சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

கலியன் பூலோக வரவும் நல்லவை நிலையம்*****
மாயனுக்கு ஆணை மாநீசன் இட்டது எல்லாம்
தூய பெருங்கணக்கில் சேர்த்து எழுதி வைத்தனராம் 
நீசக் கலியன் நிறைவோன் பதம் போற்றித்
தேசமதில் வரவே சென்றான்காண் அம்மானை
கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே
சிலிர் எனவே லோகம் துணுக்கிடவே அம்மானை
---------



உரை
---------
நீசன் திருமாலுக்குக் கொடுத்த ஆணை மொழிகளை எல்லாம் ஏற்கெனவேயுள்ள உண்மையான பெருங்கணக்கில் சேர்த்து எழுதி வைத்தனர்.
நீசம் பொருந்திய கலியன் ஈசர் பாதங்களைப் போற்றி வணங்கிப் பூலோகம் வர நடந்து கொண்டிருந்தான்.
இவ்வாறு கலியனும் கலிச்சியும் சேர்ந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென அமைதியாக இருந்த பூலோகம் துணுக்குற்றுது.
தரும நீதிகளோடு பூலோகச் சீவன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பொழுது, கேடும் வஞ்சனையும் பொருந்திய கலியன் கலிச்சியுடன் பூலோகத்துக்கு வந்து சேர்ந்தான்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக