திருமால் ஆறுதல் கூறுதல்*****
ஐந்துதலை நாகமதை அந்த முனிதான் அழைத்து
உன்றனுக்குச் செய்தி உரைக்கிறேன் கேள் எனவே
அலைமுகத்தில் நூற்றொன்று ஆழம்வரை கீழே
நிலைதனிலே நின்று நெடியோனை உள்ளிருத்தி
கலியை அழித்துக் கடிய தர்மமாகவேந்தன்
வலிய யுகம் ஆளுதற்கு வைகுண்டம் வா எனவே
நிற்பாய்த் தவசு நீ போ என அனுப்பி
உரை
---------
ஐந்து தலை நாகத்தை அவர் அழைத்து, "ஐந்து தலை நாகமே, உனக்கும் ஒரு செய்தி கூறுகின்றேன், நீ கேட்பாயாக, நீ அலைகள் உருவாகின்ற கடல் முகத்தில் நூற்றியொரு அடி ஆழத்துக்குக் கீழே நெடியோனாகிய திருமாலை மனதுள் தியானித்துக் கலியை அழித்துக் கடினமான தருமயுகத்தை ஆளுவதற்கு வைகுண்டமாகிய திருமால் வர வேண்டும் என்று தவம் செய்வதற்குப் போவாயாக" என்று கூறி அனுப்பினார்.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக