வியாழன், 26 ஏப்ரல், 2018

திருமால் வைகுண்டருக்கு தவ வலிமை கூறுதல்

திட்டித்த நாதன் சொல்லுவார் மகனுடனே
எந்தனின் தவத்தாலே இகாபரன் உனக்குள்ளாகி
தந்திடும் மகனே நானும் தனதுள் அமர்ந்தே நானும்
வி=வைகுண்டரை பூலோக மக்களுக்காக தன்னுடைய மகனாக உருவாக்கிய திருமால் சொல்லத் தொடங்கினார் மகனுடனே
என் அருமை மகனே என்னுடைய தவ வலிமையின் காரணமாக தவப்பொருளாகிய ஈசன் உனக்குள் ஐக்கியமாகி
எல்லா சக்திகளையும் உனக்கு தந்திடுவார் மகனே பரம் பொருளாகிய நானும் உனக்குள் ஐக்கியமாகி விடுவேன் மகனே
==
உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகழ்வர் கண்டாய்
சித்தர்கள் எவரும் போற்றச் செயல் பெற்ற மகனும் நீயே
வி=கலியழிக்க வந்த உன்னை கண்டால் மேலோகத்திலுள்ள எமன்,காலன்,தூதன் ஆகிய மூவரும் நிம்மதி அடைந்தவர்களாக சந்தோசப்படுவார்கள்
பதினெட்டு சித்தர்களும் உன்னைப் போற்றி புகழ் பாடும்படி மிகவும் பெருமைப் பெற்ற உயர்வான மகனும் நீயே
==
மகனேநீ கேட்டதற்கு வகை சொல்ல வேண்டும் என்றால்
தவம் மூணு உண்டே நீதரணியில் போய் இருந்தால்
அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம்
வி=என் அன்பு மகனே நீ கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நல்ல விதமான முறையில் பதில் சொல்ல வேண்டும் என்றால்
நீ பூலோகத்தில் மூன்று விதமான தவங்களை செய்ய வேண்டி உள்ளது அதை தயவு செய்து நற்கதி அடைந்த பிறகு தான் சொல்ல முடியும்
நீ கேட்ட கேள்விகள் மட்டும் அல்ல தர்மயுகம் தோன்றிய பிறகு நாட்டின் நடைமுறைகள் எப்படி இருக்கும்
==
எல்லாம் உனக்கு இயம்பித் தருவேன்கேள்
முதத்தான் தவசு யுகத்தவசு என்மகனே
வி=நடக்கப் போகின்ற செயல்களைப் பற்றி எல்லாவற்றையும் உனக்கு சொல்லித் தருவேன் அப்போது நீ கேட்டுக் கொள்வாயாக
முதலாவது நீ செய்ய வேண்டிய தவம் கலியுகத்தை மட்டும் அழிப்பதற்காக செய்யும் தவம் ஆகும் என் மகனே
==

த்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாளுக்கும்
நன்றாக முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்
வி=அடுத்து நீ தியாக பனப்பான்மையோடு செய்கின்ற இரண்டாவது தவம் உன் இனமாகிய சான்றோர் மக்களுக்காக ஆகும்
இறுதியாக செய்ய வேண்டிய மூன்றாம் தவம் நீ என்னிடம் கூறிய சப்த கன்னிமார்களுக்கு ஆகும்
தெய்வலோகத்து சப்த கன்னிகள் பெற்றெடுத்த ஏழுலோகத்து வித்தில் தோன்றிய சான்றோர் வழி முன்னோர்களுக்கும்
எல்லாரும் வீடுபேறு அடைந்து தர்மயுகம் ஆள வேண்டும் என்பதற்காக நீ ஆறு ஆண்டுகள் தவம் செய்ய வேண்டும்
==
எப்படியும் நீதவசு இருக்க வரும் என்மகனே
ஓராறு ஆண்டு உற்ற தவமே இருந்து
பாராறும் காண பார்கண்டு கண்டிருநீ
வி=கலியுகமாக இருப்பதால் நீ கட்டாயம் தவம் இருந்துதான் வெற்றிப் பெற வேண்டும் என் அருமை மகனே
மகனே நீ இந்த கலியுகத்தில் ஆறு ஆண்டு காலம் நான் சொன்ன செயல்களுக்காக தவம் இருந்து அதை முடித்து விடு மகனே
உன்னை நோக்கி விருப்பம் இல்லாமல் இருந்த அத்தனை இனத்தவர்களும் உன்னைக் காண வருவார்கள் நீ காண்பாய் மகனே
==
வஸ்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல்
சற்றும் மனது எண்ணாமல் தான்இருந்து என்மகனே
வி=பூலோக செல்வங்களாகிய விவசாய நலன்களும் வீட்டு மனைகளும் வீடு வாசல் போன்ற சொகுசு வாழ்க்கை முதற்கொண்டு
பூலோக ஆசைகளில் மனதை சிறிது கூட சிதற விடாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி தவம் செய்ய வேண்டும் மகனே
==
நன்மையொடு தின்மை நற்பேச்சு திற்பேச்சு
உண்மையோடு தன்மை ஒன்று மிகப்பாராமல்
வி=பூலோகத்தில் உள்ள நன்மை தீமைகளைப் பற்றி சிந்திக்காமல் இனிய வார்த்தைக்கு மயங்காமலும் கடுஞ்சொல்லுக்கு கலங்காமலும்
உண்மையான உயர்வான தன்மையோடு பொய்யான கீழ்த்தரமான எதையும் யோசித்துக் கூடப் பார்க்காமல்
==

கந்தைத் துணி உடுத்து கைநிமிர்ந்துக் காட்டாமல்
எந்தப் பேரோடும் இனிப்பு மொழி பேசாமல்
பால் அல்லால் வேறு பண்டம் மிக ஏராமல்
வி=எளிமையான ஆடையை உடுத்துக் கொண்டு காணிக்கை கைக்கூலி எதுவும் வாங்காமல் ஆடம்பரம் இல்லாமல்
உன்னை நெருங்கி வருகின்ற எவரோடும் சந்தோசமாக
இனிமையான வார்த்தைகளை பேச வேண்டாம்
பசுமாட்டில் பாலை குடித்து தவநெறியை பின்பற்ற வேண்டும் பூலோக பண்ட பலகாரங்கள் தேவையின்றி சாப்பிட வேண்டாம்
==
கால் அல்லால் சுத்தம் கழுவ நினையாமல்
மூக்கு நடுவே மும்முகமும் முத்தி முத்தி
வி=காலைக் கடனை கழிக்கும் போது மட்டும் உடலை சுத்தம் செய்து விட்டு குளித்து நீராட வேண்டும் என்று நினைக்காமல்
பூலோக ஆசைகள் மீது பற்றுதல் இல்லாமல் மூக்குக்கு நடுவே நெற்றி முகப்பில் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்
==
நாக்குச் சுழி தாங்கி நாரணன் தான் எனவே
ஏகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஒர் இருப்பாய்
வி=நாக்கினால் ஓம் என்கிற அட்சரத்து கழியை மனதில் நினைத்துக் கொண்டு நாராயணராகிய என்னை நினைத்தபடியே இருந்து
ஏகாந்தமான பரவச நிலையை நீ கண்டு மிகவும் ஆனந்த மயமான நிலையில் இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும்
==
மகாபரனை நெஞ்சில் மறவாமல் எப்போதும்
கண்டு இரு என்மகனே கருத்தொன்று தான் நாட்டி
வி=மகா வல்லமைப் பொருந்திய தவப்பொருளாகிய சிவபெருமானை மனதில் நிலை நிறுத்தி சிவ சிவா அரகரா மந்திரத்தைச் சொல்லி
சிவபரம் பொருளைக் கண்களால் கண்டு ஆனந்த நிலையில் இரு என்மகனே மனம் ஒரே நிலையில் இருக்க வேண்டும்
==
கொண்டை அழுது உண்டு குவிந்திரு என்மகனே
இப்படியே ஆறாண்டு இரு நீ யுகத் தவசாய்
வி=மனதை ஒருநிலைப்படுத்தி தவம் செய்யும் போது தொண்டையில் சுரக்கின்ற அமிர்த நீரை உண்டு உன் நிலை மாறாமல் இருமகனே
இது போன்ற கட்டுப்பாடுகளாக ஆறு ஆண்டுகள் கடுந்தவம் இருக்க வேண்டும் கலியுகத்தவசாய் மகனே என்றார்
==

அப்படியே இருந்து ஆறாண்டே கழித்தால்
நினைத்தது எல்லாம் உனக்கு நிசமாய் முடியுமப்பா
உனைத்தள்ளி வேறே ஒருமூப்பும் யுகத்தில் இல்லை
வி=கலியுகத்தில் நான் சொன்னபடி மூன்று தவம் ஆறு ஆண்டுகளில் எந்த மன சஞ்சலமும் இல்லாமல் செய்து முடித்தால்
நீ நினைத்தது காரியங்கள் எல்லாம் நினைத்தப்படியே நடக்கும் நீ தர்மயுக பூமியில் முடிசூடி ஆட்சி செய்வாய்
உன்னைத் தவிர உன்னை விட உயர்ந்தவனாக இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை மகனே என்று உறுதியாக கூறினார்
==
என்னை நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும்
நீ செய்தது எல்லாம் நிரப்புத்தான் என்ம்னே
நான் நீயே அல்லாமல் நடப்பதுவும் வேறிலையே
வி=நீ எந்த காரியங்களைப் பற்றி நினைவில் நினைத்தாலும் நீ எந்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்று செய்தாலும்
என் அருமை திருவளர் செல்வனே அந்த காரியங்கள் உடனடியாக நடக்கும் நீ வைத்தது தான் சட்டம் என் மகனே
தவத்தை முடித்துவிட்டால் நீ
செய்யும் செயல்கள் எல்லாமே நியாயமானதாகத் தான் அமையும் எனமகனே
==
நான் நீதமான சர்வபரா என்மகனே
உனக்கு ஏக்க உள்ள நினைத்தபடி
மிக்க நடத்தி விரும்பி இரு என் மகனே
வி=நானும் நீயும் ஒன்றே நீயின்றி நான் இல்லை நானின்றி நீ இல்லை நீ நாராயணமாய் இருப்பாய் மனிதப்பிறவி கிடையாது
நீ உன்னை யார் என்று உணர்ந்து கொண்டால் எனக்குள்ளாகி சர்வலொகத்தையும் ஆளும் பராபரன் ஆகிவிடுவாய் என் மகனே
==
உனக்கு. ஏக்க உள்ளம் இரு நினைத்தபடி
மிக்க நடத்தி விரும்பி இரு என்மகனே
எண்ணிறந்த கோடி இயல் பாவம் செய்தோர்க்கும்
வி=நீ எதை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றாயோ உன் மனதிற்குள் நினைப்பது நினைத்தபடி உடனே நடக்கும்
நீ நினைப்பதை நல்ல படியாக நடத்தி நாட்டு மக்களோடு சந்தோசமாக இருக்க வேண்டும் என்மகனே
உன்னுடைய சக்தியானது பல பிறவிகளில் பல கோடி பாவங்கள் செய்து மொட்சம் செல்ல இயலாமல் இருப்பவர்களுக்கும்
==

நண்ணியே மோட்சம் நவிலவென்றால் உன்மனந்தான்
முக்கோடி தர்மம் உவந்தளித்த அன்போரை
வி=நீ போட்சம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலோ சொன்னாலோ உன் நினைவால் அது உடனே நடக்கும்
எல்லாப் பிறவிகளிலும் மூன்று கோடி தர்ம காரியங்களை சந்தோசமாக செய்து தர்மவானாக வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பரை
==
தக்கோடி நரகமதில் தள்ளவென்றால் உன்மனந்தாள்
உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகோடு என்மகனே
வி=மூன்று கோடி பாவங்களை செய்து அவன் செல்கின்ற நரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் உன்னால் முடியும் நீ நினைப்பது தான்
உன்னுடைய மனச்சாட்சிக்கு ஏற்க நியாயமாக நின்று செயல்பட்டவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய் என் மகனே
==
எனக்கேற்க நிற்பவரை இரட்சிப்பதும் உன்மனந்தான்
சிவனும்நீ நாதனும்நீ திருமாலும்நீ மகனே
வி=என் மனச்சாட்சிக்கு ஏற்க நியாயமாக நின்று செயல்பட்ட வர்களையும் இரட்சித்துக் காப்பது உன்னுடைய மனமே ஆகும்
சிவனாக செயல்படுவதும் நீ தான் குருவாக செயல்படுவதும் நீதான் திருமாலாக செயல்படுவதும் நீதான் மகனே
==
தவமும்நீ வேதனும்நீ சங்கமுதல் எங்கும்நீயே
அப்படியே அய்யா அரிநாதனும் உரைக்க
முப்பொருளோர் மெய்க்கும் முதலோன் மகிழ்ந்துரைப்பார்
வி=தவப்பெருளாக இருப்பதும் நீதான் அனைத்தையும் படைக்கும் பிரம்மனும் நீதான் பரலோக சங்கமாகச் செயல்படுவதும் நீதான்
மும்மூர்த்திகளின் செயல்பாடுகளும் ஒரு மூர்த்தியாகிய உனக்குள் அடங்கும் என்று அறிவுரைகளை நாராயணர் சொல்லி முடித்தார்
சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகிய முப்பொருளும் ஒரு பொருளாய் விளங்கும் வைகுண்டர் மன மகிழ்ச்சியோடு கூறுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக