வியாழன், 26 ஏப்ரல், 2018

திருமால் கடைசி விஞ்சை பற்றி கூறுதல்

முத்தி எனை ஈன்ற முதன்நாள் ஒர் விஞ்சை வைத்தார்
அவ்விஞ்சை மாத்திரமே யான் உனக்கு ஈயவில்லை
இவ்விஞ்சை ஈவது தான் எப்போது எனக்கேளு
வி=ஆதி நாராயணராகிய என்னை முதன் முறையாக முத்தி அணைத்து ஈஸ்வரர் ஒரு விஞ்சையை எனக்குக் கொடுத்தார்
ஈஸ்வரன் எனக்கு கொடுத்த அந்த விஞ்சையை மாத்திரமே நான் உனக்குத் தரவில்லை என் அன்பு மகனே
நான் பெற்றுக் கொண்ட அந்த விஞ்சையை நான் உனக்கு எப்போது தருவேன் என்று கூறுகின்றேன் கேட்பாயாக
==
சீமை அரசு செலுத்த வரும் நாளையிலே
மேன்மை முடித்தரிக்கும் வேளையில் என்மகனே
சொல்லுகிற விஞ்சை சுத்தமகனே கேட்டு இருநீ
வி=கலியுகம் முடிந்த பிறகு தோன்றும் தர்மயுகத்தை நீ முடிசூடும் மன்னனாக அரசப் பதவி ஏற்று ஆட்சி செய்ய வரும் அந்த நாளில்
முடிசூடும் பெருமாள் என்கிற மிக உயர்ந்தப் பட்டத்தொடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போது தருவேன் அன்பு மகனே
நான் தர்மயுகத்தில் உன்னிடம் சொல்லும் விஞ்சையானது மிகவும் பரிசுத்தமானது மகனே அதை அப்போது கேட்டுக் கொள்வாயாக
==
பல்லுயிர்களுக்கும் படியளக்கும் விஞ்சையது
எல்லாம் உனக்கு அளித்தேன் என்னுடைய நாரணனே
அல்லாமல் நான் உனக்கு அருளுகிற விஞ்சையைக் கேள்
வி=பரிசுத்தமானது அந்த விஞ்சை உயிரினங்களுக்கு எல்லாம் படி கொடுத்து பாதுகாக்கும் புதிய விதிமுறை ஆகும் மகனே
நான் என்னிடம் உள்ள எல்லா விஞ்சைகளையும் உனக்கு அன்பாகத் தந்துவிட்டேன் நான் பெற்ற மகனே என்றார்
அதுமட்டும் அல்ல தகப்பன் என்கிற முறையில் நான் உனக்கு தந்தருளும் விஞ்சையை சொல்கிறேன் கேட்பாயாக
==
பெரியோர்க்கு வாழ்வு பெருகச் சிறந்தாலும்
மரியாதையை இருக்கும் மகனேநீ கேட்டிடுநீ
வி=பெருந்தன்மையோடு நடக்கின்ற ஞான அறிவைப் பெற்றவர்கள் வாழ்க்கையில் செல்வச் செழிப்போடு இருந்தாலும்
ஆணவம் கொள்ள மாட்டார்கள் மரியாதையும் மதிப்பும் உள்ளவர்களாக இருப்பார்கள் என் மகனே தெரிந்து கொள்வாயாக
==
சற்றோலே வாழ்வு சகடருக் கேவருகில்
கற்றோரே ஆகிடினும் கண்டறிவேன் போநீயெற்பான்
வி=பெருந்தன்மை இல்லாமல் கீழ்த்தரமாக வாழ்கின்றவனுக்கு சிறிதளவு செல்வம் இருந்தால் கூட மரியாதை இருக்காது
கல்வி அறவு பெற்ற பெரியவராக இருந்தாலும் உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் நீ போ என்பான்
==

முள்முருக்கம் பூவு மினுக்கு மூன்று நாளே
கள்ளருக்கு வாழ்வு காணுமது போல் மினுக்கு
நல்லோர்க்கு வாழ்வு நாளுங் குறையாமல்
வல்லோருக்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய்
வி=முள் முருங்கை மரத்தில் பூக்கின்ற அழகிய மலர் அதன் சிகப்பான கண்ணைக் கவரும் நிறம் மூன்று நாட்களுக்கு மட்டுமே
முள் முருங்கைப் பூவைப்போல் கள்ளம் கபடம் உள்ள நயவஞ்சகர்களூடைய வாழ்க்கை ஆடம்பரம் இல்லாமல் அழிந்து பொகும்
நல்லொழுக்கத்தோடு நடந்து நேர்மையாக சம்பாதித்தவர்களுக்கு வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாமல் செல்வம் நீடிக்கும்
வல்லமை வாய்ந்தவர்களுக்கும் மேலாக அவர்கள் போற்றும் படி வாழ்வார்கள் அதை நீ காண்பாய் மகனே
==
விள்ளாத ஞாயம் மேல் ஞாயம் என் மகனே
துள்ளாத யாணை துடியானை என்மகனே
அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே
வி=நான் உன்னிடம் சொல்லாமல் இருப்பதற்கு காரணம் இது மேலிடத்திலுள்ள பரஞானம் சம்பந்தப்பட்டது என் மகனே
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல அமைதியாக தனிமையில் நிற்கும் யாணை மதம் பிடித்தது ஆகும் என் மகனே
தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் மனநிலை வேண்டும் அதுவே மிகபெரிய சக்தியாகும் ஞான அறிவுள்ள என மகனே
==
கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே
நன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே
ஆண்டின பேரை அகற்ற நினையாதே
ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே
வி=உன்னுடைய வழிகளில் இருந்து ஒருபோதும் விலகிக் செல்லாதே அகிலத்திரட்டு அருளநூல் ஆகமங்களைக் கற்றவர்களைக் கைவிடாதே
உனக்கு உதவியாக இருந்த சீடர்கள் மக்கள் எவரையும் மறக்காதே நீ எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று நினைக்காதே
உன்னை நம்பி நீயே கதி என்று உன்னை சரணடைந்தவர்களை எக்காரணம் கொண்டும் ஒதுக்கி விட நினைக்காதே
சான்றோர் மக்களுடைய ஆபத்தில் இருந்து பாதுகாத்து விட்டு அப்புறம் அகற்றி வைத்து விடாதே கவனமாக இரு
==
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்
கோபத்தைக் காட்டாதே கோளோடு இணங்காதே
வி=உன் உயிரே போகும் அளவில் உனக்கு ஆபத்து வந்தாலும் உன் வாயால் சாபம் இட்டு எதையும் கூறிவிடாதே
நீ எக்காரணம் கொண்டும் எரிச்சல் அடைந்து கோபத்தை வெளிக்காட்டி விடாதே கோள் வார்த்தைகளை காதால் கேட்காதே
==

பாவத்தைக் காணாதே மகட்டுமொழி பேசாதே
பசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே
விசுவாசம் அதிலே விரோதம் நினையாதே
எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ
வி=கலியுகத்தில் நடக்கின்ற பாவச் செயல்களை கண்ணால் பார்க்காதே ஆசை வார்த்தைகளை எக்காரணம் கொண்டும் பேசாதே
லெட்சுமியின் அம்சமாக இருக்கின்ற பால் கொடுக்கும் பசுமாட்டை பராமரித்து பாதுகாக்காமல் இருக்காதே
உன்மேல் நம்பிக்கைக் கொண்டு உன்னிடம் பற்றுதலாக இருப்பவர்களிடம் விரோத மனப்பான்மையோடு பார்க்காதே
எழை எளிம மக்களைக் கண்டால் அவர்களுக்கு அன்பு காட்டி உதவி செய்ய வேண்டும் மகனே
==
அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே
தொட்டுப் பிடியாதே தோர்வை வைத்துக் காணாதே
வீட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே
வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே
பரம்பூமி கண்டு பாவித்து இருமகனே
வி=மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் கோபம் கொண்டு அழித்து விடாமல் என்ற எண்ணம் அணு அளவுக் கூட நினைக்காதே
தீய எண்ணம் கொண்டவர்களோடு தொடர்பு வைக்காதே கீழ் தரமானவர்களோடு தொடர்பு வைத்து அவஸ்தை படாதே
வீணாகத் தேவை இல்லாமல் விட்டுக் கொடுத்து போகாதே அதனால் ஏற்படும் அவமானத்தை அடையாதே மகனே
உனக்கு கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளில் இருந்து சிறிதளவுக் கூட விலகிக் செல்லாதே என் அன்பு செல்வமே
பரமனாகிய நான் வாழ்ந்த தெட்சணத்து பூமிக்குச் சென்று பக்குவமான முறையில் பொறுமையாக இரு மகனே
நீ பூலோக மக்களோடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிவுரையாக விஞ்சை போல் சொல்லிவிட்டேன் என் மகனே
==
புத்தி விபரீதமாய்ப் பின்னும் ஆராயாதே
சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும்
நட்டங் காணாதே நாடாள்வாய் என் மகனே
வி=நான் உனக்கு சொன்ன புத்தி மதிகளை எல்லாம் சஞ்சலத்தோடு தேவை இல்லாமல் மீண்டும் மீண்டும் யோசிக்காதே
நான் உனக்கிட்ட சட்டத்திட்டங்களை எல்லாம் எப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலையாக இருந்தாலும்
கோபம் கொண்டு அழிவு ஏற்படுத்தி விடாதபடி மனதைக் கட்டுப்படுத்தி பொறுமையோடு தற்காத்துக் கொள் மகனே
==
என் மகனே நான் உனக்கு இன்னும் ஒரு விஞ்சை சொல்வேன்
வி=என் அருமை மகனே நான் உன்னிடம் சொல்லாத வேறு ஒருவித விஞ்சையைப் பற்றிக் கூறுகின்றேன் கேட்பாயாக
==

பொன்மகனே உன்னுடைய புத்தியிலே வைத்திருநீ
இச்சட்டந் தன்னில் எள்ளளவு தப்பினதால்
தீச்சட்டம் காய்க்கத் தேதி வரும் என் மகனே
வி=பொன் போன்ற என் கண்ணுமகனே அதை நீ உன்னுடைய மனதில் வைத்துக் கொள்வாயாக மறந்து விடாதே
நான் இப்போது உன்னிடம் சொல்லப் போகின்ற இந்த புதியச் சட்டத்தில் நீ எள் அளவுக்கூட தவறி நடந்தால்
தீமையைத் தட்டிக் கேட்கும் தீய தேவதைகள் மூலம் கடினமான சட்டத்தோடு உன்னையும் தண்டிக்கும் நாள் வரும் என் மகனே
==
அனுப்போல் மறவாதே நான் வைத்த சட்டமதில்
மனுப்போல் என்று இராதே மனதில் எண்ணமாய் இரு நீ
பஞ்சமிர்தே என்னுடைய பாதை தப்பி நீ நடந்தால்
கொஞ்சும் கிளியே கொன்னு எழுப்புவேன் உனையும்
வி=நான் இப்போது உனக்கு விதித்த சட்டமுறையில் இருந்து அணு அளவு கூட மறந்து செயல்பட்டு விடாதே
மனித மக்களை போல் உன்னை நினைத்து இருந்து விடாதே நீ யார் என்பதை மனதில் நினைத்துக் கொண்டே இரு மகனே
பஞ்ச பூத உலகத்தை உனக்குள் நினைத்து கொண்டவனே நீ என்னுடைய வழிமுறைகளில் நடக்காமல் சிறிதளவு தவறு செய்தால் கூட
நீ செய்த கர்மவினைப் பயனாக என் களிபோன்ற செல்வமே மிண்டும் ஒரு அவதாரம் எடுக்க உனக்கு மறுபிறவி உண்டு மகனே
==
பதறியிரு என் மகனே பம்மியிரு கண்மணியே
பொறுதி மகனே பெரியோர் ஆகுவது
உறுதிமகனே உலகமதை ஆளுவது
வி=பழி பாவங்கள் எதுவும் நேர்ந்து விடாதபடி பக்குவமாக இரு மகனே பணிவோடு பொறுதி காத்துக்கொள் கண்மணியே
பொறுத்தார் பூமி ஆள்வார் என்கிற தத்துவத்தை மறக்காமல் நீ நடந்தால் மிக உயர்ந்த நிலையை நீ அடைந்து விடுவாய்
அழிவில்லாத தர்மயுகத்தை நீ முடிசூடி ஆள்வது உறுதி மகனே
என்னுடைய வாக்கு ஒரு போதும் மாறாது என் மகனே
==
மகனே நான் எத்தனையோ மகாபெலங்கள் கற்றவன் நான்
உகமீதே சொல்லத் தொலையுமோ உத்தமனே
வி=என் அன்பு மகனே நான் பலவிதமான வித்தைகளையும் கலைகளையும் தந்திரங்களையும் தெரிந்து கொண்டவன் நான்
நான் செய்திருக்கின்ற செயல்கள்
எல்லாம் கணக்கிடமுடியுமா யுகம் யுகமாகத் தோன்றி நான் செய்வதை சொல்லிட முடியுமா மகனே
==
எவ்வுகங்களுக்கும் இப்படியே தர்மமில்லை
செவ்வுமகா விஷ்ணுதான் என்றுசொல்வார் தேசமதில்
வி=எங்கெங்கு அதர்மம் தோன்றுகின்றதோ அங்கெல்லாம் நான் தோன்றி அதர்மத்தை அழிக்கிறேன் எங்குமே தர்மம் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக