ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

 கலியுகம் (கலியன் பிறப்பு)*****'
துண்டம் அது பிண்டமதைத் துளைத்துக் கால் மேல்நீட்டி 
மண்டைகீழ் கால்மேலாய் வந்து உதித்தான் அம்மானை 
எல்லோரும் கண்டு இது கனமாயம் எனவே
எல்லோரும் வந்து ஆதியோடே உரைத்தார்
உடனே சிவனும் உள்ளம் மிகக்களித்து
இடமேதான் பெயர்ந்து எழுந்தருளி ஈசுரரும் 

அதிசயத்தைப் பார்ப்போம் என்று அவர் இளகும் வேளையிலே


உரை
---------
அச்சமயத்தில், குறோணியின் ஆறாவது துண்டம் பூவுலகப் பிண்டத்தைத் துளைத்துக் காலை மேல் நீட்டிய நிலையிலும் மண்டைப்பகுதி கீழாக இருக்கும் நிலையிலும் வந்து உதித்தது. இதைக் கண்டு எல்லாரும் "இது பெரிய அதிசய மாயம்" என்று கூறி, அவர்கள் ஈசுரரிடம் வந்து அவ்வதிசயத்தைப் பற்றிக் கூறினர். உடனே ஈசுரர் மனம் மகிழ்ச்சியுற்று, தாம் இருந்த இடத்தைவிட்டு எழும்பி அந்த அதிசயத்தைக் காண ஆவல் கொண்டு அவர் புறப்பட்டார்.
---------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக