சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

*கலியன் பூலோக வரவும் நல்லவை நிலையம்*****
பொன்று வந்து லோகம் பொய் பூண்டது ஆனதனால் 
எங்களுக்கு அங்கே இருந்தால் ஆகாது எனவே
செங்கண் மால் ஆயனைத் தேடியே போறோம் என்றார்
அப்போது பாண்டவர்கள் அன்பரிய அவர்பதம் பணிந்து
இப்போது உங்களையும் இழந்துவிட்டு இங்கிருந்தால்
கர்ம கலி மூழ்கிக் காண்பது இல்லை குண்டமது
தர்மத்தோடு அங்கேதான் வருவோம் நாங்கள் என்றனர்
தர்மமும் நீதமதுவும் தாட்டீக பாண்டவரும்
வர்மம் இல்லாக் குண்டம் வழி நோக்கிச் செல்கையிலே





உரை
---------
தருமநீதம் தருமரை நோக்கி, "கலியினால் இவ்வுலகில் அழிவு வந்து பொய் பற்றிக் கொண்டதால் நாங்கள் அங்கே இருக்க முடியாது. எனவே அழகு பொருந்திய கண்களையுடைய திருமாலைத் தேடிச் செல்லுகின்றோம்." என்றது
உடனே, பாண்டவர்கள் அன்புக்குரிய அவர்கள் பாதத்தை வணங்கி, "இப்பொழுது உங்களையும் பிரிந்து இங்கே நாங்கள் மட்டும் இருந்தால் கொடிய வினை சூழ்ந்து கலியில் மூழ்கி நாங்கள் எப்பொழுது வைகுண்டத்தைக் காண்போம்? எனவே உங்களோடு நாங்களும் வருவோம், அறிவீராக" என்றார்.
அதற்குச் சம்மதித்த தருமநீதமும், ஏனைய நீதங்களும், வீரமான பாண்டவர்களும், துன்பம் இல்லாத வைகுண்டத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக