சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கலியன் பூலோக வரவும் நல்லவை நிலையம்*****
கர்ம கலியதனால் கடல் கோபித்தே அடிக்க
தர்மம் தலைகவிழ்ந்துதான் இருந்தது அம்மானை 
தருமம் மெய்நீதிமதும் தாரணியில் ஊர்வனமும்
பொறுமையுடைய பெரிய மிருகமதும்
நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும்
தாகமுள்ள முத்து சாத்திர மாமறையும்
நீதத்தோர் எல்லாம் நீலவண்ணர் சங்குடனே
பாதத் திருக்குண்டம் பாதை அவை வழிதாம் நடந்தார்
நடந்தோர்கள் எல்லாம் நாடி வழி வரவே
கடந்தார்கள் வல்ல கலியை விட்டுக் காடதிலே
---------



உரை
---------
கொடிய வினைகளையுடைய கலியன் வரவினால் கடல் அலைகள் கோபத்துடன் அடித்தன. தரும நீதம், தெய்வ நீதம், மனு நீதம் ஆகியவையும் எல்லாம் கவிழ்ந்து கொண்டன. இவ்வுலகத்திலுள்ள ஊர்வனங்களும், பொறுமையுடைய பெரிய மிருகங்களும், நாகமணி, தங்கமணி, நவரத்தின மாமணிகள், பிரகாசிக்கும் முத்துக்கள், சாத்திரங்கள் , உயர்வான வேதங்கள் ஆகிய நீதியுள்ளவைகளும் சங்கோடு காட்சியளித்துக் கொண்டிருக்கும் நீலவண்ணத் திருமாலின் பாதங்களை அடைய வைகுண்டத்தின் வழியாக நடந்தன. இவ்வாறு வைகுண்டத்தை நோக்கிப் புறப்பட்டவை எல்லாம் கலி ஆட்சி செய்யும் தேசத்தைவிட்டு நடந்து காட்டிற்குள்ளே சென்றன.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக