ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

சான்றோர் திருமணம்*****
நல்லது இது மாமுனியே நன்முகூர்த்தம் பார்த்துரை நீ
உடனே முனியும் உகந்த முகூர்த்தம் என்று 
திடமே நிருபனுக்குச் செய்தி சொல்ல ஆளேவி
நாளை முகூர்த்தம் என்று நாற்றிசையும் தான்அறிய
கோழை இல்லா மன்னர் குல தெய்வச் சான்றோர்க்கு
முகூர்த்தம் என்று சாற்றி மூவுலகும்தாம் அறிய
---------
உரை
---------
காளிதேவி மீண்டும் நாரதரிடம், "நாரதனே, இப்பொருத்தம் மிகவும் நல்லதுதான். நல்ல முகூர்த்த நாளைப் பார்த்துக்கூறு" என்று கூறினாள்.
நாரதர் நிருபதனிடம் நிச்சயித்த நாளைக் குறிப்பிட, காளியும் சம்மதித்தாள். அந்த நாளை நிருபதனிடம் தெரிவித்து, அந்தப் பொழுதிலுள்ள முகூர்த்தம் பற்றி எல்லாத் திசைகளுக்கும் செய்தியைத் தெரிவித்தனர். கோழைத்தனம் இல்லாத சான்றோர்களுக்குரிய திருமண நாளை மூவுலகும் அறியச் செய்தனர்.
---------------------
அய்யா உண்டு 




சான்றோர் திருமணம்*****
வேதா தெளிந்து விரித்து உரைப்பார் அப்போது
சூதானமான தோகை ஏழுபேரும் 
பூலோக மன்னருக்குப் பிரியமுற்று மையல் கொண்டு
கால் ஓயுது என்று கௌவையுற்றது அல்லாது
வேறு இல்லை என்று வேதா இது உரைக்க
தேறியே வாசவர்கோன் தேவி ஏழுபேர்களையும்
அப்படியே பூவுலகில் அமையும் என்றார் வேதாவை
இப்படியேதான் வந்து இவர் பிறந்தார் என்று முனி
சொல்ல சிவகாளி சிரித்து மனம் மகிழ்ந்து
---------
உரை
---------
பிரம்மா இந்திரனிடம் விவரித்து உரைக்கலானார், "இந்திரனே, வேறு நினைவால் கற்பு நிலை அழிந்த அப்பெண்கள் ஏழுபேரும் பூலோக மன்னர்கள்மேல் ஆசை கொண்டு நடக்கப் பலமில்லை என்று குற்றவுணர்வு கொண்டது அல்லாது வேறு ஒன்றுமில்லை" என்று விளக்கமாக விவரித்தார்.
உண்மை அறிந்த இந்திரன் மனந்தேறிப் பிரம்மாவிடம் "அத்தேவியர் ஏழுபேரையும் அவர்கள் விருப்பப்படியே பூலோகத்தில் பிறவி செய்யும்" என்றார். அவர்கள் பூலோகப் பிறவி எடுத்தனர்.
அவர்களே இந்த ஏழு கன்னிப் பெண்களும் ஆவர் என்று நாரதர் விளக்கமாக முன் பிறவி பற்றி விவரித்தார்.
இதைக் கேட்ட காளி மிகுந்த மகிழ்ச்சியுற்றுச் சிரித்தாள்.
---------------------
அய்யா உண்டு 



சான்றோர் திருமணம்*****
ஆவடுக்கம் கொண்டு அவர்கள் ஒருப்போலே
காச்சல் குளிர் எனவே கௌவையுற்றுத் தாம்இருக்க 
மாச்சல்தனை அறிந்தான் மகவானும் அப்போது
ஆனதால் வேதாவின் அண்டை அவன் அணுகி
தீனம் வந்தது ஏது எனவே தேவியர்க்கு வேதாவே
---------
உரை
---------
மன்னர்கள் நினைவையே கொண்டு, எல்லாரும் சேர்ந்து 'காய்ச்சலும் குளிருமாக இருக்கிறது' என்று பொய்க்காரணம் கூறிக் குற்ற உணர்வோடு இருந்தனர். அவர்கள் சோம்பல் தன்மையை அறிந்தும், அசோம்பலுக்குக் காரணம் புரியாததால் இந்திரன் பிரம்மாவை அணுகி, "கன்னிகளுக்கு இந்த நோய் வந்த காரணம் என்ன?" என்று கேட்டான்.
---------------------
அய்யா உண்டு
---------------------


சான்றோர் திருமணம்*****
மாலையிலும் காலையிலும் வாசவர்கோன் தனக்குப்
பூவெடுத்து இட்டு பூசை புனக்காரம் இட்டு
கோவெடுத்த ராசனுக்குக் குஞ்சமிட ஆடி நிதம்
ஏவல் புரிகின்ற ராச தெய்வக் கன்னியர்
நாவுலகு மெய்க்க நடந்துவரும் நாளையிலே
பூவுலகு மன்னர்களைப் பூத்தானமாக எண்ணிப்
பாவினிய கன்னி பஞ்சமது வேறாகிப்
பூவெடுக்கக் கன்னி போகாமல் வாட்டமதாய்
---------
உரை
---------
இந்தத் தெய்வக் கன்னியர் காலையிலும் மாலையிலும் இந்திரனுக்குப் பூக்களைப் பறித்து அவன் பாதங்களில் இட்டுப் பூஜை புனக்காரம் செய்வர். இரவில் வச்சிராயுதத்தையுடைய தெய்வேந்திரன் தூங்கும்வரை அவன் முன்பாக நடனம் ஆடுவர். இவ்வாறு அடுத்த லோகமெல்லாம் அதிசயிக்கும் வகையில் இவர்கள் வேலை செய்து வந்தனர்.
அச்சமயம், ஒரு தடவை இவர்கள் பூலோக மன்னர்களைக் காண நேர்ந்தது, அவர்கள் அழகை இப்பெண்கள் பெரிதாக எண்ணினர்
---------------------
அய்யா உண்டு 



சான்றோர் திருமணம்*****
மாலையிலும் காலையிலும் வாசவர்கோன் தனக்குப்
பூவெடுத்து இட்டு பூசை புனக்காரம் இட்டு 
கோவெடுத்த ராசனுக்குக் குஞ்சமிட ஆடி நிதம்
ஏவல் புரிகின்ற ராச தெய்வக் கன்னியர்
நாவுலகு மெய்க்க நடந்துவரும் நாளையிலே
பூவுலகு மன்னர்களைப் பூத்தானமாக எண்ணிப்
பாவினிய கன்னி பஞ்சமது வேறாகிப்
பூவெடுக்கக் கன்னி போகாமல் வாட்டமதாய்
---------
உரை
---------
இந்தத் தெய்வக் கன்னியர் காலையிலும் மாலையிலும் இந்திரனுக்குப் பூக்களைப் பறித்து அவன் பாதங்களில் இட்டுப் பூஜை புனக்காரம் செய்வர். இரவில் வச்சிராயுதத்தையுடைய தெய்வேந்திரன் தூங்கும்வரை அவன் முன்பாக நடனம் ஆடுவர். இவ்வாறு அடுத்த லோகமெல்லாம் அதிசயிக்கும் வகையில் இவர்கள் வேலை செய்து வந்தனர்.
அச்சமயம், ஒரு தடவை இவர்கள் பூலோக மன்னர்களைக் காண நேர்ந்தது, அவர்கள் அழகை இப்பெண்கள் பெரிதாக எண்ணினர்
---------------------
அய்யா உண்டு 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக