கலியன் பூலோக வரவும் நல்லவை நிலையம்*****
காடதிலே செல்லக் கனத்த பஞ்ச பாண்டவர்கள்
வாடல் உடலாய் வைகுண்டம்தான் ஏக
கண்டாரே தர்மர் கடந்து நின்ற நீதம் அதை
பண்டாரத் தர்மர் பகர்ந்தார் அதனோடு
நாட்டிலுள்ள நீதம் எல்லாம் நடந்து காணாதே சென்றால்
வீட்டில் உறுதியுள்ள மேல்வீடு காண்பதற்குப்
போவேனோ தர்மமது பொன்றினால் நானடியேன்
சேர்வோனோ குண்டம் செய்தர்மம் இல்லை என்றால்
என்றுரைக்கப் பாண்டவர்கள் இயல் தர்மம் ஏதுரைக்கும்

---------
உரை
---------
அங்கே (காட்டிலே) மிகவும் பெருமைக்குரிய பஞ்சபாண்டவர்கள் இருந்தார்கள். அப்பொழுது, வாடிய உடலுடன் செல்லும் தருமநீதம், தெய்வநீதம், மனுநீதம் ஆகியவற்றைத் தருமர் கண்டார். உடனே அவற்றை நோக்கி "அன்புடைய நீதங்களே, நீங்கள் எல்லாம் இந்த நாட்டைவிட்டுக் கண்காணாத தூரத்திற்குச் சென்றுவிட்டால் வீடுகளில் சிறந்த வீடாகிய வைகுண்ட வீட்டைக் காண அடியேன் போக முடியுமா?" என்று தருமர் கேட்டார்.
---------------------
அய்யா உண்டு
------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக