கலைமுனி ஞானமுனி தவசும் திருமால் சந்திப்பும்*****
சிறந்த புகழ் மாயனுக்குத் தேரும் சிங்காசனமும்
மண்டபங்கள் மேடை வாய்த்த நீராவிகளும்
பண்டுள்ள நல்ல பைம்பொன் நிறப் பொற்பதியும்
உண்டுகாண் துவாபர யுகத்திலே என்று சொல்லி
கண்டு கொண்டானானால் கலியன் அதை ஆண்டு கொள்வான்
முன் போய்தான் நீங்கள் உவரிதனை வருத்தி
இன்பமுள்ள இவ்வகைகள் எல்லாம் அதனுள்ளே வைத்து
வைகுண்டர் அங்கே வந்தால் இதைக் காட்டி
மெய்கொண்ட உங்கள் இடத்திலே போவும் என்றும்
அல்லாதே போனால் அக்கினியால் உங்களையும்
இல்லாதே செய்வார் என்றும் சொல்லி வாரும் என்று
அனுப்பினார் எங்களையும் அதற்காக இங்கு வந்தோம்
உரை
---------
... ... துவாபரயுகத்தில், சிறந்த புகழையுடைய திருமாலுக்குரிய தேரும், சிங்காசனமும், மண்டபங்களும், மேடைகளும், குளங்களும், நல்ல பைம்பொன்னிறக் கோட்டைகளும் இருந்தன. அவற்றைக் கலியன் கண்டு கொண்டால் கவர்ந்து கொள்வான். எனவே, நீங்கள் திருமால் அங்கே பிறப்பதற்கு முன்னால் போய், அவர் வாழ்ந்த கடலினை அழைத்து, இன்பப் பொருளான இவற்றை எல்லாம் அதனுள்ளே பாதுகாக்கும்படி கூறி, வைகுண்டர் இங்கே வந்தால் அவற்றை அவருக்குக் காட்டிக் கொடுத்துவிட்டு உங்கள் நிலையான இடத்திற்குச் செல்லுங்கள் என்றும், அதற்கு மாறாக ஏதாவது நடந்தால், 'கடலாகிய உன்னை அக்கினியால் அழியச் செய்வார்' என்றும் சொல்லி வாருங்கள்' என்று எங்களை அனுப்பினார். அதற்காக நாங்கள் இங்கே வந்தோம்.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக