சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கலைமுனி ஞானமுனி தவசும் திருமால் சந்திப்பும்*****
ஞான முனிவனோடு நல்ல கலைமுனிவன்
தானமுள்ள மாமுனிவர் தலை கவிழ்ந்தே தவசு 
சடைத்து முகம் வாடித் தானிருக்கும் அப்போது
திடத்தமுடன் நல்ல திருமால் அருகேகி
நன்றியுள்ள மாமுனியே நல்ல கயிலாசமதில்
கண்டது உண்டே உங்களையும் காட்டில் வந்தவாறு ஏது
அப்போது மாமுனிவர் ஆதி பதம் பணிந்து
---------





உரை
---------
இவ்வாறு திருமால் ஸ்ரீரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது, ஞானமுனி, கலைமுனி இருவரும் தலை கவிழ்ந்த வண்ணமாக முகம் வாடி உடம்பு எல்லாம் சோர்வுற்றுத் தவத்தில் இருந்தனர்.
அவர்களைப் பார்த்த திருமால் அவர்கள் அருகில் சென்று, "நன்றியுள்ள மாமுனிகளே, நான் உங்களைக் கயிலாசத்தில் கண்டிருக்கிறேனே. நீங்கள் இக்காட்டில் தவம் செய்வானேன்?" எனக் கேட்டார்.
அப்பொழுது, முனிவர்கள், அவருடைய பாதங்களை வணங்கி, ... ...
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக