வியாழன், 26 ஏப்ரல், 2018

திருமால் வைகுண்டருக்கு கலியின் வலிமையை கூறுதல்

இப்போது என்மகனே இக்கலியன் மாய் மாலம்
செப்ப எளிதல்லவே செயிக்க ஏலாது ஆராலும்
இப்போது உன்னோடு உரைத்த இயல் விஞ்சைக்கு அகப்படுங் காண்
வி=இங்கே நான் எல்லோருக்கும் பொல்லாதவனாக காணப்படுகிறேன் மகனே இப்போது காணப்படும் மாய்மாலக் கலியனும் அப்படித்தான்
கலியனுடைய செயல்களை எளிமையான காரியம் என்று சொல்ல முடியாது யாரூம் அவனை வெற்றிக் கொள்ளவும் முடியாது ஆனால்
நான் இப்போது உன்னிடம் உபதேசம் செய்த இயல்பான விஞ்சைகள் எல்லாம் கலியனை வெற்றிக்கொள்ள உதவும்
==
அப்பனே பம்மலிலே அகப்படுங் காண் இக்கலியும்
கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே
வலி மாய நினைவு மாய்மாலம் என் மகனே
வி=என் அருமை மகனே நீ பொறுமையோடு தந்திரமாகச் செயல்பட்டால் உன்னிடம் கலியன் அகப்படுவான்
கலி என்று சொல்லிவிட்டால் அது எலி போன்று சிறியது அல்ல ஆனால் அம்பு ஆயுங்கள் தேவை இல்லை
கலியானது மிகப்பெரிய சக்தி வாய்ந்தது நினைப்பதும் செய்வதும் மெயைக்கு மயங்கிய செயலாகும் மகனே
==
ஆனதால் ஆயுதங்கள் அம்பு தடி வேண்டாமே
மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே
இன்னம் ஒருவிஞ்சை இயம்புவேன் கேள்மகனே
வி=நினைக்கின்ற நினைப்பு மாய் மாலமாக இருப்பதால் எதிர்த்து போர் செய்து ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டியது இல்லை
நீதி, நேர்மை, ஒழுக்கம் போன்ற தன் ஒழுக்கக் கட்டுப்பாட்டோடு
அனைவரும் செயல்பட்டாலே கலி தானாக அழிந்து விடும்
நான் உனக்கு கலியனை அழிக்கும் இன்னொரு விஞ்சைகளை சொலகிறேன் கவனமாகக் கேள் என் மகனே
==
முன்னம் வகைக் காரனொடு மோதிப் பகையாதே
பகைத்தால் இருக்க ஓட்டாண் காண் அவ்விடத்தில்
வி=நான் உனக்கு கலியனை அழிக்கும் இன்னொரு விஞ்சையைச் சொல்கிறேன் கவனமாகக் கேள் என் மகனே
பிறவியிலேலய ஆணவம் கொண்டு தமக்கு நீகர் யார் நடக்கின்ற கர்மகலி நிறைந்தவனோடு தீ வாக்கு வாதம் பண்ணிப்ப பகைக்காதே
மகனே உனக்கு பூமியில் எதிராளிகள் தோன்றிவிட்டால் உன்னை நிம்மதியா அங்கே இருக்கவிடமாட்டார்கள்
==
உகத்து அடக்கும் முன்றே ஒருவரையும் சீறரிது
தாழ்ந்து இருக்க என்றால் சர்வதுக்கும் தாழணுமே
வி=கலியுகத்தை அடக்கி அரசாள்வதற்கு முன்பாக கலி மக்களுடைய செயல்களை சீர்திருத்த முடியாது என்மகனே
கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடலாம் வம்பு வேண்டாம் என்று நினைத்தால் அனைத்துக் காரியங்களூக்கும் தாழ்ந்து போக வேண்டி வரும்

ஓர்ந்து இருக்க என்றால் ஒருவர் பகை ஆகாதே
ஆனதால் நீயும் அவனைப் பகையாதே
நான் அவனைக் கேட்பேன் ஞாயக்கேடு ஆகிடினும்
வலியோர்க்கு ஒருவழக்கு வைத்துநீ பேசாதே
வி=சேர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் ஒருவரிடம் கூட பகை என்பது ஏற்படாது என் மகனே
அநியாயம் செய்கின்றவனாக இருந்தாலும் நீ அவனிடம் உன் கோபத்தை வெளிப்படுத்தி விரோதத்தை வளர்க்காதே
நான் பொறுமை என்கிற ஆயுதத்தால் தண்டனைச் செய்வேன் எனவே ஞாயம் இல்லாமல் கெட்டவனாக நடந்துக் கொண்டாலும்
வலிமை வாய்ந்தவனாக இருந்து பாவச் செயல்களைச் செய்கின்றவனுக்கும் எக்காரணம் கொண்டும் பரிந்து பேசாதே
==
மெலியோர்க்கு ஒரு வழக்கு வீணாய்ப் பறையாதே
சொத்து ஆஸ்தி வஸ்து சுகம் என்று எண்ணாதே
வஸ்து ஆஸ்தி பெண்ணு வகை என்று எண்ணாதே
நீ எண்ணாதே இருந்தால் நீணிலங்களும் மயங்கும்
வி=வலிமை இல்லாத எளியோருக்கு அவர்கள் மனம் வருந்தும்படி தேவை இல்லாமல் தவறுதலாக எக்காரணம் கொண்டும் பேசிவிடாதே
விவசாய நிலங்கள்,பணங்கள்,
வீடு போன்ற எல்லாச் செல்வங்களும் சந்தோசத்தைக் கொடுக்கும் என்று நினைக்காதே
மண்ணாசை, பொன்னாசை,பெண் ஆசை இந்த வகையைச் சேர்ந்த எல்லா ஆசைகளும் பெரிது என்று நினைக்காதே
நீ இந்த பூலோக ஆசைகளில் இருந்து விடுபட்டால் இந்த உலகம் உன்னைப் பார்த்து பணிந்து நிற்கும்
==
தான் இதின் மேல் எண்ணந் தங்கு தங்காதே இரு
சத்துருவோடுஞ் சாந்தமுடனே இரு
புத்திரரோடும் பேசி இரு என் மகனே
வி=எனவேதான் நான் கூறுகின்றேன் பூலோக ஆசை மீது பற்றற்ற பற்று கொண்டவனாக இரு என் மகனே
உன்னைப் பகைக்கிறவன் இடமும் நீ அன்பாய் இரு உன்னை எதிராளி என்று நினைத்தாலும் நீ அவனை நேசிப்பாயாக
கலிபுத்தி நிறைந்தவர்களோடும் வெறுப்பு காட்டாமல் பொறுமையோடு பேசி விட்டுக் கொடுத்து செல் என் மகனே
==

அன்போர்க்கும் ஈயு ஆகாப்பேர்க்கும் ஈயு
வன்போர்க்கும் ஈயு வழிபோவோர்க்கும் ஈயு
சகலோர்க்கும் ஈந்து தான் இரு நீ என்மகனே
வி=தர்ம சிந்தனை உள்ள அன்பு உள்ளம் கொண்டவர்களுக்குத் தாராளமாக கொடு தர்மசிந்தனை இல்லாதவர்களுக்கும் கொடுத்துவிடு
வம்பு வசைப்பேசி வஞ்சகமாகச் செயல்படுபவர்களுக்கும் கொடுத்து விடு தீமையான வழியைத் தேடி செல்பவர்களுக்கும் கொடுத்துவிடு
நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து விடு மகனே
==
வலியோர்க்கு மீயு வழி போவோர்க்கு மீயு
மெலியோர்க்கும் ஈயு மென்மையாய் என் மகனே
ஆர்க்கும் மிக ஈந்தால் அந்தத் தர்மமே கொதிக்கும்
போர்க்கு நினைத்தாரைப் பெலிக் கொடுக்கும் தர்மமது
வி=நல்ல வழியில் நடந்து திறமைசாலியாய் இருப்பவனுக்கும் கொடு தீயவழிக்குச் செல்லும் திறமையற்றவனுக்கும் கொடு
ஏழை எளியவர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடு இத்தகைய குணம் உன்னை உயர்ந்தவன் ஆக்கும் மகனே
நீ எல்லோருக்கும் எந்தக் குறையும் வைக்காமல் வாரி வாரி வழங்கினால் அந்த தர்மமே உன்னைப் பாதுகாத்து தீமையை அழிக்கும்
தர்ம சிந்தனை உள்ள உன்னைக் குற்றவாளி என்று நினைத்தால் உன்னுடைய தர்ம புண்ணியமே அவனை பழிவாங்கி விடும்
==
தர்மந்தான் வாள் சக்கரங்கள் அல்லாது
தின்மையது கேடு செப்பக்கேன் என் மகனே
சாதி பதினெட்டுந் தன்னால் கேடாகும் வரை
நீதி அழியாதே நீ சாபங் கூறாதே
வி=தர்மமே எதிரியை அழிக்கும் மிகப்பெரிய வாளும் சக்கராயுதமும் ஆகும் தன் வினை தன்னைச் சுடும் என் மகனே அதுமட்டும் அல்ல
பிறருக்கு தீமைச் செய்ய நினைத்தால் அது நம்மையே தாக்கும் மகனே அதைப்பற்றிக் கூறுகின்றேன் கேள் மகனே
பதினெட்டு சாதி மக்களும் கலியில் மூழ்கித் தன்னைத்தானே சுய அறிவில்லாமல் அழித்துக் கொள்ளும் நாள்வரை
நீ உன்னுடைய புனிதத் தன்மையில் இருந்து மாறி நீதி நெறி தவறிவிடாதே நீ யாரையும் சபிக்கவும் செய்யாதே
==

மகனே உனக்கு வைத்த விஞ்சை மனதில் அறிந்து கொண்டாயோ
அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடத்து அல்லாமல்
யுகமே அழியும் முன்னாக ஒரு சொல் இதிலே குறைவானால்
தகமோர் அறியத் நீ மூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே
வி=மகனே நான் உனக்கு உபதேசம் செய்த விஞ்சைகளை எல்லாம் எப்படி நடக்க வேண்டும் என்று மனதில் தெரிந்து கொண்டாயா
நான் உன்னுடைய உள்ளத்தில் வைத்துக் கொள்ளும்படி சொன்ன சட்டத்திட்டங்களை எல்லாம் சொன்னது போல் நடத்து மற்றும்
கலியுகம் அழிந்து தர்மயுகம் தோன்றும் முன்பாக நான் சொன்ன வார்த்தைகளின் படி நடக்காமல் தவறு செய்தால்
உலக மக்கள் அனைவரும் அறியும் படியாக மரணம் ஏற்பட்டு விதியின் காரணமாக மறுபிறவி எடுப்பாய்
==
நல்லோர் மகனே சொல்லுவது கேள் நானோ உரைத்த
விஞ்சையெல்லாம்
வல்லோன் ஆன திருமகனே மனதில் அறிந்து அறிந்துநட
எல்லாம் நமதுள் ஆச்சுது என்று எண்ணி நடப்பேன்
சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே
வி=பரம்பொருளாகிய நாராயணருடைய மகனே நான் சொல்வதைக் கேள் நானாக உனக்கு கொடுத்த விஞ்சைகள் எல்லாம்
வல்லவனாக இருக்கின்ற திருமாலின் மகனே நான் உனக்கு உபதேசம் செய்வதை உன் மனதில் வைத்து சிந்தித்து சிந்தித்து நட
எல்லா சக்திகளும் நமக்குள் இருக்கிறது நமக்கு நிகர் யாரும் இல்லை என்று நீ நினைத்து நடந்தால் உன்னிடம்
சொன்ன வார்த்தைகளை மீறி நடந்தால் உனக்கும் மரண தண்டனைக் கிடைக்கும் மறு பிறவி உண்டு
==
கொடுக்கும் வரங்கள் உனக்கீந்தேன் கொடுத்த வரத்தைப் பறிப்பதற்கு
உடக்கு வரமுந் தந்தேன் நான் உந்தன் ஆணைத்
அடக்கு முடக்குந் தந்தேன் நான் ஆதீ சிவனார் அவராணை
நடக்கும் படியே சட்டமெல்லாம் நாராயணனே நந்தேனே
வி=நீ நினைத்ததைக் கொடுக்கும் வரங்கள் எல்லாம் தந்துவிட்டேன் நீ மற்றவர்களுக்கு கொடுத்த வரத்தை திரும்பப் பெறுவதற்கு
நான் உனக்கு நல்ல விதமான வரங்களை எல்லாம் தந்தேன்
இது உண்மை உன் மேல் ஆணை உன் தாய் மேல் ஆணை ஆகும்
அடக்கவும் ஒடுக்கவும் கூடிய அனைத்து வரங்களும் தந்தேன் என் மேல் ஆணை ஆதி சிவபெருமாள் மேல் ஆணை
தெட்சணா பூமிக்கு சென்று பொறுமையோடு நடந்து கொள்ளும் படி நான் இந்த சட்டத்திட்டங்கள் எல்லாம் தந்தேன் மகனே
==

தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுத் தரைமீது
எந்தன் மீது மறவாதே என்னை ஆண்டு அருளும் இறையோனே
அந்தன் மீது மறவாதே ஆசான் எனவே அறிவில் வைத்து
சிந்தை மகிழ்ந்து முறை நடந்தால் சிவனும் உனக்குள் வசமாமே
வி=நான் உனக்குத் தந்திருக்கின்ற வரங்கள் பொய் ஆகாது இந்த பூமியில் நீ மனம் வருந்தும் தருணம் ஏற்படும் போது கூட
நான் உனக்கு கொடுத்த விதிமுறை சட்டங்களை மறந்து விடாதே எனக்குப் பதிலாக இருந்து செயல்படுகின்ற என் மகனே
எமன் உன்னைத்தேடி வரும் அளவில் நீ எதையும் மறந்து விடாதே நீ சகல வித்தையும் தெரிந்தவன் என்று மனதில் வைத்துக் கொண்டு
தெய்வீகத் தன்மையோடு நீ சந்தோசமான முறையில் நடந்தால் அன்பே சிவம் என்கிற சிவன் உனக்குள் ஐக்கியமாகி விடுவார்
==
தாயாரோடு சிவமாது சரசுபதியே பொன்மாது
நோயா மாதர் மடமாது நீணிலம் அறிய வந்து உனது
பூசா பலன்கள் சொல்லி மிகப் புலம்பித் திரிவார் துயர் தீர
மாயா திருக்கு மகனே உன் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே
வி=மகனே உன் தாயாகிய மகாலெட்சுமியும் சிவனுடைய மனைவி பார்வதியும் பிரம்மனுடைய மனைவி சரஸ்வதியும் ஆகிய முப்பெரும் தேவியும்
தெய்வலோகத்து தேவதைகளும் பூலோகத்து பெண்களும் வையகமே அறிந்து கொள்ளும்படி உன்னிடம் வந்து
பூஜை வழிபாட்டு முறை மந்திரங்களை சொல்லி போற்றி வணங்கி தன்னுடைய துயரங்கள் தீர வேண்டும் என்று புலம்புவார்கள்
மாய தந்திர சக்தி நிறைந்த என் மகனே நீ உன்னுடைய மனதில் சந்தோசம் நிறைந்தவனாக இருப்பாயாக
==
சொல்ல எளிதோ என் மகனே சொல்லாதது அநேகம் தோன்றும் இனி
வெல்ல எளிதோ என் மகனே மேலோர் ஆர் ஆராலும்
வி=அன்பு மகனே நான் சொல்லும் உபதேசங்கள் சொல்வதற்கு சாதாரணமானது அல்ல சொல்லாத உபதேசம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கும்
மகனே உன்னை எளிதில் யாரும் வெற்றிப் பெற முடியாது மகனே மேலோகத்தில் உள்ளவர்களாக இருந்தாலும்
==

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக