சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கலைமுனி ஞானமுனி தவசும் திருமால் சந்திப்பும்*****
செப்போடு ஒத்த திருமாலே நாங்களுந்தான் 
கயிலாசம் மீதில் கறைக்கண்டர் பாதமதை 
ஒயிலாகப் போற்றி ஒழுங்காய் இருந்தவர்காண்
இருக்கும் அந்த நாளையிலே எங்கள் இருவரையும்
தருக்கு உகந்த ஈசர் எம்மை அவர் வருத்தி
மாயன் மேற்பிறக்க மண்ணு லோகந்தனிலே
காயம் இழந்து காணாது உருவெடுத்து
மறைந்து இருக்கிறார் எனவே வானோர்கள் சொல்வதனால்






உரை
---------
"செப்போடு ஒத்த திருமாலே, நாங்கள் கைலாசத்தில் ஈசருடைய பாதங்களை மிகவும் ஒய்யாரமாகத் துதித்துக் கொண்டிருந்தவர்கள் என்பதை அறிவீராக. இவ்வாறு அங்கு இருக்கின்ற சமயத்தில், எங்கள் இருவரையும் ஈகை குணமுள்ள ஈசர் அழைத்து, 'முனிவர்களே, வானோர்கள் எல்லாரும், திருமால் மீண்டும் பிறப்பதற்காகப் பூலோகத்தில் உடலை இழந்து காணாத உருவத்தோடு மறைந்து இருக்கின்றார் என்று சொல்லுகின்றனர். ... ...
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக