சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

திருமால் ஆறுதல் கூறுதல்*****
நற்பாக நீங்கள் நற்றவசு செய்யும் என்று
சர்ப்பம் அதுக்காகச் சங்கு வெள்ளை சாரைதனைப் 
பற்ப கிரிதனிலே பைம்பொன் நிறப் பொய்கையிலே
வம்பை அழித்து வாய்த்த தர்ம ராச்சியத்தில்
அன்பரோடே அரசு ஆளத் திருமால் வரவே
வேணும் என்று நிட்டை விரும்பிச் செய் என்றேதான்
ஆணுவநாதன் அதற்கு விடைகொடுத்தார்
அன்னப் பட்சியான அதிக பறவைகளை
பொன்னம்பல கிரியில் போய்த் தவசு பண்ணும் என்றார்
---------



உரை
---------
இவ்வாறு "நீங்கள் சிறப்பாகத் தவசு செய்யுங்கள்" என்று கூறி எல்லாரையும் அனுப்பிவிட்டு, சங்கு நிறச் சாரைப் பாம்பை பார்த்து, "நீ பற்பகிரியில் ஓடுகின்ற பசும்பொன் நிறத்தையுடைய பொய்கையில் சென்று, வம்பாகிய கலியை அழித்து வரவிருக்கும் தரும இராச்சியத்தை அன்பரோடிருந்து அரசாளத் திருமால் வர வேண்டுமென்று விரும்பித் தவம் இருங்கள்" என ஆணுவநாதன் விடை கொடுத்தார். அங்கு நின்ற அன்னப் பறவைகளைப் பார்த்து.
"நீங்கள் பொன்னம்பல கிரியில் போய் அவர்களைப் போன்று வரம் வேண்டித் தவமிருங்கள்" என்று கூறி அனுப்பினார்.
---------------------
அய்யா உண்டு
---------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக