சான்றோர் திருமணம்*****
விருதில் பெரிய வீரத்தெய்வச் சான்றோர்கள்
நிருபதன் மக்களை நியமித்து மாலையிட
வீரியமாய் நல்ல விவாகமிட வாறார் எனப்
பூரியலில் சொல்லிப் பேர்கள் சிலர் ஊத
இப்படியே வாத்தியங்கள் இசைந்து இசைந்தே ஊதி
அப்படியே நிருபத அரசன் மகளிர்தமையும்
மாலையது இட்டு வாழவந்தார் அம்மானை
வாலை அதுவான மாகாளி வாழுகின்ற
மண்டபத்தில் வந்து மகிழ்ந்திருந்தார் அம்மானை

---------
உரை
---------
பெருமை பொருந்திய விருது பெற்ற பெரிய வீரத் தன்மையுள்ள தெய்வச் சான்றோர்கள், நிருபதனுடைய கன்னிப் பெண்களை முன்னரே நியமித்த நல்ல பொழுதில் திருமணம் செய்ய வருவதை அறிந்த பெண்வீட்டார் "சகல சம்மதத்தோடும் திருமணம் செய்ய மாப்பிள்ளை வருகிறார்கள்" என்று அரச வீதிகளில் சிலபேர் ஊதுகுழலால் ஊதித் தெரிவித்தனர்.
இப்படியாகப் பல வாத்தியங்கள் இனிமையாக இசைந்து ஊத, நிருபத ராசனின் பெண்கள் ஏழுபேரையும் சான்றோர்கள் ஏழுபேரும் திருமணம் முடித்தனர். தம்பதியர்கள் கன்னி மாகாளி வாழுகின்ற மண்டபத்தில் இன்பமுடன் வாழ்ந்து வந்தார்கள். இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.
---------------------
அய்யா உண்டு

*சான்றோர் திருமணம்*****
நல்ல முகூர்த்த நாள் பார்த்துச் சான்றோர்கள்
எல்லாச் சடங்கும் இயற்றுவித்தார் அம்மானை
சடங்கு முகித்துச் சான்றோரை ஒப்பமுடன்
தடம் கொண்ட மன்னவரைத் தண்டிகையின் மீதிருத்தி
அரசர் மிகச்சூழ அணி ஈட்டி ஆட்கள்வர
விரைவாகக் காளி விதைகலை ஏறிவர
அரம்பையர்கள் ஆடிவர அயிராவதன் வரவே
வரம் பெரிய தேவர் மலர்மாரி தூவிவர
ஆலத்தி ஏந்தி அணிஅணியாய்த் தான்வரவே
மூலத்தி கன்னி மோகினியாள் தன்னுடனே
பூதமது ஆடிப் பிடாரியது சூழ்ந்துவர
நாதம் இரட்டை ஊதி நடந்தார் மாப்பிள்ளை கொண்டு

நல்ல முகூர்த்த பொழுதைப் பார்த்து மணப்பெண் வீடு செல்ல எல்லாச் சடங்குகளும் செய்தனர். இவ்வாறு சகல சடங்குகளையும் முடித்து, பெருமை பொருந்திய மார்பையுடைய சான்றோர்களை அலங்கரித்துப் பல்லக்கு மீது இருத்தினர்.
பிறகு, அரசர்கள் எல்லாரும் சூழ்ந்து வர, ஈட்டிப் படைகள் கூடவே வர, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தமது வாகனத்தில் காளி விரைவுடன் ஏறி வர, அரம்பையர்கள் நடனமாடி வர, தேவேந்திரன் வர, அதிக வரம் பெற்ற தேவர்கள் எல்லாரும் மலர் மழை பொழிந்து வர, ஆலத்தி ஏந்திப் பெண்கள் அணி அணியாக வர, தன்னோடு பூதங்கள் ஆட, பிடாரிகள் சூழ, மூலத்திக் கன்னியாகிய மோகினிப் பெண்ணும் வர, இரட்டைநாதம் ஊதிய வண்ணம் மாப்பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தனர்.

தெண்டனிட்டு மன்னர் தேசாதி சூழ்ந்து நிற்க
பதினெட்டு வாத்தியமும் பட்டணம் எங்கும் முழங்க
ததி தோம் எனவே சில தம்புரு சாரங்கி கெம்ப
பந்தமது பிடித்துப் பலபூதம் சூழ்ந்து நிற்க
நந்த கோபாலர் நாராயணர் மகிழ்ந்து
மைந்தருக்கு இன்று மணம் உண்டு என்று சொல்லிச்
சீலமுடன் அனுப்பி ஸ்ரீரங்கமே இருந்தார்
தேவர்தேவர் புகழத் திசைவென்ற சான்றோர்க்கு
மூவர்களும் வந்து செய்தார் அம்மானை

எல்லாத் தேச மன்னர்களும் சான்றோர்களை வணங்கிச் சூழ்ந்து நின்றனர். பதினெட்டு வகை வாத்தியங்களும் பட்டணம் எங்கும் ஒலித்தன. தம்புருக்களும் யாழ்களும் 'த' 'தி' 'தோம்' என்று அதிர்ந்தன. பல பூதங்கள் பந்தங்களை ஏந்திச் சூழ்ந்து நின்றன.
இவற்றை அறிந்து, நந்தகோபாலரான திருமால் மகிழ்வுற்று "தமது குழந்தைகளுக்கு இன்றைக்குத் திருமணம்" என்று சொல்லிப் பல தேவர்கள் வைகுண்ட லோகத்தருமிகளையும், இன்னும் பலரையும் "வாருங்கள்" என்று வரவழைத்து, "எமது குழந்தைகளின் திருமணத்தைப் பார்க்கச் செல்லுங்கள்" என்று அவர்களை அனுப்பிவிட்டுத் தாம் ஸ்ரீரங்கத்திலேயே இருந்தார்.
தேவர்களும் இந்திரனும் புகழ, எல்லாத் திசைகளிலும் வெற்றி பெற்ற சான்றோர்க்கு மூதறிஞர்கள் எல்லாரும் வந்து எல்லா உதவிகளும் செய்தார்கள்.

வெடி பூவாணம் மிகுந்த கம்பச் சக்கரமும்
திடிமனுடன் மேளம் சேவித்தார் பந்தலுக்குள்
வாச்சியங்கள் இன்னது என்று வகை சொல்லக் கூடாது
நாச்சியார் மாகாளி நாயகியும் கொண்டாடி
பாலருக்கு ஏற்ற பணி எல்லாம் தாம் பூட்டி
சாலமுள்ள சிங்க முகத் தண்டிகையில் தாம்இருத்தி
பட்டணப் பிரவேசம் பகல்மூன்று இராமூன்று
இட்டமுடன் பூதம் எடுத்து மிகச்சுற்றி வந்து
மண்டபத்துள் வைத்து மாபூதம் சூழ்ந்து நிற்க

சான்றோரின் திருமணப் பந்தலுக்குள் வெடிகள், பூவாணம், கம்புச்சக்கரம் போன்றவையும் கொழுத்தப்பட்டன. திடிமனோடுகூடி மேளமும் ஒலித்தன. ஆக அப்பந்தலுக்குள் இருந்த பொருள்கள் எவை? எவை? என்று சொல்வது முடியாது. காளிதேவி மகிழ்ச்சி கொண்டாடி, சான்றோர்க்குத் தேவையான ஆபரணங்களை அணிவித்து, பலகணியுள்ள சிங்கமுகத் தண்டிகைகளில் அமர்த்தி, தண்டிகைகளைப் பூதங்கள் தூக்கி, மூன்று பகலும், மூன்று இரவும் பட்டணம் எல்லாம் மிகுந்த விருப்பத்தோடு பவனி சுற்றி வந்து மண்டபத்தினுள் வைத்து அவர்களைச் சூழ்ந்து நின்றன.

பகுத்துவமதாய் நல்ல பந்தல் விதானமிட்டார்
வயிரக்கால் நாட்டி வயிர வளைகள் இட்டு
உயரமுள்ள நல்ல தூண்கள் மிகநாட்டி
முத்துப்பதித்து முதுப்பவள வன்னி இட்டு
கொத்துச் சரப்பணியைக் கோர் மாலையாய்த் தூக்கி
மேற்கட்டுக் கட்டி மேடை பொன்னாலே இட்டு
காற்கட்டுப் பூட்டிக் கனமாய் அலங்கரித்து
வாழை கரும்பு வகைவகையாய் நாட்டிமிக
நாளை மணம் என்று நாட்டுக்குப் பாக்கு வைத்து

பிறகு நல்ல அழகான பந்தல் அமைத்தனர். அப்பந்தலுக்கு வயிரத்தாலான கால்களை நாட்டி, வயிரத்தாலான வளைகளை இட்டு, உயரமுள்ள நல்ல தூண்களை நாட்டி, முத்துப் பதித்து, அழகு பொருந்திய பவளத்தால் பிரகாசமடையச் செய்து, கொத்துச் சரப்பணி ஆபரணங்களைப் பந்தலில் கோத்த மாலையாய்த் தூக்கி மேல்கட்டுக் கட்டி, மேடையைப் பொன்னால் அலங்கரித்து, அதன் கால்களையும் அலங்காரக் கட்டுக் கட்டிப் பந்தல்களில் ஆங்காங்கே கரும்பு, வாழைப்போன்ற அலங்கார மரங்களை நாட்டி, நாளைக்குத் திருமணம் என்று எல்லா நாடுகளுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு அனுப்பினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக