*தக்கனை அழித்தல்*****
மிக்க நல்ல பிள்ளைகள் வீரர் என ஆகுகையில்
தக்கன் என்னும் சூரன்தன் பேரில் மாகாளி
படைக்கு எழுந்தருளிப் பாலரையும் தாம் கூட்டி
நடைக்கு அதிகமுள்ள நாயகியும் பாலருக்கு
போர்க்கோலம் இட்டுப் புட்டாபுரம் கடந்து
ஆர்க்கமுள்ள காளி அலகைப் படையுடனே
சான்றோரை விட்டுத் தக்கனையும் தான்வதைத்து
மூன்றோரை நெஞ்சில் வைத்து ஓங்கார மாகாளி
தக்கனையும் கொன்று சான்றோர் அவர்தமக்கு
மிக்க வரிசை மிகக்கொடுத்து மாகாளி
புட்டாபுரத்தில் பேய்க்கணங்கள் சூழ்ந்து நிற்க
கட்டான காளி கமலத்தில் வீற்றிருந்தாள்

---------
உரை
---------
இவ்வாறு சான்றோர்கள் நல்ல வீரர்களானபொழுது, தக்கன் என்னும் சூரனைப் போர்செய்து அழிக்கப் படைகளாகச் சான்றோரை அழைத்து, தனக்கும், அவர்களுக்கும் போர்க் கோலமிட்டாள். அதிக விரைவாய்ச் செயல்களைப் புரியும் காளி நாயகி மிகவும் சக்தி வாய்ந்த பேய்ப் படைகளுடன் சான்றோரையும் இணைத்துத் தக்கன் படைகள் முழுவதையும் அழித்தாள்.
பிறகு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் நினைத்தவாறு ஓங்காரமாய் நிற்கும் காளி தக்கனைக் கொன்றாள்.
தனக்கு உதவி செய்த சான்றோருக்கு உயர்வான பட்டங்கள் கொடுத்து, பேய்க்கணங்கள் எல்லாம் தன்னைச் சூழ்ந்து காவல் புரிய, புட்டாபுரத்தில் தாமரை போன்ற பீடத்தில் காளிதேவி அமர்ந்து மிகவும் திடமாக ஆட்சி புரிந்து வந்தாள்.
---------------------
அய்யா உண்டு

சான்றோர் பெருமை*****
சீரங்க மாபதியில் சென்றிருக்கும் அப்போது
சாரங்கர் பெற்ற சான்றோர்களின் பெருமை
சொல்லுகிறார் எங்கள் திருமாள்காண் அம்மானை
நல்லதுதான் என்று நாடித் திரு கேட்க
அன்பான சான்றோர்களின் மாகாளி அம்மை
தன்பாலர் போலே தான்வளர்ந்து வித்தைகளும்
வருத்திக் கொடுத்து மன்னர் மன்னர் தாமாக்கி
கருத்திலுறக் காளி கண்ணான மக்களுக்கு
வேண்டும் பணி எல்லாம் விதம்விதமாய்த் தான்எடுத்து
பூண்டு அந்த மக்களையும் பூத்தானமாய் வளர்த்தாள்

இவ்வாறு, திருமால் ஸ்ரீரங்கத்தில் சிறப்பாக இருந்தபொழுது, அவருடைய குழந்தைகளின் சிறப்புகளைப் பற்றி இனி எங்கள் திருமால் இலட்சுமியிடம் கூறுகிறார். "கூறுங்கள், நல்லதுதான்" என்று இலட்சுமியும் விருப்பமுடன் கேட்கிறாள்.
இங்கே காளியம்மை சான்றோர்களைத் தனது குழந்தைகளைப்போல வளர்த்து, வித்தைகள் பல கற்றுக் கொடுத்து, மன்னருக்கும் மன்னராகும் தகுதியுள்ளவர் ஆக்கினாள், எப்பொழுதும் கருத்தாக அவர்களுடனே இருந்து கண்போன்ற அருமை மக்களுக்கு விதவிதமான எல்லாப் பணிவிடைகளும் செய்து, பாதுகாத்துப் பெருமைபப்டத் தக்க வகையில் அவர்களை வளர்த்தாள்.

ஸ்ரீ ரங்கத்தின் வளமை*****
மாரியது மூன்று வரிசைக்கத் தாம் பொழிந்து
எரிபெருகி ஏற்ற செந்நெல் தான்விளைந்து
படிஒன்று கோட்டை ஒன்றாய்ப் பழுத்துவரும் செந்நெல்லது
கரும்பு முத்தீனும் கசுவும் கரைபுரளும்
அரும்பு வனமும் அலர்ந்து மிகப்பெருகும்
கோவும் ஸ்ரீரங்கா எனக் கூப்பிடும்காண் அச்சுதரை
மாவும் ஸ்ரீரங்கா என வந்து அழைக்கும் அச்சுதரை
மயில் குயில் மான்கலையும் வாய்த்த அணில் பட்சிகளும்
ஒயிலாக அச்சுதரை உள்ளாக்கி ஆடிவரும்
அவ்வூரில் உள்ள அந்தணர்கள் எல்லோரும்
கவ்வை வேறு இல்லாமல் கரியமால் தமக்குப்
பூசை முறை வைத்துப் பிராமணர்கள் செய்துவர
ஆசையுடன் அச்சுதரும் அங்கே இனிதிருந்தார்

ஸ்ரீரங்கத்தில் மாதம் மூன்று முறை மழை ஒழுங்காகப் பெய்து, ஏரி பெருகி, ஒருபடி நெல்லில் ஒரு கோட்டை நெல் அளவு செந்நெல் பழுத்து விளைந்து பெருகும்.
கரும்பு முத்து ஈனும்; குளங்களில் நீர் கரைபுரண்டு ஓடும்; நன்றாக வளர்ச்சியடைந்த வனமும், அங்கு மகிழ்வுடன் பெருகிவரும் பசுக்களும், "ஸ்ரீ ரங்கா" என்று அச்சுதரைக் கூப்பிடுமாம்; ஏனைய மிருகங்களும் வந்து அச்சுதரை "ஸ்ரீரங்கா" என்று அழைக்குமாம்.
மயில்கள், குயில்கள், கலைமான்கள், அணில்கள், பறவைகள் எல்லாம் ஒய்யாரமாக நின்று அச்சுதரை மனதில் நினைந்து ஆடிவரும்; அந்த ஊரிலுள்ள அந்தணர்கள் எந்தவிதமான பழி எண்ணமும் இல்லாமல் கரிய திருமாலுக்குப் பூஜைகளை விதி முறைகளுடன் செய்து வந்தனர். எனவே, மிகுந்த ஆசையுடன் அச்சுதரும் அங்கே இனிமையாக வாழ்ந்து வந்தார்.

திருமால் ஸ்ரீரங்கம் அடைதல்*****
சாரங்கர், சீரங்கம் தாம்வந்தார் என்று சொல்லிச்
சீரங்கம் எல்லாம் செழித்து மிகவாழ்ந்து
பாரெங்கும் பேச்சுப் பரந்ததுகாண் அம்மானை
அப்படியே அச்சுதரும் அப்பதியில் இருக்க
எப்படியும் சீரங்கம் இனித் தழைக்கும் என்றுமிக
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடி
தேவரும் கொண்டாடிச் சிந்தை களித்தே இருந்தார்
சீரங்கமான திருப்பதியின் வளமை
சாரங்கராயர் தாம் உரைத்தார் அம்மானை

திருமால் ஸ்ரீரங்கம் வந்தார் என்று அறிந்து ஸ்ரீரங்கம் முழுவதும் செழித்து ஓங்கியது. இப்புகழ்ச் செய்தி தேசம் எல்லாம் பரந்தது. இப்படியாகத் திருமால் ஸ்ரீரங்கத்தில் இருக்க, "எப்படியும் இனி இத்தேசம் நன்றாகச் செழிக்கும்" என்று மூதறிஞர்கள் முதலாய்த் தேவர்கள்வரையும் மனம் மகிழ்ந்திருந்தனர்.
ஸ்ரீரங்கமான நல்ல அப்பதியின் இயற்கை வளம் பற்றி இனி இலட்சுமிதேவியிடம் திருமால் உரைக்கிறார்; கேட்பீராக,
---------------------
அய்யா உண்டு
உரை
---------
திருமால் ஸ்ரீரங்கம் வந்தார் என்று அறிந்து ஸ்ரீரங்கம் முழுவதும் செழித்து ஓங்கியது. இப்புகழ்ச் செய்தி தேசம் எல்லாம் பரந்தது. இப்படியாகத் திருமால் ஸ்ரீரங்கத்தில் இருக்க, "எப்படியும் இனி இத்தேசம் நன்றாகச் செழிக்கும்" என்று மூதறிஞர்கள் முதலாய்த் தேவர்கள்வரையும் மனம் மகிழ்ந்திருந்தனர்.
ஸ்ரீரங்கமான நல்ல அப்பதியின் இயற்கை வளம் பற்றி இனி இலட்சுமிதேவியிடம் திருமால் உரைக்கிறார்; கேட்பீராக,
---------------------
அய்யா உண்டு
திருமால் ஸ்ரீரங்கம் அடைதல்*****
வல்ல பெலமுள்ள மாடுதனில் ஏறியையும்
வேதாவையும் நல்ல நெற்றி விழியுடையாள் தனையும்
மாதாவுமான வாய்த்த சரசோதியையும்
தேவர்முதல் வானவரை சிட்டர் முனிவோர்களையும்
மூவர்களையும் கயிலை ஊரே போம் என்றனுப்பி
காளிதனைப் பிள்ளைகளைக் கருத்தாய் வளர்த்திடு என்று
ஆழி அடைத்த அச்சுதரும் தாம்நடந்து
சீரங்க மாபதியில் சென்றிருந்தார் அம்மானை

பின்பு திருமால் "அதிக சக்தி வாய்ந்த காளை வாகனத்தில் இருக்கும் ஈசரையும், பிரம்மாவையும், தனது நெற்றியில் கண்ணுடைய சிவனின் மனைவியாகிய பார்வதியையும், கல்வித் தாயான சரசுவதியையும், தேவர்முதல் வானோர்வரையும், முனிவர்களையும், மூதறிஞர்களையும் கயிலைக்குச் செல்லுங்கள்" என்று கூறி வழி அனுப்பினார். பிறகு, காளியை நோக்கி "என் பிள்ளைகளைக் கவனமாக வளர்த்திடுவாயாக" என்று கூறி விட்டுக் கடலை அடைத்துக் காக்கும் திருமால் மெதுவாக நடந்து ஸ்ரீரங்கம் சென்றடைந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக