திருமால் ஆறுதல் கூறுதல்*****
பாண்டவரைத் தர்மமதைப் பார நீதமதையும்
ஆண்ட வைகுண்டம் அடையப் போம் என்றுரைத்தார்
தெய்வக் காராவைச் சிறந்த வெள்ளானைகளை
மெய்வரம்பு கொண்ட மிகுந்த மிருகம் எல்லாம்
கும்பக் குருமலையில் கூடியே நீங்கள் எல்லாம்
சாம்ப சதாசிவத்தைத் தான்போற்றி உள்ளிருத்தி
நீசன்தனை அறுத்து நீத யுகந்தான் ஆள
வாசமுடன் மாயன் வரவே வரம் வேண்டி நில்லும் என்று

---------
பாண்டவர்களே, தருமநீதமே, ஏனைய தெய்வநீதம், மனுநீதம் ஆகியோரே, நீங்கள் உயர்வு பொருந்திய வைகுண்டத்தை அடைவதற்குச் செல்வீர்களாக" என்று திருமால் கூறி அனுப்பினார்.
பிறகு, திருமால் தெய்வத் தன்மை பொருந்திய பசுக்களையும், சிறந்த வெள்ளை யானைகளையும் நீதி நிலையிலிருந்து பிறழாத மிருகங்களையும், நோக்கி, "நீங்கள் எல்லாரும் கும்பக்குரு மலையில் சென்று, ஒற்றுமையாய்க் கூடியிருந்து, சாம்ப சதாசிவ மூர்த்தியைத் துதித்து, மனத்தின்கண் நிலை நிறுத்தி, நீசனாகிய கலியனை அறுத்து நீதி பொருந்திய தருமயுகத்தை ஆளுவதற்காகத் திருமால் வர வேண்டும். அதற்கு வரம் தந்தருள வேண்டும் என்று தவத்தில் நில்லுங்கள்" என்று கூறி விடை கொடுத்தார்.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக