திங்கள், 24 நவம்பர், 2014

அய்யா உண்டு

ன்பர்களே இன்றும் அய்யா வழியை பற்றி சரியாக அறியாதவர்கள் கேட்கும் முதல் கேள்வி அய்யா வழி என்பது நாடார் மக்களின் வழியா? என்பதாகும் . என்னிடமும் பல நண்பர்கள் அய்யா வழியின் வரலாற்றை கேட்ட பின்பு இக்கேள்வியை கேட்டுள்ளனர்.
ஏன் இந்த கேள்வி வைகுண்டர் உலகில் சாணார் (நாடார்) குலத்தில் பிறந்தது அவர் தவறா? உலகில் ஜாதி முறையை வைத்தது மனிதன் செய்த தவறாகும்.உலகில் அதர்மம் அதிகமாகும் பொது இறைவன் அவதாரம் எடுக்கிறார் என்பது உலக மக்களின் நம்பிக்கை. அவ்வாறு அவதாரம் எடுக்கும் போது மனிதன் உருவாக்கிய ஏதேனும் ஒரு ஜாதிலேதான் பிறக்க முடியும்.
அந்தப்படியே அய்யா வைகுண்டரும் மிகவும் தாழ்ந்து கிடந்த சாணர் குலத்தில் பிறந்து அவர்களின் குறைதீர்த்தார். ஜாதி என்னும் கொடிய கலியில் சிக்கி பல்வேறு கொடுமைகளை அனுபவித்த மக்களை காக்க அதே தாழ்ந்த ஜாதியிலேயே இறைவன் வைகுண்டமாய் பிறந்தார். ஜாதியை அளிக்க பிறந்த வழி அய்யா வழியாகும்,அதனை ஜாதி வழி என்பது தவறான ஒரு கருத்து ஆகும். ஜாதிக்காக அய்யா வழி உருவாக்க பட்டிருந்தால் ஆரம்ப காலத்திலேயே பெரும் அழிவை கண்டிருக்க வேண்டும் .

"சாதி பதினெட்டும் தன்னால் கேடாகும் வரை
நீதி அழியாதே நீ சாபங்கூராதே"

"சாதி பதினெட்டும் தலையாட்டி பேய்களையும்
வாரிமலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு"

என்று விஞ்சையில் நாராயணர் கூறுகின்றார் இவ்வரியின் நோக்கம் ஜாதிகளை அளிப்பதாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இவ்வாறு கூறிய இறைவன் எப்படி ஜாதியை,ஜாதி வழியை தோற்றுவிப்பார்?
சத்திரியனாக வந்த ராமனையும்,இடையனாக வந்த கிருஷ்ணனையும்,பிராமணனாக வந்த வாமனனையும்,யூதராக வந்த இயேசுவையும் ஏற்று கொள்ளும் மனம் ஏன் சாணாராக வந்த வைகுண்டரை ஏற்க மறுக்கிறது?

அய்யாவழி சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.

அய்யா வழி தோன்றிய ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் நாடார்களே தாங்கல் வைத்து வணங்கினர். அனால் தற்போது அனைத்து ஜாதி மக்களும் அய்யாவை ஏற்று வணங்க தொடக்கிவிட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக