கலியன் பூலோக வரவும் நல்லவை நிலையம்*****
சங்கு சமூலம் சலக்கண் சலத்தில் விழ
பொங்கும் நவரத்தினமும் போகவழி தேடிடுமாம்
கடல் விளைவு எல்லாம் கண்காணாதே மறைய
தடவரையில் உள்ள தங்கமது மண் நோக்க
சிலைகள் பதிகள் தெய்வத் திருச்சமூலம்
அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய் மறைய
மாரி மறைய மலர்க்கா மிகமறைய
ஏரி பாழாக எண்ணினதே அம்மானை
சங்கு சமூலம் சலக்கண் சலத்தில் விழ
பொங்கும் நவரத்தினமும் போகவழி தேடிடுமாம்
கடல் விளைவு எல்லாம் கண்காணாதே மறைய
தடவரையில் உள்ள தங்கமது மண் நோக்க
சிலைகள் பதிகள் தெய்வத் திருச்சமூலம்
அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய் மறைய
மாரி மறைய மலர்க்கா மிகமறைய
ஏரி பாழாக எண்ணினதே அம்மானை
---------
உரை
---------
மதிப்புயர்ந்த திரிசங்குகளும், சகல வித்தைகளின் மூல இரகசியங்களும், மிக ஆழமான நீரினுள்ளே விழுந்து மறையவும்; பொங்குகின்ற அழகையுடைய நவரெத்தினங்கள் கலியன் ஆட்சியைவிட்டுப் போகவும் வழி தேடின. கடலின் உள்ளே விளைந்த பொருட்கள் எல்லாம் கண் காணாத ஆழத்தில் போய் மறைந்து கொள்ள எண்ணின.
இந்தப் பரந்த பூவுலகில் உள்ள தங்கக்கட்டிகள் எல்லாம் மண்ணினுள் போய் மறைந்துக் கொள்ள எண்ணின. தெய்வச்சிலைகள், கோவில்கள், கடவுளைப் பற்றிய உயர்வு பொருந்திய சகலவித மூலஇரகசியங்கள் ஆகியவை கடல் அலையின் உள்ளும் பூமியின் உள்ளும் போய் மறைந்து கொள்ள எண்ணின. ஒழுங்காக மூன்று முறை பெய்யும் மழை, நிலை புரளவும்; மலர்கள் நிறைந்த வனங்கள் மறைந்து விடவும்; ஏரிகள் பாழாகி விடவும் எண்ணின.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக