ஞாயிறு, 8 மார்ச், 2020

ஆறுமுக‌ கடவுளுக்கு அய்யா சொன்ன அறிவுரைகள்

1008 மாசி மாதம் 20-ஆம் தேதி திருச்செந்தூர் கடலில் அவதாரித்த நம் அய்யா வைகுண்டரை ஆறுமுக கடவுள் வணங்கினர் . அய்யா வைகுண்டர் ஆறுமுக கடவுளுக்கு பல அறிவுரையை வழங்கினார்.

        சரி அது என்ன அறிவுரை ?

  காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
பூசை யேறாதிருங்கோ பெலிதீப மேராதுங்கோ
ஆசை வையாதிருங்கோ அவகடஞ் செய்யாதுங்கோ
ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ
மாயநினைவு மனதில் நினையாதுங்கோ
வைகுண்டா  மென்று மனதில் நினைத்திடுங்கோ
பொய்கொண்ட தேரோட்டம்  புனங்கார    மேராதுங்கோ
தாதி   கைகாட்டல்‌  சப்பிரங்க  ளேறாதுங்கோ

மோதிப்   பேசாதிருங்கோ மோகம் பாராட்டாதுங்கோ
ஆலத்தி   கைவிளக்கு ஆராட்டுப் பாராதுங்கோ
சாலத்தீ  பாராதுங்கோ சகலபூ ஏராதுங்கோ
கொழுந்த  மஞ்சணைமாலை  குப்பையுடன்  சந்தனமும்
விழுந்து நமஸ்க்கார முதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ
கூவென்றுரையாதுங்கோ கொக்கரித்து பேசாதுங்கோ
ஓவென்றுரையாதுங்கோ ஓமமுறையாதுங்கோ

தீபரணைக் காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ
எல்லாம் வெறுத்திருங்கோ இத்தனை போலுள்ள தொல்லாம்
அல்லாமல் மீறி யாதொருவர் செய்த துண்டால்
வல்லாத்தக் கோபம் வரும் வைகுண்டருக்கே
நல்லாரே ஆகவென்றால் ஞாயமதிலே நில்லும்
என்று வைகுண்டர் இயம்பகந்  தனுரைப்பான்
மன்று தனையளந்த வைகுண்ட நாரணரே


அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக