பத்தரை மாற்றுப் பைம்பொன் வியாபாரமுடன்
மாணிக்க வியாபாரம் வயிர வியாபாரமுடன்
ஆணிப்பொன் வியாபாரம் அழகுக்கச்சை வியாபாரம்
கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம்
ஒப்பமுள்ள வியாபாரம் ஓக்க மிகச்செய்தனராம்
தாலமது ஏறித் தைரியப்பால் வாங்கி
மேலுள்ள சான்றோர் மிகுதியாய் வாழ்ந்திருந்தார்
நெய்த்தொழிலும் விற்தொழிலும் நெருடுவிதத் தொழிலும்
மெய்தொழில்கள் கற்று மேலோர் என வளர்ந்தார்.

---------
உரை
---------
அத்துடன் சுத்தமான தங்க வியாபாரமும், மாணிக்க வியாபாரமும், வயிர வியாபாரமும், ஆணிப்பொன் வியாபாரமும், அழகுக்கச்சை வியாபாரமும், கப்பல் வியாபாரமும், கறிமிளகு வியாபாரமும், அலங்காரப் பொருட்கள் வியாபாரமும் சேர்த்துச் செய்து வந்தனர்.
பனை மரத்தில் ஏறித் தைரியம் தருகின்ற பதனீர்பால் எடுத்து உண்டு உயர்வான சான்றோர் இனிமையாக வாழ்ந்தனர்.
துணி நெய்கின்ற வித்தையும், வில் வித்தையும், பொன் ஆபரணங்கள் செய்யும் வித்தையும், இன்னும் பல உடலால் செய்யும் அதிக வித்தைகளும் கற்றுச் சகலகலா வல்லவர்களாக "மேலோர்" எனப் புகழும்படி வளர்ந்தனர்.
---------------------

சான்றோர்க்குப் பாலர் பிறப்பும், வாழ்வும்*****
மெய்த்துப் புவி கொண்டாட மெல்லியர் தங்களுக்கு
வயிற்றில் கர்ப்பமாகி மதலை பெற்றார் அம்மானை
நெய்த்தெளிய கன்னி நேரிழைமார் எல்லோரும்
இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக
அப்படியே மதலைபெற்று அகம் மகிழ்ந்தார் அம்மானை
பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர
சீலமுள்ள வித்தை சிறக்க அவர் வருத்தி
எமது இறைவராக எங்கும் புகழ்ந்திடவே
சமர்த்தர் எனவே தலை எடுத்தார் அம்மானை
முத்து வியாபாரம் முதல்வியாபாரம் முதல்

இப்படி வாழ்ந்து வரும்போது, நாட்டு மக்கள் ஆச்சரியப்படும்படியாகச் சான்றோரின் மனைவியர் கர்ப்பமுற்றுக் குழந்தைகள் பெற்றுத் தாயும் சேயுமாக எல்லாரும் காளிதேவியுடன் மகிழ்ந்திருந்தனர்.
சான்றோர்க்குப் பிறந்த குழந்தைகள் நன்றாக வளர்ந்ததும், உயர்வான வித்தைகளை அவர்களுக்குக் கற்பித்து, மக்கள் எல்லாரும் "எமது அரசன்" என்று கூறிப் புகழும்வண்ணம், புகழ் எங்கும் பரந்திடச் சகலகலா வல்லவர்களாக வாழ்ந்து வந்தனர். சான்றோர்கள் முத்து வியாபாரத்தை முக்கிய வியாபாரமாக வைத்துக் கொண்டனர்.
---------------------
அய்யா உண்டு

தண்டமிழ்சேர் கன்னி சான்றோர்கள் ஆனோர்க்குக்
கோட்டையும் இட்டுக் குமாரரையும் பெண்களையும்
தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமாய் மாளிகையும்
வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள்

குளுமையும் இனிமையும் பொருந்திய காளிதேவி சான்றோர்களுக்குக் கோட்டைகளும், தனித்தனியாக மாளிகைகளும் கட்டிக் கொடுத்து அவள் வளர்த்த குமாரர்களையும் அவர்கள் மனைவியரையும் மேன்மை பொருந்தி வாழ்வதற்கு வழி செய்து கொடுத்தாள்.
---------------------
அய்யா உண்டு
உரை
---------
குளுமையும் இனிமையும் பொருந்திய காளிதேவி சான்றோர்களுக்குக் கோட்டைகளும், தனித்தனியாக மாளிகைகளும் கட்டிக் கொடுத்து அவள் வளர்த்த குமாரர்களையும் அவர்கள் மனைவியரையும் மேன்மை பொருந்தி வாழ்வதற்கு வழி செய்து கொடுத்தாள்.
---------------------
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக