அகிலத் திரட்டு மற்றும் அருள்நூலில் வரும் வார்த்தை எங்கே விழுந்தாலும் ஏற்றம்
அதைக் குறை கூறுவதற்காகப் படித்தவரும் நிறை பக்தர் ஆகினர் பறைசாற்றப் படித்தோரும் பண்பாளர் ஆயினர்
இதைப் படிக்கக்கூட வேண்டாமாம் பிறர் படிக்கும்போது கேட்டுக்கொண்டு இருந்தாலே எப்பொழுதும் இறைவனையே வணங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு எவ்வளவு பலன் கிடைக்குமோ அவ்வளவு நிறைபலன் கிட்டும் என்கிறார் அய்யா
"வாசிக்கக்கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப் பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா" - அகிலம்
தாய்மை அடைய தகுதியற்ற ஒருபெண் இதை இறைவனின் வரலாறு என்று உறுதியாக நினைத்து விரும்பிக் கேட்பாளேயானால் அவளுக்கு நிச்சயமாகப் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்று ஆணையிட்டுக் கூறுகிறார் அய்யா
"மலடியும் இக்கதையை மாவிருப்பத்தோடு இளகி
தலமளந்தோனை நாடி தான் கேட்பாளாகில்
என்னாணை பார்வதியாள் ஈஸ்வரியும் தன்னாணை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா"
-அகிலம்
தலமளந்தோனை நாடி தான் கேட்பாளாகில்
என்னாணை பார்வதியாள் ஈஸ்வரியும் தன்னாணை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா"
-அகிலம்
இதைப் படிக்கும்போது ஒரு தொழுநோயாளி ஒரு மனத்துடன் அதைக் கேட்டுக்கொண்டு இருந்தானேயானால் அவனைப் பீடித்துள்ள தொழுநோய் தொலைத்து போய்விடும் என்றும் உறுதி கூறுகிறார்
அய்யா
அய்யா
"குட்டமது கொண்டோர் குணம் வைத்துக் கேட்பாரால்
திட்டமது சொன்னோம் தீரும் திருவானன"
-அகிலம்
திட்டமது சொன்னோம் தீரும் திருவானன"
-அகிலம்
அய்யா உண்டு
நல்ல ஒழுக்கமான குண நலன்களோடு வாழ்கின்றவர்களுக்கு பதினாறு செல்வங்களையும் கொடுப்போம் அவர்களுக்கு என்றும் எமது கருணை உண்டு ஆகவே அவர்கள் மன உளைச்சலே இல்லாமல் வாழ்வார்கள் என்று சொல்லுகிறார் அய்யா
இதைப்போல் அந்த ஆகமத்திலுள்ள செய்திகளைந் தப்பிதமே இல்லாமல் நம்புகிறவர்கள் மேற்பிறப்பே இல்லாமல் பேரின்பப பேற்றினைப் பெற்று வைகுண்ட லோகத்திற்கு வந்து வாழ்வாக்கள் என்று சொல்லுகிறார் அய்மா
"பாக்கியம் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழ்வோர்க்கு
நோக்கிய கருனன உண்டாம் நோவில்லாது இருந்து வாழ்வார்
தாக்கிய வாசகத்தின் தன்மையைத் தவறிடாது நம்புவோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார்தாமே "
-அகிலம்
-அகிலம்
தினம் ஒரு வேளையாவது எமது இந்த ஆகமச் செய்திகளைக் கேட்பீர்களேயானால் சூரியனைக் கண்டதும் பனித்துளி மறைவதைப் போல் உங்களைப் பீடித்திருக்கும் ஊழ்வினைகள் அகன்றுமோகும்
அது நிச்சயம்
அது நிச்சயம்
அதைப்போல் கலைவாணியின் வெளிப்படையான வார்த்தைகளையும் அதைத் தம் திருக்கரங்களால் எழுதுகின்ற மகாவிஷ்ணுவின் விருப்பத்தையும் திடமாகக் கேட்டுத் தெளிவாகப் புரிந்தோரும் அதற்கு உதவியோரும் பிளவித் துன்பத்திலிருந்து விடுபட்டு நற்பேறு அடைவார்கள் என்று உரைக்கிறார் அய்யா
"தினமோரு நேரம் எந்தன் திருமொழி அதனைக்கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
துணிவுடன் கேட்டோர் உற்றோர் தொலைத்தனர் பிறவிதானே"
அய்யா உண்டு
இந்த ஆகமத்தைப் படிப்பவர்களுக்கும் படிப்பதைக் கேட்பவர்களுக்கும் அதற்கு உதவியோருக்கும் அதன் அகப் புறக் கருத்துக்களை ஆராய்ந்து உணர்ந்தவர்களுக்கும் இதை இறைவனின் போதனை என்று உணர்ந்து அதன்படி வாழ்பவர்களுக்கும் சித்தாதி சித்தர்களுக்கெல்லாம் பேரரசனாகிய இறைவனின் திருவடியைக் காணுகின்ற பேறும் இறைவனின் இருப்பிடத்தில் வாழுகின்ற வாய்ப்பும் சித்திக்கும் அதுவரைப் பூலோகத்திலும் சகல சிறப்புகளோடும் இருந்து வாழ்வார்கள் என்று வாழ்த்துகிறார் அய்யா
"வாசித்தோர் கேட்டோர் உற்றோர் மனதினில் உணர்ந்துகற்றோர்
ஆசித்தன் பதமேகண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமேகண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத்தோடு சிறப்புடன் இருந்து வாழ்வார்"
-அகிலம்
-அகிலம்
என்னுடைய சொல்லையும் எழுத்தையும் ஏடாக இணைத்து வைத்து மனம் மகிழுகின்ற பக்தர்களுக்கு எளிதாகப் புரிகின்ற வகையில் இதை எழுதி வைத்துள்ளோம்
"ஏந்தன் மொழியும் என்னெழுத்தும் ஏடாய்ச்சேர்த்து இவ்வுலகில
சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத்திறமாய் எழுதிவைத்தேன்
எந்தப் பேரும் என்மொழியை எடுத்தேவாசித்து உரைத்தோரும்
சிந்தமுடனே இருந்து மிகத் தர்மபதியும் காண்பாரே"
அய்யா உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக