நீடிய யுகத்தின் முடிவை தொடர்ந்து சதிர யுகம் என்ற இரண்டாம் யுகத்தை
வகுத்தார் சிவபெருமான்.அந்த இரண்டாம் யுகமதில் குறோணியின் ஆறு துண்டுகளில்
ஒரு துண்டை எடுத்து அதனை குண்டோமசாலி என்ற அசுரனாகவும் ,அத்துண்டுக்குரிய
உதிரத்தை எல்லாம் அவனுக்கு துணையாக அசுர குலமாக பிறவி செய்தார் ஈசன்.அந்த
குன்டோமசாலி என்ற அசுரன் குறோணியின் கெட்ட எண்ணங்களில் சிறிதும் மாறாதவனாக
இருந்தான்.அவனுடைய உயரம் நானூறாயிரம் முழங்களாகவும் ,முந்நூறு
கைகளையும்,முந்நூறு கால்களையும் கொண்டு யானையின் துதிக் கையை போன்ற தோலினை
கொண்டவனாகவும் இருந்தான்.
இறை சிந்தனையே இல்லாத அவன் எந்நேரமும் அட்டை போலவே சுருண்டு கிடந்தான்.வயிறு பசிக்கும் போதெல்லாம் தன்னுடன் படைக்கப்பட்ட அசுரர்களையே அள்ளி உட்கொண்டான்.அப்படியே அவன் இனமும் அழிந்து போனது.நீண்ட நாளாக உறங்கிய அசுரன் குண்டோமசாலி திடீரென விழித்து பசியால் துடிக்க உன்ன உணவில்லாமல் பெரும் சத்தத்தை எழுப்பினான். அதைகேட்டு அதிர்ந்த திருமால் சிவனிடம் உரைத்து கேட்கையிலே சிவன் ,சதிர யுகத்தில் படைக்கப்பட்டுள்ள குண்டோமசாலியனை பற்றிக் கூறினார்.அவனை அழிக்கும் காலம் நெருங்கியது என்றெண்ணி மாயவர் அவனை அழிக்க திட்டமிடுகிறார்.
அதன்பின் மேலோக தேவர்களை எல்லாம் இரைகளாக்கி ,மறையதனை கயிறாக்கி ,வாயுவை தோணியாக்கி,வருணனை நிரப்பாக்கி கடலை ஓடையாக்கி அதில் மூவரும் ஏறி தோணியை தள்ளினார்கள்.பின்னர் மாயவர் தூண்டிலை போட அதில் உள்ள தேவர்களை இரை என்று எண்ணிய குண்டோமசாலி இரையை உண்பதாக எண்ணி தூண்டிலை கவ்வி தன் உயிரை இழந்தான்.இத்துடன் இறைவன் படைத்த இரண்டாவது யுகமான சதிர யுகம் முடிவுக்கு வந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக