கலியன் பூலோக வரவும் நல்லவை நிலையம்*****
பால் நிறமான பட்சி பறவைகளும்
மேலாம் பரனார் குண்டம் மிகநோக்கி நாடிடவே
வெஞ்சாரை ஐந்துதலை விஷஅரவம் ஆனதெல்லாம்
துஞ்சாத நாதன் துணை தேடி நாடிடுமாம்
முன்னிருந்த சாத்திரமும் முறையும் பஞ்சாங்கமதும்
பின்வந்த நீசனினால் போக வழி தேடிடுமாம்
நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபங்கள்
போய் அகல்வோம் என்று புத்திதனில் எண்ணிடுமாம்
முன்னிருந்த இரத்தினங்கள் முத்து வைடூரியங்கள்
பன்னு மறை சாத்திரமும் பாதையது கொண்டிடுமாம்

---------
உரை
---------
வெண்ணிறமான பட்சிகளும் பறவைகளும் வைகுண்டத்தை நாடிச் சென்றன. வெண் சாரை, விஷத்தையுடைய ஐந்து தலை நாகங்கள் ஆகியவை எல்லாம் திருமாலை நாடிச் சென்றன.
மிகுந்த முன் சாத்திர முறைகள், பஞ்சாங்க முறைகள் ஆகியவை எல்லாம் நீசன் வரவினால் சீக்கிரமாக ஓடிவிடும் நிலைக்கு உள்ளாகின.
நீசன் வரவுக்கு முன்பிருந்த நல்ல நீத நெறிகள் எல்லாம் "இனிப் போய் விடுவோம்" என்று மனதில் எண்ணமிட்டன. முன்பிருந்த இரத்தினங்கள், முத்துக்கள், வைடூரியங்கள், மிகவும் பழமையான வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவை வைகுண்டத்தைத் தேடின.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக