அகிலம் அருள்நூல் தந்த அய்யா வைகுண்டரே...
ஆயிரத்தெட்டு மாசியில் விஞ்சை பெற்று வந்தவரே...
இணங்கி இருப்பது இன்பத்தை தரும் என்றவரே...
ஈசன் மலர் பாதம் கிட்டிக்கொள்ளும் என்று சொன்னவரே...
உலகம் எல்லாம் மெய்பொருளாய் இருப்பவரே...
ஊசி முனையதிலே எங்களுக்காய் தவம் நின்றவரே...
எல்லோருக்கும் மிகுதியாய் ஈந்து கொடுப்பவரே...
ஏக பரம் பொருளாய் எங்கும் காட்சி அளிப்பவரே...
ஐம்பதிக்குள் இருக்கும் அதிசயத்தை உணர்த்தியவரே...
ஒரு குடைக்குள் உலகை ஆள வரும் அற்புதரே...
ஓம் என்ற மந்திரத்தை ஓங்காரமாக கொண்டவரே...
ஒளடதம் போல் முத்திரி கிணற்று நீரை தந்தவரே...
எஃகு போல் தர்மயுகச்செய்தியை அகிலமறிய செய்திடுவீரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக