வியாழன், 26 ஏப்ரல், 2018

திருமால் மக்களை சோதனை செய்தல்

இத்தருணம் அல்லால் இன்னும் எடுத்துரைப்பேன்
எல்லோருங் கைவிட்டு இருப்பார் உன்னைத் தேடாமல்
நல்லோர் மனதில் நாரணா என்றுரைப்பார்
வி=இதுபோன்ற காரியங்கள் மட்டும் அல்ல இன்னும் பல காரியங்கள் நடக்கும் அதைப் பற்றிக் கூறுகின்றேன் கேட்பாயாக
எல்லோரும் உன்னுடைய நினைப்பில் இருந்து மாறுபட்டவர்களாக உன்னைத் தேடாமல் கலியில் மூழ்கி போவார்கள்
நல்லெண்ணம் கொண்டவர்கள் மட்டும் மனதில் நாராயணா கை விட்டு விடாதே என்று கூறுவார்கள்
==
கோல விளையாட்டுக் கொஞ்சம் எடுப்பேன் நான்
தூல மறியாமல் தொல்புவி எல்லாம் மயங்கும்
அன்போர்கள் எல்லாம் ஆவியை தான் மறுகி
இன்பமுடனே ஏங்கி ஏங்கி அழுவார்
வி=காலத்தின் கோலத்தால் பூலோகத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருப்பதால் நான் கொஞ்சம் விளையாட வேண்டி உள்ளது
என்னுடைய சூட்சும தந்திரங்களை அறியாத மக்கள் பூலோக ஆசைக்கு மயங்கி வீணான வாழ்க்கை வாழ்வார்கள்
அன்பான வழியில் நடந்தவர்கள் கூட என்னை மறந்து விட்டு கெட்ட ஆவியாகிய கன்னித் தெய்வங்களை தேடுவார்கள்
மனதில் ஆனந்தம் அடைந்தவர்களாக படையல்கள் செய்து மெய் மறந்து கண்ணீர் வீட்டு கதறி கதறி அழுவார்கள்
==
இத்தனை நாளும் இவரை நம்பி நாமிருந்து
புத்தியது கெட்டோம் என்று மிகப் பேதலிப்பார்
வி=பேய் பிசாசுகளின் ஏமாற்று வேலைகளைக் கண்டு மகிழிந்து இவ்வளவு காலமும் அய்யாவை நம்பிய நமக்கு பலன் இல்லை
அறிவு கெட்டு அறியாமையால் கேட்டு பொய் விட்டோம் என்று மனதில் கலிபுத்தி உருவாகி பேதலித்து நிற்பார்கள்
==
அப்போது ஆகா அன்னீச மாபாவி
இப்போது கண்டது என்பான் ஏலமே சொன்னதெல்லாம்
எய்த்தான் என்பான் அன்போரை இடுக்கம் செய்தே அடிப்பான்
வி=மக்கள் வழி தவறி உண்மைக்கு மாறான செயலில் ஈடுபடும் போது கலியில் மூழ்கிப் போன கலியன் புத்துயிர் பெற்றது போல்
வைகுண்டரை இப்போது கண்டது யார் சொல்லுங்கள் பார்ப்போம் என்பான் முன்னமே இதுபோன்று நடக்கும் என்று சொன்னது எல்லாம்
அறிவுக் கெட்ட மக்களுடைய வீண் பேச்சு என்பான் வைகுண்டர் வழியில் உள்ள அன்பு மக்களை துன்பப்படுத்தி அடிப்பான்
==
சூட்சமுடனே சொரூபம் ஒன்று நான் எடுப்பேன்
வி=இது போன்ற செயல்கள் பூமியில் நடக்கும் போது தந்திரமான முறையில் யாருக்கும் தெரியாமல் நான் ஒரு உருவம் எடுப்பேன்
==

அதுதான் ஒருகாலம் அதிக மகனே கேளு
இதுபெரிய சூட்சம் என்மகனே கேட்டு இருநீ
அதின் மேலே அன்போர் அதிகப் பெரியோராம்
வி=நான் மாயமான முறையில் உருவம் எடுப்பது ஒரு காலக் கட்டம் ஆகும் அப்போது என்ன நடக்கும் என்று கூறுகிறேன் கேள் மகனே
இது கேட்பதற்கே ஆச்சிரியமாக இருக்கின்ற மாயத்தந்திரம் ஆகும் என் மகனே அதையும் நீ தெரிந்துக் கொள்வாயாக
கலியில் இருந்து விடுபட்டு ஆன்ம அறிவுள்ளவர்களாக நடக்கும் அன்பர்கள் மிகவும் பேறு பெற்றவர்கள்
==
இதின் மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே
பின்னுமொரு சூட்சம் பிரமாணமாய் எடுப்பேன்
வி=கலியனுடைய தீய எண்ணங்களையும் தீய செயல்களையும் தாண்டி இறைஞானம் பெற்ற எல்லோரும் வல்லவர்களே
நான் இன்னும் ஒரு தந்திரமான முறையில் சொன்ன வாக்குத் தவறாமல் சத்திய வாக்குமேல் செயல்படுவதைக் கூறுகிறேன்
==
பன்னு மணியே பராபரமே கேட்டு இரு நீ
குளத்தைத் தட தடெனக் கொந்துக் கொந்தாய் உடைந்து
வி=பலமுறை ஆராய்ந்து செயல்படும் அறிவுள்ள நவெரத்ன மணியே பரம் பொருளாக இருப்பவனே தெரிந்து கொள்வாயாக
விவசாயத்திற்கு நீர் நிறைத்து வைத்திருக்கும் குளத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து அதை நிலப்பகுதியாக ஆக்கிரமிப்பார்கள்
==
சுழற்றுக் கனல் அக்கினியும் துர்க்கை மகா துர்க்கையையும்
விட்டு அயச்சு மாநிலத்தில் விளையாடியே திரியும்
வி=நீர் நிலைகள் இல்லாமல் குறைந்து தலைச் சுற்றுகிற அளவில் வெப்பத்தையும் வெப்பத்தால் துர்க்கை மூலம் நோய்களும் உருவாகும்
தீமை விளைவிக்கும் துர்க்கையை அனுப்பி இத்த பூமியில் கலியை அழிக்க சில விளையாட்டுக்கள் நடக்கும்
==
கட்டணங்களாக கனமாய்க் குழு குழு என
ஓடுவார் பதறி விழுவார் அறம் மெலிந்து
நாடும் பெரியோர் நலமாக வாழ்ந்திருப்பார்
வி=மரம்.செடி கொடிகளை எல்லாம் அழித்து மிகப்பெரிய கட்டடங்களும் வீடுகளும் கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள்
ஆடம்பர வாழ்க்கையைத் தேடி அங்குமிங்குமாக ஓடுவார்கள் பணத்துக்காக அநியாயமாக வழி தவறிப் போவார்கள்
இறை சிந்தனையோடு இருக்கின்ற ஞான அறிவுள்ளவர்கள் உன்மீது பற்றுதலோடு தெய்வீக வாழ்க்கை வாழ்வார்கள்
==
என்மகனே உன்காலம் இன்னும் வகுப்பேன்கேள்
வி=என் அருமை மகனே நீ வைகுண்டராக இருக்கின்ற காலத்தில் இன்னும் என்ன நடக்கும் என்று கூறுகிறேன் கேட்பாயாக
==

பொன்மகனே பூமியிலே பின்னும்ஒரு காரணங்கேள்
கெட்ட நசுறாணி கெம்பிக் கடைக்காலம்
மொட்டைத்தலை வருவான் முளையன் அவன் ஓடுவான்
வி=பொன் போன்ற என் கண்ணுமகனே இந்த பூமியில் நடக்கும் இன்னொரு சம்பவத்தைக் கூறுகிறேன் கேள்
கேரள நாட்டை ஆண்டு வந்த
இராணி கௌரிபாய் காலத்தில் தோள்சீலைப் போராட்டம் நடந்தது அதில் சாணார் தோள்சிலை அணியக்கூடாது என்று சொல்லிவிட்டு பதவி விழகினாள்
அந்த ராணிக்கு பிறகு சுவாதி திருநாள் என்கின்ற மன்னன் பெண் ஆடம்பர பிரியன் ஆட்சிக்கு வருவான் அவனோடு கலி ஆட்சி முடியும்
==
ஆடிக் கொண்டாடி அங்கும் இங்கும் தான்அலைந்து
ஓடிக் கொண்டாடி ஒன்று போலே மாள்வான்
மகனே உன்காலம் மகிழ்ந்திரு என்மகனே
வி=சான்றோரைக்(நாடார்) கொடுமைப்படுத்தி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி அரசப் பொறுப்போடு கேரளாவிற்கும் சுசீந்திரத்திற்க்கும் அலைந்து
வைகுண்டரைக் கொண்டு சென்று கொடுமைப்படுத்தி அந்த கர்மவினையின் பயனாக மன்னர் ஆட்சி அடியோடு அழியும்
மகனே உன்னுடைய லட்சியங்கள் எல்லாம் நிறைவடையும் இது உன் காலத்தில் நடக்கும் நீ சந்தோசமாக இரு என் மகனே
==
உவமை ஒன்று சொல்லுகிறேன் உற்பனமாய் கேள்மகனே
வி=மகனே நான் உன்னிடம் உவமை போல் ஒரு கதையைச் சொல்கின்றேன் கவனமாய் கேட்டுக் கொள்வாயாக
==
புத்திரனுக்கே குருவும் புகன்றது எல்லாம் புகன்றாலும்
சுற்றம் ஒரு சூட்சத் தொழில் உண்டு மாயானுள்
வி=தன்னுடைய மாணவனுக்கு குருவாக இருக்கின்றவர் சொல்லிக் கொடுக்க வேண்டியவை எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தாலும்
தான் பெரியவன் என்பதற்காக தந்திரமாக ஒரு வித்தையை தனக்குள் வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு இது உண்மையாகும்
==
அத்தனையும் என்னுள் அடக்கமில்லை என் மகனே
வி=குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவைப் போல் நான் உன்னிடம் நடக்கவில்லை எந்த ரகசியமும் என்னிடம் இல்லை மகனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக