நடை*****
என்தாய் மொழிந்த இயல் அடையாளத்தாலே
முன்தானே பெற்ற முதல் அவார்தான் என்றனுக்கு
அய்யாதான் ஆகும் அடைக்கலமே யாம் அடியார்
பெய்யாமல் என்றன் பேர் அனுமன் கண்டீரே
இலங்கைதனைச் சுட்டு இலட்சுமியைக் கூட்டிவர
மலங்காதே போ என்று வாக்கு அருள வேணுமையா ...

---------
உரை
---------
"தாங்கள் கூறிய உண்மையான அடையாளத்தால் என்னைப் பெற்ற செல்வத்தாய் இலட்சுமிதேவி அவர்தான் என்றும், எனக்குத் தந்தை நீரே ஆவீர் என்றும் அறிந்து கொண்டேன். அடியோனாகிய எனக்கு அடைக்கலம் தருவீராக. என் உண்மையான பெயர் அனுமன்; அறிந்து கொள்வீராக. நான் கலக்கமில்லாது இலங்கையை சுட்டு எரித்து இலட்சுமிதேவியை அழைத்து வர எனக்கு அனுமதி தந்தருள வேண்டும் அய்யா" என்றான்.

விருத்தம்*****
நல்லது அடியேன் கேட்டேன் நான்இனி உரைக்கும்வாறு
சொல்லவும் கேட்பீர் எந்தன் திரு அடையாளம் சொன்னீர்
வல்லவர் தகப்பா நீர் வரம்தர வேணும் இப்போது
புல்லர் வாழ் இலங்கை சுட்டு இலட்சுமியைக் கூட்டி வாறேன்

"நல்லது; தாங்கள் கூறிய எல்லாவற்றையும் நான் கேட்டேன். நான் இனிக் கூறப் போகும் வழி முறைகளையும் நீவிர் அருள் கூர்ந்து கேட்டருள்வீராக. அய்யா, என்னுடைய தாய் இலட்சுமியின் அடையாளத்தைச் சொன்னீர். வல்லவரே, என் தந்தையே, அறிவற்றவர்கள் வாழும் இலங்கையைச் சுட்டு அழித்து என் தாயை அழைத்து வருவேன். அதற்கு அனுமதி தருவீராக."

*ஸ்ரீராமர் வனவாசம்*****
இப்படியே இராமர் இளைய பெருமாளும்
அப்படியே சொல்லி அழுது அழுது தாம் வாடி
சோலை மரத்தின் கீழ்ச் சோர்ந்து முகம்வாடி
மாலவரும் தம்பி மடிமேல் துயின்றிருக்க
அஞ்சனையாள் பெற்ற அனுமன் அதில் வந்தடைய
சஞ்சலம் ஏதென்று சாரதியைத் தெண்டனிட
மின்செறியும் மாயன் விழித்து அவனைத்தான் நோக்கி
கவசக் குண்டலம் அணிந்த கார்குத்தா யார் எனவே
உபசரித்துச் சொன்ன உச்சிதத்தைத் தானறிந்து
அய்யரே என்னை ஆட்கொண்ட நாயகமே
மெய்யரே நீங்கள் மெலிந்திருப்பது ஏதெனவே
கேட்க அனுமன் கிருபை கூர்ந்து எம்பெருமாள்
சேர்க்கையுடன் சொன்னார் சீதையுட தன்வளமை
ஏற்கையாகக் கேட்டு இயல் அனுமன் ஏது சொல்வான்

இப்படியாக, இராமரும், இலட்சுமணரும் அழுது அழுது வாடிச் சோர்தனர், அங்குள்ள ஒரு சோலை மரத்தின் அடியில் முகம் வாட்டத்துடன் இருவரும் வந்தடைந்தனர். பிறகு இராமன், தம்பி இலட்சுமணன் மடிமேல் தலை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அஞ்சனையாள் பெற்ற மகன் அனுமன் அங்கு வந்தடைந்தான். அவன் இராமரை நோக்கி, "சுவாமி, தங்கள் மனச்சஞ்சலத்திற்கு என்ன காரணம்?" என்று கூறி வணங்கினான். உடனே, ஒளி பொருந்திய இராமன் தலை நிமிர்ந்து, அவனைக் கண்களால் நோக்கி, "கவசகுண்டலமணிந்த குரங்கினத்தைக் காப்பவனே, நீ யார்?" என்று வினவினார். இவ்வாறு வரவேற்றுக் கூறிய சொற்களின் உயர்வை அறிந்து, அனுமன் இராமனை நோக்கி, "மேன்மையானவரே, என்னை ஆட்கொண்ட நாயகமே, உண்மைப் பொருளே, நீங்கள் மெலிந்திருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டான். இராமன் கருணையுடன் சீதையின் நிலைமை முழுவதையும் எடுத்துச் சொன்னார். அவற்றை மிகவும் கவனமாகக் கேட்ட அனுமன் இனிமையுடன் பேசலானான்.
---------------------

ஸ்ரீராமர் வனவாசம்*****
மான் வேட்டையாடி மாரீசனை அறுத்துத்
தான் வேட்டையாடும் தகையாலே தம்பியுடன்
வந்தார்கள் இலட்சுமியும் வாழ்ந்திருந்த மண்டபத்தில்
பந்தார் குழலனைய பாவையைக் காணாமல்
கலங்கி மிகவாடிக் கண்ணீர் மிகச்சொரிய
மலங்கியே இலட்சுமணர் மண்ணில் புரண்டழுதார்
என்னே மணியே எனைப் பெற்ற மாதாவே
பொன்னே அமிர்தே பெற்றவளே என்று அழுதார்
இராமர் முகம்வாடி நாயகியைத் தாம்தேடி
ஸ்ரீராமர் மிகக்கலங்கிச் சினேகமுடன் அழுதார்
அன்ன மயிலோடும் அன்றில் குயிலோடும்
புன்னை மலரோடும் புலம்பி மிகஅழுதார்
வண்ணமுள்ள யானை வாய்த்த சிங்கத்தோடும்
பெண்ணமுதைக் கண்டீரோ எனப் புலம்பி மிகக்கேட்பார்

மானை வேட்டையாடச் சென்று, மாரீசனைக் கொன்று, வேட்டையில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் சீதை இருந்த குடிசை நோக்கித் தம்பி இலட்சுமணனுடன் திரும்பினார் இராமர்.
அதிகமான கூந்தலையுடைய சீதையை அங்குக் காணாமல் கலங்கி மிகவும் வாடி இராமர் கண்ணீர் சொரிந்தார். இதைக் கண்டு மிகவும் மனம் கலங்கிய இலட்சுமணர் பூமியின் மேல் புரண்டு புரண்டு அழுதார்.
"என்னைப் பெற்ற தாயே, என் தலைவியே, மணியே, பொன்னே, அமிர்தத்திலிருந்து தோன்றியவளே" என்று கூறிக் கதறி அழுதார்.
இராமர் முகம் வாடினார். மனைவியைத் தேடித் கலங்கிப் பிரிவுத் துயருடன் அழுதார். அன்னம், மயில், அன்றில் பறவை, குயில், புன்னை மலர் இவைகளோடு பேசிப் புலம்பி அழுதார்.
பலமுள்ள யானை, கண்ணில் கண்ட சிங்கம் இவற்றிடம் "என் பெண்ணமுதைக் கண்டீரோ?" எனக் கேட்டு அழுது புலம்பினார்.

அச்சமில்லா இலட்சுமணன் ஆன ஸ்ரீராமருமாய்
மானின் பிறகே மனம் வைத்து நின்றிடவே
வானின் செயலால் வானவர்கள் பார்த்திருக்க
நாராயணர்தேவி நல்ல திரு இலட்சுமியை
எராத பாவி இலச்சை கெட்ட தீய அரக்கன்
தேரிலே அம்மைதமைத் திருடிக் கொண்டு ஏகினனாம்
பாரிலே உள்ள பட்சி பறவைகளும்
கண்டு பதறிக் கதறி மிகஅழவே
அண்டர் முனிதேவர் எல்லோரும் தாம் அழவே

காட்டில் கண்ட மானைப் பிடிக்க மனங்கொண்டு அதன் பின்னால் பயமற்ற இராமரும், இலட்சுமணரும் போனார்கள்.
விதியின் செயலால் தேவர்கள் பார்த்திருக்க, நாராயணரின்தேவியாகிய இலட்சுமியை, எதற்கும் ஏலாத பாவியும், வெட்கங்கெட்ட தீமையான அரக்கனுமான இராவணன் ஆகாயதேரிலே திருடிக் கொண்டு சென்றுவிட்டான். இதைக் கண்டு பூவுலகில் உள்ள பட்சிகளும், பறவைகளும் கதறி அழுதன. இந்த அண்டத்தில் உள்ளவர்களும், முனிவர்களும், தேவர்களும் எல்லாரும் அழுதனர்.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக