மாயன் எங்கே? ஆய்வுக் கூட்டம்*****
அப்போது தேவர்களும் ஆன மறை வேதியரும்
எப்போதும் இறவாது இருக்கும் முனிவர்களும்
நல்லதுதான் என்று நாடி அகம் மகிழ்ந்து
வல்ல பிறவி வகுக்க எனத் துணிந்தார்
பிறவி வகுக்க என்று பெரியோன் அகம் மகிழ்ந்து
திறவி முதலோன் தெளிந்திருக்கும் வேளையிலே

---------
உரை
---------
தேவர்களும் வேதமோதும் அந்தணர்களும், எப்போதும் இறவாதிருக்கும் முனிவர்களும், ஈசுரர் கூறிய கருத்து மிகவும் சரியானதும், நன்மையானதும் ஆகும் என மகிழ்ந்து மிகவும் வன்மையான கலியனைப் பிறவி செய்யச் சம்மதம் தெரிவித்தார். உடனே, கலியனைப் பிறவி செய்ய வேண்டும் என்று திறவி முதலோனாகிய ஈசுரர் மனம் மகிழ்ச்சியுற்று தெளிவடைந்தார்.
---------------------
அய்யா உண்டு

மேலும் மால் ஆறு முடித்த யுகங்களிலும்
நாலு முழம் ஒன்று தலைதானல்லோ அசுரர்களைக்
கொன்றதுதான் அவ்வசுரர் கூறுதற்குச் சொல்லும் உண்டோ
இன்னம் இந்த மாயன் எடுத்த உருப்போலே
படைத்து நாம் வைத்தால் பகரும் மொழி வேறு இல்லையே
நடத்துவது ஏது எனவே நவிலும் என்றார் தேவர்களை

மேலும், திருமால் அழித்து முடித்த ஆறு யுகங்களிலும், அவரது உயரம் நாலு முழங்களும், தலை ஒன்றாகவும் பிறந்துதானே அசுரர்களைக் கொன்றார், அந்த அசுரர்கள் மாயன்மேல் தவறான மொழி கூறுவதற்கு எந்தவிதப் பழிச் சொல்லும் கிடையாது அல்லவா? இனி அந்த மாயன் பிறப்பெடுத்த உருவத்தைப் போல ஆறாவது துண்டத்தைப் பிறவி செய்தால், அவ்வசுரன் பழி சொல்லுவதற்கு வேறு வழி இல்லாமலாகி விடும். இதைத்தவிர வேறு எப்படிப் பிறவி செய்ய வேண்டும்? ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் நீங்கள் கூறுங்கள்" என்றார்.
---------------------
அய்யா உண்டு
-------------------

முன்னே பிறந்த முண்டாசுரன் தன்னுயிரைத்
தன்னோடு ஆறுபிறவிதான் செய்தோம் அசுரர் என
ஆறு பிறவியிலும் அசுரர் எனவே பிறந்து
வீறுடனே நம்மை விரும்பவும் நாம் கண்டிலமே
இப்போது அவன் தனக்கு ஏழாம் பிறவி இது
அப்போதும் நம்மை அவன் நினையாதே இருந்தால்
இல்லை இனி மேல்பிறவி இறப்பு முடிவு ஆகுமல்லோ
நல்ல பிறவியதாய் நமைத் துதிக்கப் புத்தியதும்
அழகு சௌந்தரியம் அலங்கார மெய்யறிவும்
குழகு மிகப்புத்திக் கூர்மை அலங்காரமுடன்

முதல் யுகத்தில் பிறந்த குறோணியின் உயிரை (உடலை) முன் பிறவியோடு சேர்த்து ஆறு தடவை அசுரராகப் பிறவி செய்தோம். ஆறு பிறவியிலும் அசுரனாகவே பிறந்தான். ஆனால் ஆணவத்தினால் நம்மை விரும்பி ஏற்றுக் கொள்ளும் முறையை அவன் அறியவில்லை.
இப்போது அவனுக்கு இஃது ஏழாவது பிறவியாகும். இந்த ஏழாம் பிறவியில்கூட அவன் நம்மை நினையாது இருந்தால் இனி அவனுக்குப் பிறவி என்பது இல்லையே? இறப்பு அல்லவா முடிந்த முடிவு? எனவே, நல்ல பிறவியாய்ப் படைத்து நம்மைத் துதிப்பதற்கு நல்ல புத்தியும், அழகும் அலங்காரமும், உண்மை அறிவும், இனிமை மிகுந்த புத்திக் கூர்மையும், உள்ளவனாகப் படைக்க வேண்டும்.

இங்கு உண்டோ மாலும் எங்கு இருப்பது உண்டு எனவே
எல்லோரும் கூடி இதமித்துச் சொல்லும் என்றார்
எல்லோரும் கேட்க அரன் சொன்னார் அம்மானை
வேழொத்த தேவரெல்லாம் மேகவண்ணர் இங்கே இல்லை
கீழுலகில் மாண்டு கிடக்கிறார் மேல் பிறக்க
ஒன்பதாம் பிறவி ஒடுங்கி அவர் பிறக்க
இன்பமறக் கீழுலகில் இறந்து கிடக்கிறார் எனவே
எல்லோரும் சொல்ல ஈசுரரும் நல்லது என்று
எல்லோரும் கேட்க அவர் ஏது பின் சொல்வார்

அச்சங்கக் கூட்டத்தின் மத்தியிலிருந்து, எல்லாருக்கும் கேட்கும்படியாக "சங்கக் கூட்டத்தினரே, திருமால் வைகுண்டத்தில் இருக்கிறாரா? அப்படி இல்லையெனில் அவர் எங்கு இருக்கிறார்? எல்லாரும் இனிமையாகக்கூடி ஆய்ந்து சொல்லுங்கள்" என்று கேட்டார்.
வேழொத்த தேவர் முதலிய எல்லாரும் "மேகவண்ணரான திருமால் வைகுண்டத்தில் இலர். கீழுலகில் மாண்டு கிடக்கிறார். ஒன்பதாம் அவதாரம் எடுத்து இன்பத்தை எல்லாம் துறந்து ஒடுங்கிக் கீழுலகில் இறந்து கிடக்கிறார்" என்று சொன்னார்கள். இதைக் கேட்ட ஈசர் "இப்படிக் கூறுவதும் நல்லதுதான்" என்று மகிழ்ந்து பிறகு எல்லாருக்கும் கேட்கும்படி மீண்டும் கூறலானார்.

தேவமுனி சொல்லச் சிவனார் அகம் மகிழ்ந்து
கோவுகத்தில் உள்ள குருவசிஷ்டர் தங்களையும்
தெய்வலோகத்தில் உள்ள தேவரையும்தாம் வருத்தி
வைந்தலோகத்தில் உள்ள வாய்த்த தர்மி தங்களையும்
கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரையும் வருத்தி
இணையாக மேலோகத்து எல்லோரையும் வருத்தி
சத்தி மறையும் சாத்திரத்தையும் வருத்தி
அத்தி முகவனையும் ஆணவக் கும்பனையும்
சங்கமதையும் வருத்தி தாம் கேட்பார் ஈசுரரும்

தேவமுனி கூறியதைக் கேட்ட ஈசர் மனம் மகிழ்ந்து, கோவுகத்திலுள்ள வசிஷ்ட குருவையும், தெய்வ லோகத்திலுள்ள தேவர்களையும், வைகுண்ட லோகத்திலுள்ள தருமிகளையும், கிணநாதர், கிம்புருடர், கிங்கிலியர்களையும், சக்தி, வேதங்கள், சாத்திரங்கள் இவற்றையும், அத்திமுகவனையும், ஆணவக் கும்பனையும் வரவழைத்தார். சங்கத்தைக் கூட்டினார்.
---------------------
---------
தேவமுனி கூறியதைக் கேட்ட ஈசர் மனம் மகிழ்ந்து, கோவுகத்திலுள்ள வசிஷ்ட குருவையும், தெய்வ லோகத்திலுள்ள தேவர்களையும், வைகுண்ட லோகத்திலுள்ள தருமிகளையும், கிணநாதர், கிம்புருடர், கிங்கிலியர்களையும், சக்தி, வேதங்கள், சாத்திரங்கள் இவற்றையும், அத்திமுகவனையும், ஆணவக் கும்பனையும் வரவழைத்தார். சங்கத்தைக் கூட்டினார்.
---------------------
மாயன் எங்கே? ஆய்வுக் கூட்டம்*****
நல்லதுதான் என்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே மாமுனியே மாயன் வர வேண்டாமோ
என்று நல்ல ஈசர் இயம்ப முனி ஏது சொல்வான்
நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டு ஓராம் பிறவி
பிறக்கத் தவசு புரியப் போய்க் கீழ் உலகில்
உறக்க மெய்ஞ்ஞான ஒளியில் இருக்கிறார் எனவே

ஈசரும், அப்படியே பிறவி செய்ய விரும்பி "வல்லவனே, மாமுனியே, நல்லதுதான், ஆனால் மாயன் வரவேண்டாமா?" என்று வினவினார்.
அதற்குத் தேவமுனி, "ஈசரே, மாயவர் தாம் ஒன்பதாம் பிறவி பிறப்பதற்காகத் தவம் புரியக் கீழுலகு சென்று மெய்ஞ்ஞான ஒளியுறக்கத்தில் இருக்கிறார்" என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக