திருநாமம் , சுவாமிதோப்பு பதி அடியில் உள்ள தூய வெள்ளை நிற திருமண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது . இதையே அனைத்து அய்யா வைகுண்ட பதிகளிலும், தாங்கல்களிலும் பயன்படுத்தப்படுகிறது .
அய்யா வழி மக்கள் நெற்றி புருவங்களின் மத்தியில் ஜோதி வடிவில் திருநாமம் இடுகின்றனர்.
அய்யா வைகுண்டர் பள்ளியறையை வணங்கிய பக்தர்கள் , பள்ளியறையின் இடது பக்கத்தில் நிற்கின்ற பணிவிடை பிள்ளைகளிடம் சுருளைக் கொடுத்து "அய்யாவுக்கு அன்பாக தரப்படுகிறது'' என்று கூறுகின்றனர் .
பின்னர் பணிவிடைப் பிள்ளைகள் பக்தர்களுக்கு திருநாமம் இட்டு இனிமம் வழங்குகின்றனர் .
முற்காலத்தில் சில கோவில்களில் திருநீற்றை பூசிவிடுவது தீண்டாமையாக கருதப்பட்டது . இதை மாற்றக் கருதிய அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு "தொட்டு திருநாமம்'' சாத்த அறிவுறுத்தினார் .
எனவே , அனைத்து அய்யா வைகுண்டரின் பதிகளிலும், தாங்கல்களிலும் பணிவிடைப் பிள்ளை பக்தர்களுக்கு "தொட்டு திருநாமம்'' சாத்துகின்றனர் .
அய்யா வைகுண்டர் அருளிய திருநாமம் தினமும் அணிவதன் மூலம்
1 . நாம் வாழ்வில் மேன்மை உண்டாகும்.
2. தீராத நோய்கள் குணமாகும்
3 . தீயசக்திகள் நம்மை விட்டு அகலும்
4 . தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீரும் .
5. நேர்மை , உண்மை , வீரம் , அன்பு முதலான குணங்கள் வளரும் .
இத்தகைய சிறப்புகளைத் தருகின்ற திருநாமத்தை , தினமும் நம் நெற்றியில் அணிவோம் !
அய்யா வைகுண்டர் அருள் பெறுவோம் !
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக