கலைமுனி ஞானமுனி தவசும் திருமால் சந்திப்பும்*****
துனிப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம் வைத்து
ஏகினோம் கயிலை இடைவழியில் மாநீசன்
தாவி வரக்கண்டு தவலோகமே மறந்து
கர்ம விதிப்பயனால் கலக்க மிகஅடைந்து
தர்ம சிறப்பு இல்லாது தலைகவிழ்ந்து இருந்தோம் என்றார்
அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும்
இப்போது கூட்டி ஏகுகின்ற அப்பொழுது
கருங்குரங்கு காரானை கரிய கடுவாய் புலியும்
இருங்கருடன் ஊர்வனமும் எறும்பு ஈ மூட்டைகளும்
கள்ள கசடுள்ள கரிய மிருகமதும்
கொள்ளை கொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும்
தரந்தரமாய்க் கூடித் தாமே திரளாக
உரை
---------
ஈசர் சொன்னபடி கடலைப் பயமுறுத்திச் சொல்லி, ஈசர் கூறிய விதி முறைகளையும் எடுத்துக் கூறினோம்.
பிறகு, கயிலையை நோக்கிச் சென்றோம். இடைவழியில் மாநீசன் விரைவாக வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் கயிலையை மறந்து, முன்வினை விதியின் பயனால் உள்ளம் கலங்கித் தருமநீதம் இழந்து தலை கவிழ்ந்து இங்கே தவசு இருந்தோம்" என்றனர். இதைக் கேட்ட திருமால் முனிவர்களைத் தம்மோடு அழைத்துச் சென்றார். அச்சமயம் கருமையான குரங்குகளும், யானைகளும், கடுவாய்களும், புலிகளும், கருமையான கருடக் கூட்டமும், ஊர்வனங்களும், எறும்புகளும், ஈக்களும், மூட்டைப் பூச்சிகளும் கள்ளத்தனமான கருமையான மிருகங்களும், பிறர் பொருளைக் கொள்ளை கொள்ளும் எண்ணமுள்ள ஊர்வனங்களும், வஞ்சக எண்ணம் பொருந்திய பறவைகளும் இனம் இனமாகக் கூடித் திரளாக வந்து கொண்டிருந்தன.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக