சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கலியுகப் பிறப்புப் பற்றி ஈசர்*****
நீசனையும் ஊரே போ என்று நிமலனுந்தான்
ஈயுகிற போது ஏற்ற சக்தி ஏதுரைப்பாள் 
வன்ன சிவனாரே மாபாவி கேட்ட வரம்
என்னென்ன வாயமதாய் இருக்குதுகாண் உத்தமரே
வலியான மாதே மாநீசன் கேட்டதுதான்
கலியுகம் போலிருக்குக் கண்ணமுதே என்றுரைத்தார்
சிவம் வாய் திறந்து செப்பக் கலியுகம் என்று
இதமான தேவர் எழுதினார் ஆகமத்தில்
---------


உரை
---------
நீசன் தனது இருப்பிடம் செல்ல விடை கேட்டதும், "நீ உனது இருப்பிடம் செல்" என்று ஈசர் கூறினார். நீசனுக்கு விடை கொடுத்து அவன் சென்றதும் சக்திதேவி, ஈசரை நோக்கி "எல்லா வல்லமையும் பெற்ற சிவனாரே, மாபாவி நீசன் கேட்ட வரங்கள் என்ன என்ன தந்திர முறையில் இருந்தன பார்த்தீரா? அஃது ஏன் உத்தமரே?" என்று வினவினாள்.
உடனே ஈசர், "கற்புவலி பொருந்திய பெண்ணே, என் கண்ணமுதே, மாநீசன் கேட்ட வரத்தின் தந்திரத் தன்மைதான் கலியுகத்தின் ஆரம்பம் போல் இருக்கிறது" என்று பதிலுரைத்தார்.
இவ்வாறு சிவனார் வாய் திறந்து "கலியுகம்" என்று சொல்லவும், மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் அதை உடனே ஆகமத்தில் எழுதிக் கொண்டனர்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக