அய்யா வைகுண்டர் அருளிய அருள் நூலில் இருக்கிறது , இந்த புனித மந்திரங்கள் . இது தமிழ் மொழியில் இருக்கும் தெய்விக மந்திரங்கள் .
உகப்படிப்பு படிக்க உகந்த நேரம் காலை மற்றும் மாலை . அதுபோலவே உச்சிப்படிப்பு படிக்க உகந்த நேரம் மதியம் .
அய்யா வைகுண்டர் வழிபாட்டுத் தலங்களில் உகப்படிப்பு மற்றும் உச்சிப்படிப்பு என்கிற புனித மந்திரங்களை ஒருவர் சொல்ல , அதனை கேட்டு அனைவரும் தொடர்ந்து சொல்லுகின்றனர் .
இதன் மூலம் இறை வழிபாட்டில் ஒற்றுமையை வளர்க்கும் வழியே , நம் அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழி.
உச்சிப்படிப்பு மற்றும் உகப்படிப்பு ஆகிய மந்திரங்கள் பக்தியுடன் , தினசரி படித்து வந்தால்
1. ஊழ்விளை அகலும்
2. வல்லமை சித்திக்கும்
3. அருள் ஞானம் பெருகும்
4. வைராக்கியம் உண்டாகும்
உச்சிப்படிப்பு மற்றும் உகப்படிப்பு அனுதினமும் படுவோம் !
அன்பால் ஒன்று கூடுவோம் !
அன்பால் இறைவனை தேடுவோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக