திங்கள், 24 நவம்பர், 2014

கலி

குழப்பத்தில் முடிவெடுக்க வேண்டாம்
குழப்பத்திற்கு முடிவு கட்டுவோம்

கலியுகத்தில் கலி மாயையின் கொடுமைகள் அதிகரித்து வரம்புகளை கடந்து நின்ற போது சிவனும் பிரம்மாவும் மற்றுமுள்ள தேவர்களும் விஷ்ணுவை தேடுகிறார்கள். கலியின் மயக்கத்தால் அவர்கள் கண்களுக்கு விஷ்ணு ( நாராயணன் ) புலப்படவில்லை. நாராயணர் ஏழாம் பிறவி எடுப்பதற்காக பூமியில் ஒழிந்து கிடக்கிறார் என்று தேவர்கள் தெரியாததை தெரிந்தது போல் பொய் சொன்னார்கள்.
நாராயணனை திரும்ப அழைப்பதற்கு என்ன செய்யலாம் ? என்று சிவபெருமான் நினைத்த போது " இருள் கொண்ட காலமதால் ஏற்ற தர்மம் செல்லாது மருள் கொண்ட காலமதால் வம்புக்கு நேராகுமய்யா " எனவே சிவ பெருமானே நீவிர் பேய்கண அசுர மாலைகளை அணிந்து தாண்டவம் ஆடினால் மஹா விஷ்ணு வருவார் என்று நந்தீஸ்வரர் கூறினார் .அதன்படியே மகாவிஷ்ணு கைலாசம் வந்து சிவபெருமானை சேர்ந்தார் . கழுத்தில் சூடியிருந்த பேய்கண அசுர மாலைகளை வீசி எறியும் படி மஹா விஷ்ணு வேண்டினார். தீயில் போடப்பட்ட மாலைகள் பேய்களாக உருவெடுத்தன. பூமியில் கலியின் கொடுமையோடு பேயின் கொடுமைகளும் இணைந்து கொண்டன .

குழப்பமான சூழ்நிலையில் எந்தவித முடிவையும் எடுக்கக்கூடாது. அப்படிப்பட்ட நேரங்களில் முடிவுகளை தள்ளிபோடுவது சாலசிறந்தது. தவறான அவசர முடிவுகளை விட காலந்தாழ்ந்த நல்ல முடிவு நன்மை பயக்கும்.
தெரியாத விஷயத்தை தெரிந்தது போல் காட்டிக்கொள்ள கூடாது. ( எடுத்துக்காட்டாக மேலதிகாரிகளிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு பொய் சொன்னால் அது பின்னால் ஊழியர்களுக்கு தீய விளைவுகளையும் கெட்ட பெயரையும் களங்கத்தையும் , அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தும்)

காலம் கெட்டு கிடக்கிறது என்பதற்காக நாமும் சேர்ந்து கெட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது / கெட்ட எண்ணங்களில் திளைக்கக் கூடாது. நல்லதுக்கு காலமில்லை என்று அறிந்திருந்தாலும் நல்லது செய்வதிலிருந்து விலக கூடாது.

கலியின் மாயை நிறைந்த காலங்களில் மனதை ஒருமுக ப்படுத்தி தியானம் மேற்கொள்ளுவது நல்ல பலனளிக்கும். ( தவறுகளை நாம் எந்த மன நிலையில் , எந்த சூழ்நிலையில் யாருக்காக செய்தாலும் அதன் பலனாக வரும் தண்டனையை நாம் கட்டாயம் அனுபவித்தே ஆகவேண்டும்).

நமக்கு கீழான நிலையில் இருப்பவர்கள் சொல்வதை மட்டுமே மனதில் கொண்டு நாம் எந்த அவசர முடிவிற்கும் வரக்கூடாது. ( உதாரணமாக அலுவலகங்களில் மேலாளர் நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் கூலிகள் சொல்லும் கருத்துகளை ஆதாரமாக கொண்டு முக்கியமான தீர்வுகளை எட்டகூடாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் வேலை யை காப்பாற்றி கொள்வதற்காக கூட சில சமயங்களில் உண்மைக்கு புறம்பான விசயங்களை கூறலாம்).

அகிலதிரட்டை கற்றுக் கொள்வோம்.
அகிலக்கலி இருளை அகற்றுவோம்.
அய்யா வழியில் வாழுவோம் .

அய்யா உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக