சனி, 28 ஏப்ரல், 2018

அகிலத்திரட்டு அம்மானை-மூலமும் உரையும்

திருமால் ஆறுதல் கூறுதல்*****
நிற்கும் அளவில் நீலவண்ணர் தாம் அறிந்து 
பக்குவப் பிராயப் பண்டாரமாகி வந்து 
ஏதுகான் நீங்கள் இந்த வனவாசமாதில்
ஓதிக் கரைய உங்கள் விதியானது என்ன
இப்போது சொல்லும் என்று அவர்தான் உரைத்திடவே




உரை
---------
இவ்வாறு வைகுண்டத்தை நோக்கிச் செல்லுகின்றவை எல்லாம் அந்தக் கடுமையான காட்டில் நின்றன. இதை அறிந்த நீலநிறத் திருமால் வயதான பண்டார உருவெடுத்து அங்கே வந்து அவற்றை நோக்கி, "நீங்கள் எல்லாரும் இந்த வனவாசத்தில் இருக்கக் காரணம் என்ன? இங்கிருந்து இறைவனை நினைந்துருகி அவன் நாமத்தை ஓதி அழுது கண்ணீர்விட உங்களுக்கு நிகழ்ந்த விதிமுறை என்ன? இப்போது சொல்லுங்கள்." என்று கேட்டார்.
---------------------
அய்யா உண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக