கலியன் பூலோக வரவும் நல்லவை நிலையம்*****
தர்மமாய்ப் பூமிதான் இருக்கும் நாளையிலே
வர்மமாய் நீசன் வரவே கண்ட புவியில்
நல்ல பறவை நல்மிருகம் ஊர்வனமும்
வல்ல வகை நீதம் மாற்றம் கேள் அன்போரே
வெள்ளானை வெள்ளை வேங்கையொடு வெண்கடுவாய்
தள்ளாத சர்ப்பம் தலை ஐந்து கொண்டதுவும்
வெள்ளைஅன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில்
கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன்
நல்ல அனுமான் நாடும் காண்டாமிருகம்
வல்ல வெண்நரிகள் வளர்ந்துவரும் வெண்காகம்
ஆளியொடு சிங்கம் ஆனை இறாஞ்சிப் புள்ளும்
வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்அணில்கள்
மிருகம் அதில் வெள்ளைகொண்ட மேன்மிருகம் ஆனதெல்லாம்
அரிய வைகுண்டமது நோக்கிப் போயிடவே

---------
உரை
---------
கலியன் பூலோகம் வந்ததை கண்ட பூலோகத்தில் வாழ்ந்து வந்த நல்ல மிருகங்கள், பறவைகள், ஊர்வனங்கள் மிகச்சிறப்புப் பொருந்திய நீதங்கள் எல்லாம் அடைந்த மாற்றங்களைப் பற்றி நாராயணர் இனிச் சொல்லுகிறார். பக்தர்களே, கேளுங்கள்.
வெள்ளானை, வெள்ளை வேங்கை, வெண் கடுவாய், ஐந்து தலைகள் கொண்ட பாம்பு, வெண்மையான அன்னம், வெண்மையான குயில்கள், வெண் புறாக்கள், வெள்ளை மயில், கள்ளமில்லா வெண் சாரை, அதிக பலமுள்ள வெண் கருடன், நல்ல அனுமான், நன்மை நாடும் காண்டா மிருகம், பலமுள்ள வெள்ளை நரிகள் நல்ல முறையில் வளரும் வெண்மையான காக்கைகள், ஆளி, சிங்கம், ஆணை இறாஞ்சிப் புள், வேளிசை வெண் கலைமான், வெண் புள்ளு, வெள்ளை அணில்கள் எல்லாம் அடைவதற்கு அரிய வைகுண்டம் நோக்கிச் சென்றன.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக