சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*நீசன் ஈசரிடம் விடை பெறுதல்*****
என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி
மன்றுதனில் போக வரந்தாரும் என்றுரைத்தான் 
அப்போது தன்னில் ஆண்டி அவர் அங்குச் சென்று
இப்போது இங்கே இவன்தான் மொழிந்தது எல்லாம்
தப்பாமல் ஆகமத்தில்தான் எழுதி வையும் என்றார்
ஆகமத்தில் பதித்து ஆண்டார் துரிதமுடன்
நாகரீகநாதன் நடந்தார் ஸ்ரீரங்கமதில்
---------


உரை
---------
ஈசரிடம் சென்று தான் பெற்ற அனைத்து வரங்களையும் நினைத்து அன்புடன் அவரை வணங்கி, "பூலோகம் செல்ல அனுமதி தர வேண்டும்" என்று கூறி விடை வேண்டினான்.
ஈசரிடம் நீசன் விடை பெற்றுக் கொண்டிருக்கும் அதே சமயம், திருமால் ஆகமக் கணக்கை வைத்திருக்கும் தேவர்களிடம் சென்று "என்னிடம் நீசன் கூறிய ஆணை மொழிகளை எல்லாம் தவறு வராவண்ணம் ஆகமத்தில் எழுதி வையுங்கள்" என்று கூறினார். இவ்வாறு நீசனின் ஆணைமொழிகளை ஆகமத்தில் பதித்துவிட்டுத் திருமால் வேகமாக ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தார்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக