அகிலத்திரட்டு அம்மானையின் சிறப்புகள்:
1. இறைவன் ஒருவனே அவனே பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறான்.
2. இறைவனின் படைப்பில் சாதிகளில் ஏற்ற தாழ்வு எதுவும் இல்லை. சமத்துவ சமுதாயமே அய்யா காட்டிய சமுக வழி ஆகும். ஆண்டான் அடிமை என்ற வேறுப்பாடு இறைவனுக்கு கிடையாது. அகிலத்தில் இறைவன் கூறும் இரண்டே குலம் (அ) சான்றோர்குலம் (ஆ) நீசக்குலம்.
3. நாராயணரின் முந்தைய அவதாரங்கள் மற்றும் எட்டு யுக செய்திகள்.
4. நமது சனாதன இந்து சனாதன தர்மத்தின் பல புராணங்களை ஒரே வரியில் அங்கங்கே சொல்லப்பட்டுள்ளது.
5. கலியுகத்தில் இறுதியில் நடக்கும் நிகழ்வுகள் தீர்க்க தரிசனமாக எடுத்து கூறப்பட்டுள்ளது . அது அனைத்தும் ஒன்றுக் கூட தவறாமல் அப்படியே இப்போது நடந்து வருகிறது.
6. இல்லறத்தை விட்டு தவம் எதுவும் இல்லை உலகில் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என காலமெல்லாம் வாழ வலியுறுத்துகின்றது.
7. இறைவனுக்கு பூசை, பூ, புனக்காரம், உயிர் பலி, காணிக்கை, காவடி போன்ற எதுவும் தேவையில்லை அன்பு மட்டுமே இறைவனை அடையும் வழி என்ற உண்மையை எடுத்துரைக்கிறது. இறைவன் நமக்குள்ளே இருக்கிறான் என்பதை உணர்த்துவதே அய்யா வழி ஆகும்.
8. இறைவனை தவிர பேய், பிசாது, மைய்,செய்வினை போன்றவைக்கு அஞ்ச வேண்டியதில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. ஜோதிடம், கிரக பலன் என்று தேடும் முதலை விறுதாவில் போடாமல் படைத்த பரம் பொருளின் மீது மட்டுமே முழு நம்பிக்கையுடன் இருக்க வலியுறுத்துகிறது.
9. சோதி வடிவான இறைவனை அடைய சைவ உணவு முறையை பின்பற்ற வேண்டும். எல்லா உயிரிலும் இறைவன் உள்ளான் என்பதை உணர்துகிறது.
10. அன்பு,பொறுமை, தர்மமே கலியை அழிக்கும் ஆயுதம் ஆகும். கோபம், சாபம், காமம், குரோதம், ஆணவம், பொறாமை போன்ற கலிமாயத்தை அகற்ற வலியுறுத்துகின்றது.
அகிலம் கற்ப்போம்! அய்யா காட்டிய வழிப்படி நடப்போம்!! என்றும் சாகா வாழ்வாம் இறைவன் பாதம் அடைவோம்!!!.
கல்லாகிய வேதம் கடவுள் அருளால் சாதாரண மக்களுக்கும் கிடைத்த நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக