எம்பிரான் ஆன இறையோன் அருள்புரிய
தம்பிரான் சொல்ல தமியேன் எழுதுகிறேன்
எழுதுவேன் என்பதெல்லாம் ஈசன் அருள்செயலால்
பழுதொன்றும் வராமல் பரமேசுவரி காக்க
ஈசன் மகனே இயல்பாவாய் இக்கதைக்கு
தோசம் அகல குழாமல் வல்வினைகள்
காலைக் கிரகம் கர்மசஞ்சலம் ஆனதுவும்
வாலைக் குருவே வராமலே காரும்
காரும் அடியேன் கவ்வை வினைதீர
காரும் அடியேன் மனதில் குடிகொளவே
தர்மயுகமாக்கி தாரணியை ஆளுதற்கு
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகாது இருக்கும் தர்மஅன்பு உள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்
வகுத்த பரமனுக்கும் மாதா பிதாவுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே..
விளக்க உரை:-
கடவுள் அடியேனுக்கு அருளிய கிருபையினால்அந்தக் கடவுளே எளியோனாகிய என்னிடம் சொல்வதை உணர்ந்து இயன்ற மட்டும் எழுதுகிறேன். வறியவனாகிய நான், எழுதுவேன் என்பதெல்லாம், அதை அருளும் இறைவன் இந்தச்சிறியோன் மேல் கொண்டுள்ள நம்பிகையே ஆகும். என் எழுத்தில் பிழையேதும் ஏற்பட்டால் லோகமாதாவாக இருந்து கொண்டிருக்கும் தயாபரகியானாகிய அய்யாவே காத்தருள வேண்டும்.
ஆதிப்பரப்பிரம்மாகிய அய்யாவிலிருந்து வெளிப்படும் நாதமும், அழகும் இந்தச் சரிதைக்கு இயல்பாக அமைய வேண்டும். கேடுகள் விலகவும், கொடிய வஞ்சனைகள் அகலவும், கால மாறுதல்களை ஏற்படச் செய்யும் கோள்கள், முன்பிறவி பிறாப்தத்தால் விளைவிக்கும் துன்பங்கள் தொலையும், சர்வசக்தி வாய்ந்த ஜெகத் குருவாகிய அய்யாவே ரட்சித்து அருள வேண்டும்.
என் மனதினுள் துன்பம் என்பதே அணுகாத நிலையில் எம் அகலத்தில் எல்லாமுமாகிய அய்யா நீவிர் குடி கொள்ள வேண்டும். இந்த உலகத்தைத்
தர்மச்சீமையாக்கி, அந்தத் தர்ம ராச்சியத்தை அரசுபாலிப்பதற்காக, இந்தப் பாவக்கலியுகத்தில் ஆதிமூலப் பரம்பொருளாகிய இறைவன், அய்யா வைகுண்ட பரம்பொருளாக வருகை தந்திருக்கும் வான்புகழும் வரலாற்றை, அழிவில்லா நிலை பொருந்திய தர்மவான்களான அன்பர்களின் முன்நிலையில், தக்க நெறிமுறைகளோடு இந்த அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஆகமத்தை அய்யாவே அருளுகிறார்.
இந்த ஆகமத்தை அருளி, எனக்குக் குருவாக இருந்து எழுத வைக்கும் அய்யா வைகுண்டப் பரம்பொருளையும் இப்பேறு பெற என்னை இவ்வுலகில் ஈன்றெடுத்த தாயையும், தந்தையையும் பணிவோடு வணங்குகிறேன்.
- அய்யா உண்டு -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக