வியாழன், 26 ஏப்ரல், 2018

முத்துகுட்டி சுவாமி உடலை புனிதப்படுத்துதல்

நன்று இந்த விவரமென்றே நாரணர் தயவு கூர்ந்து
சென்று இந்தச் சடலம் தன்னை திருச்செந்தூர் பதியில் எங்கும்
கொண்டந்தத் தெருவும் காட்டிக் குளிப்பாட்டி வாருமென்றார்
வி=மிகவும் நல்லது நீங்கள் நல்லபடியாக முழுவிபரமும் சொன்னீர்கள் என்று நாராயண பரம்பொருள் இரக்க சிந்தனை கோண்டவராக
நீங்கள் இருவரும் சென்று நற்சடலமாக இருக்கின்ற முத்துக்குட்டி சுவாமியை திருச்செந்தூர் ரத வீதிகளைச் சுற்றி
எல்லா ரத வீதிகளையும் சுற்றி வணங்கி விட்டு கடைசியில் முருகனைக் காட்டிவிட்டு குளிப்பாட்டி கொண்டு வாருங்கள் என்றார்
==
மேலுள்ள சடலம் தன்னை மிகு முனிமாரே நீங்கள்
நாலுள்ள தெருக்கள் தோறும் நடத்தியே தரையிலூட்டி
பாலுள்ள பதத்தில் கொண்டு பழவினைத் தீரக் காட்டி
மாலுள்ளம் புகுத நாட்டி வாருங்கோ சிணமே என்றார்
வி=தெய்வலோகத்தில் உள்ள மிக உயர்வான நற்சடலத்தை மிக உயர்வான முனிவர்களே நீங்கள் இருவரும்
திருச்செந்தூர் முருகர் கோவிலை நான்கு பக்கமும் சுற்றி வந்து தரையில் உருண்டு அங்கப் பிரதட்சணம் செய்துவிட்டு
பாற்கடலுக்கு கூட்டி சென்று கடல்நீர் பதத்தில் தீர்த்தம் ஆடவைத்து முன்வினைப் பாவங்களை தீர்த்துவிட்டு
திருமால் அவன் உள்ளத்தில் புகுந்து இருக்க புனிதமாக்கி கொண்டு வாருங்கள் விரைவாகச் செயல்படுங்கள் என்றார்
==
அப்படி முனிமார் ஏவி அங்கங்கே கொண்டு காட்டி
முப்படித் தோஷம் போக முனை பதம் அதிலே மூழ்கி
இப்படி இவரைக் கொண்டு இவர் வரும் முன்னேயாக
வி=திருமால் கூறிய அறிவுரைப்படி முனிவர்கள் முத்துக்குட்டி சுவாமியை கூட்டி சென்று நான்கு பிரகாரங்களையும் காட்டி
முன்வினைப் பாவங்கள் தீர்வதற்காக பாற்கடலுக்குச் சென்று கடல்நீர் தீர்த்தமாடி பாவத்தைப் போக்கி விட்டு
திருமால் சொன்னபடி எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு திருபாலைக் காண வருவதற்கு முன்பாக முன்னோற்பாடாக
=<>=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக