உணரலாம்.
அகிலத்திரட்டு
முதன் முதலில் 1939 – இல் அச்சில் பதிப்பிக்கப்பட்டது. அ தனை அடியொற்றியே பிற
பதிப்புகள் வரத் தொடங்கின.
திரு ஏடு எழுதப்பட்ட
இடமான தென்தாமரைகுளம் பதியில் மதலில் திரு ஏடு வாசிப்புத் திருவிழா தொடங்குகிறது.
அங்கு பத்துநாள் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது. அதன் பின்னர்
அங்கிருந்து திரு ஏடு சுவாமித்தோப்புப் பதிக்குக் கொண்டு வரப்படுகின்றது.
சுவாமித்தோப்புப்பதியில் தொடர்ந்து பதினேழு நாட்கள் திரு ஏடு வாசிப்புத் திருவிழா
நடைபெறுகின்றது. சுவாமித்தோப்ப்ப் பதியில் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நிறைவு
பெற்ற பின்னர் மீண்டும் தென்தாமரைகுளம் பதிக்குத் திரு ஏடு கொண்டு
செல்லப்படுகின்றது. பின்னர் தென்மாமரைகுளம் பதியில் மீதி ஏழு நாட்கள் திரு ஏடு
வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது. அதன் பின்னரே தென்தாமரைகுளம் பதியில் திரு
ஏடு வாசிப்புத் திருவிழா நிறைவடைகின்றது.
அகிலத்திரட்டை
அய்யா வைகண்டர் சொல்ல அய்யாவின் சீடரான தென்தாமரைகுளம் இராமகிருஷ்ண நாடார் மகன்
சகாதேவன் என்னும் அரிகோபாலன் எழுதினார். இவர் அகிலத்திரட்டை மலையாளம் ஆண்ட 1016
கார்த்திகை 27 வெள்ளிக்கிழமை ( கி.பி. 1841 டிசம்பர 12 ஆம் தேதி) எழுதி
முடித்துள்ளார்.
“ அய்யா உரைக்க அடியேன் அதை எழுதி
மெய்யான போதம் மேலோர்கள் முன்பதிலே
அன்பான இந்த அகிலத்திரட்டு அம்மானை” ( அகி. தொகு. 1 )
என்று அகிலத்திரட்டு அய்யா வைகுண்டர் கூறு அரிகோபாலன் சீடர்
எழுதியதாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அரிகோபாலன் சீடர் தென்தாமரைகுளம் பதியில்
வைத்து அய்யா வைகுண்டர் கூற எழுதியதால் ஏஐ வாசிப்புத் திருவிழா தென்தாமரைகுளம்
பதியில் தொடங்கி தென்தாமரைகுளம் பதிணிலேயே நிறைவடையும் வழக்கத்தை மேற்கொள்கின்றனர்
என சுவாமித்தோப்புப் பதியின் தர்மகர்த்தாக்களில் ஒருவரான பாலபிரஜாபதி அடிகள்
கூறுகின்றார்.
அனைத்துப்
பதிகளிலும் பதினைந்து, பதினாறாவது திரு ஏடு வாசிப்புத் திருவிழாவை “திருக்கல்யாண
ஏடு ” என அழைக்கின்றனர். இதனை
“இகனைத் திருமணம் ” ஏடு வாசிப்பு என்றும்
கூறுகின்றனர்.
பதழினேழாம்
நாள் நடைபெறும் திரு ஏடு வாசிப்புத் திருவிழாவை “பட்டாபிசேக வாசிப்பு” எனக் குறிப்பிடகின்றனர். இதைனை
அய்யா வைகுண்டர் ஆசி பெற்ற நாள் என்று அன்பர்கள் கூறுகின்றனர்.
சுவாமித்தோப்புப்
பதியில் திரு ஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கும் அன்று அம்பலப்பதி, முட்டப்பதி, ¯ப்பதி, தெட்சணத்துத் துவாரகா பதி,
வாகை பதி போன்ற பதிகளில் நடைபெறுகின்றது. தென்தாமரைகுளம் பதியில் இருந்து திரு ஏடு
இப்பதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை.
¯ப்பதியில் பத்து நாட்களோ,
பதினைந்து நாட்களோ திரு ஏடு வாசிப்புத் திருவிழாவை மேற்கொள்கின்றனர்.
அம்பலப்பதியில் பதினேழு நாட்களும் துவாரகா பதியில் ( ஐப்பசி முதல் வெள்ளி )
பதினேழு நாட்களும் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடத்தப்பெறுகின்றது. வாகை
பதியலும் பதினேழு நாட்கள் திரு ஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது.
பத்து
நாட்கள் எனில் எட்டும் ஒன்பதும் நாட்கள் திருக்கல்யாண ஏடு வாசிப்பாகக்
கொள்கின்றனர். பத்து நாட்கள் நடைபெறுவதாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை தொடங்கி
ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும் வண்ணம் திரு ஏடு வாசிப்புத் திருவிழாவை
நடத்துகின்றனர்.
ஒடுக்கப்பட்ட
மக்கள் வேதங்களைத் தொடவும், கேட்கவும், படிக்கவும் தடை விதிக்கப்பட்ட
காலகட்டத்தில் அய்யா வைகுண்ட சுவாமிகள் அய்யா வழி மக்களின் புனித ±லாக அகிலத்திட்டு அம்மானையை வழங்கிச் சென்றார்
என நம்பலாம். இகனை மணம் அய்யா வைகுண்டர் பெண் தெய்வச் சக்திகளைத் தன்னோடு இணைத்துக்
கொள்ள என்று கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக