*கண்ணன் நிலைமை*****
ஆயர் குடியில் அரியோன் மிகவளர்ந்து
மாயன் விளையாடி மடந்தையோடும் கூடி
வென்று பால் வெண்ணெய் மிகப்புசித்து காடதிலே
கன்றுதனை மேய்த்து காளிங்கன்தனை வதைத்து
கஞ்சனுட ஏவலினால் காட்டில் வந்த சூரரையும்
துஞ்சிவிடக் கொன்று தொலைத்தார்காண் அம்மானை
ஆயருக்கு வந்த ஆபத்து அத்தனையும்
போய் அகற்றி நந்தன் பிள்ளை எனத்தான் வளர்ந்தார்

---------
உரை
---------
அப்போது, ஆயர்குடியில் வாழ்ந்துவந்த கண்ணபிரான் நன்றாக வளர்ச்சியுற்று, அங்குள்ள பெண்களோடு உறவாடி, கூடி விளையாடி அவ்விளையாட்டில் வெற்றி கொண்டு, அவர்களை நிறைவு செய்து, பால், வெண்ணெய், ஆகியவற்றை அதிகமாக உண்டு, காடுகளில் கன்று காலிகளை மேய்த்து, காளிங்கன் என்னும் பாம்பை அடக்கி, தம்மைக் கொல்வதற்குக் கஞ்சனின் தூண்டுதலால் காட்டுக்கு வந்த சூரர்களையும் கூண்டோடு அழியும்படி கொன்று தீர்த்து வாழ்ந்து வந்தார். மேலும், ஆயர்களுக்கு வந்த எல்லா ஆபத்துக்களையும் அகற்றி நந்தனின் பிள்ளையாக வளர்ந்து வந்தார்.
---------------------

என்செய்வோம் என்று இருக்கும் அந்த நாளையிலே
முன்செறியும் பூதம் மூரிதனை ஏவி அவன்
கொல்ல என்று விட்டான் குழந்தைகளை அம்மானை
வல்ல பெலமுள்ள மாபூதம் பட்ட பின்பு
பின்னுமே தானும் பல அரக்கரை ஏவி
கொன்று வா என்றான் குழந்தைகளை அம்மானை
கொல்ல வந்த பேரை எல்லாம் கொன்றதுக்காண் அக்குழந்தை
வெல்ல விட்டபேர் இழந்து மெலிந்து இருந்தான் கஞ்சனுமே

பிறகு அந்தக் குழந்தையை அழிக்க என்ன செய்வது? என்று எண்ணிக் கொண்டிருந்தான். அச்சமயம், ஒருநாள் அதிகமான கோபத்தையுடைய ஒரு பூத அரக்கனை அக்குழந்தையைக் கொல்வதற்கு ஏவி விட்டான். ஆனால், மிகவும் பலமுள்ள அப்பூதம் அக்குழந்தையால் அழிக்கப்பட்டது. பிறகு இன்னும் பல அரக்கர்களை அனுப்பி "அக்குழந்தையைக் கொன்று வாருங்கள்" என்று கட்டளை இட்டான். ஆனால் தன்னைக் கொல்ல வந்த அரக்கர்களையும் அக்குழந்தை கொன்று குவித்தது. அந்தக் குழந்தையை வெற்றி கொள்வதற்கு அனுப்பியவர்கள் அழிக்கப்பட்டதால், கஞ்சன் மிகவும் வருந்தி வாடி இருந்தான்.

வேறு*****
காமனோ சீவகனோ கண்ணனோ சந்திரனோ
மாமதனோ சூரியனோ மறையவனோ இறையவனோ
நாமத் திறவானோ நாராயணன் தானோ
சோமத் திருவுளமோ தெய்வேந்திரன் தானோ
ஈசனோ வாசவனோ இந்திரனோ சந்திரனோ
மாயனோ உன்னை வதைக்க வந்த மாற்றானோ
ஆரோ எனக்கு அளவிடவும் கூடுதில்லை
பேரோ அசோதை புதல்வன் எனக் காணுதில்லை
தெய்வகியாள் தேகத் திருச்சுவடு தோணுது கொஞ்சம்
மெய்யதிபனான விஷ்ணுபோல் முன்சுவடு
என்று அந்தக் கஞ்சனுக்கு இத்தூதன் சொல்லிடவே
அன்று அவனைக் கேட்டு அயர்ந்து இருந்தான் அம்மானை

"அரசே, அங்குக் கண்ட குழந்தையைப் பார்க்கும்போது, அது காமனோ, சீவகனோ, சந்திரனோ, மன்மதனோ, சூரியனோ, மறையவனோ, இறைவனோ, இன்னும் எப்பெயருக்குரியவனோ. நாராயணனோ, சோமநாதனோ, தெய்வேந்திரனோ, ஈசனோ, வாசவனோ, மாயனோ, உன்னை அழிக்க வந்த எதிரியோ, யார் என்றே என்னால் அளவிட்டுக் கூற முடியவில்லையே! அசோதை என்னும் பெயருடைய பெண்ணின் புதல்வனாகத் தெரியவில்லை. அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது தெய்வகியின் தேக அம்சம் சிறிது இருப்பதாகத் தோன்றுகிறது. அக்குழந்தையின் முன்பக்கம் வைகுண்டபதியில் இருக்கும் விஷ்ணுவைப் போல் காட்சியளிக்கிறது" என்று அந்தக் கஞ்சனுக்குத் தூதன் கூறினான். இதைக் கேட்டவுடன் கஞ்சன், இன்னும் அதிகமாகத் தளர்வுற்றான்.

தூதன் மிகநடந்து தோகை அசோதை மனையில்
புகுந்து அந்தப் பிள்ளை பொன் தொட்டிலிலே கிடக்க
கண்டு அந்தத் தூதன் கஞ்சனுக்கு நஞ்செனவே
விண்டு பறையாமல் விரைவாகப் போயினனே
போய் அந்தத் தூதன் பொறாமையுள்ள கஞ்சனுக்கு
வாய் அயர்ந்து சிந்தை மறுகியே சொல்லலுற்றான்

தூதன் அவ்வாறு நடந்து கடைசியில் அசோதையின் வீட்டில் புகுந்தான். அங்கு அந்த ஆண் பிள்ளை பொன்னாலான தொட்டிலில் படுத்துக் கிடந்தது.
அதைக் கண்டு அத்தூதன் "நிச்சயமாக இக்குழந்தை கஞ்சனது உயிரை எடுக்கும் நஞ்சாக அமையும்" என்று எண்ணி, வாய்விட்டுக் கூறாதவண்ணம் விரைவாகக் கஞ்சனை நோக்கிச் சென்றான்.
அவ்வாறு திரும்பிச் சென்ற தூதன் பொறாமை படைத்த கஞ்சனிடம் தான் கண்டவற்றை விளக்கிச் சொல்லச் சொல்லின்றிச் சிந்தை வேதனையுற்றுக் கூறலானான்....

அய்யோ மறையோன் அன்று சபித்தபடி
சையேர் இடையர் தன்பதியில் போகறியேன்
தங்கை வயிற்றில் சனித்த பிள்ளை ஆனதுண்டால்
பங்கம்வரும் என்றனக்குப் பதறுதடா என்உடம்பு
என்று மனம் கருகி இயல் இழந்த கஞ்சனுந்தான்
அன்று ஒரு தூதனையும் அனுப்பினன்காண் அம்மானை
வாராய் நீ தூதா அசோதை பதி ஏகி
பாராய் நீ தூதா அசோதை பதி ஏகி
என்று அந்தத் தூதனையும் ஏகவிட்டான் கஞ்சனுமே
நன்றுநன்று என்று நடந்தானே தூதனுந்தான்

"அய்யோ, முனிவன் சபித்த காரணத்தால் இடையர்கள் வாழும் இடத்திற்குப் போக வழி அறியாமல் இருக்கின்றேனே. ஆயர்பாடியில் வளரும் பிள்ளை என் தங்கையின் வயிற்றிலிருந்து உருவான குழந்தையாக இருந்தால் என்னுயிருக்கு அழிவு வருமே! என்னுடம்பு முழுவதும் அச்சத்தால் பதறுகின்றதே" என்று மனம் கருகி, கட்டுப்பாடு இழந்த நிலையில் கஞ்சன் இருந்தான். அன்றைக்கே ஒரு தூதனை அங்கு அனுப்பி வைத்தான்.
அப்படி அனுப்பும்போது கஞ்சன் அத்தூதுவனிடம், "தூதுவனே, நீ அடுத்தவர் அறியாதவண்ணம், அசோதை வீட்டுக்குச் சென்று அவளுடைய ஆண் குழந்தையைப் பார்த்து வருவாயாக" என்று கூறி அத்தூதனைப் போகச் சொன்னான். தூதன் "நல்லது, நல்லது" என்று கூறி, ஆயர்பாடி நோக்கி நடந்தான்.

விருத்தம்*****
அய்யோ முனிதான் சபித்தபடி ஆயர்பதியில் போகறியேன்
மெய்யோ தளருது உடல் மெலியுது மெல்லி மொழிந்த விசளமதால்
கையோ சலித்துக் கால் அயர்ந்து கால விதியால் கருத்து அயர்ந்து
பைய ஓர் ஆளைத்தான் அழைத்துப் பார்க்க விடுத்தான் கஞ்சனுமே

"அய்யோ, முனிவன் இட்ட சாபத்தினால் ஆயர்பாடிக்குப் போகும் வழியை அறியேனே! என் உடம்போ தளர்ச்சி அடைந்து மெலிந்து கொண்டிருக்கின்றது. குழந்தை பகவதியாள் கூறிய மொழிகளினால் என் கைகளோ சோர்வுறுகின்றன. கால்கள் அயர்வுற்றுக் கொண்டிருக்கின்றன" என்று கூறித் தனது கடைசிக் காலத்தின் விதியின் பயனால் தளர்வுற்றுத் தன்னுடைய ஏவலாள் ஒருவனை மெதுவாக அழைத்து, ஆயர்பாடியில் வளர்ந்து கொண்டிருக்கும் கண்ணனைப் பார்த்து வர அன்றைக்கே அனுப்பினான் கஞ்சன்.

கஞ்சன் கொடுஞ்செயலும் மனச் சஞ்சலமும்*****
பாராளந்தோன் தங்கை பகவதியும் எதுசொல்வாள்
என்னை எடுத்து ஈடு செய்யாதே கெடுவாய்
உன்னை வதைக்க உற்ற எங்கள் அச்சுதரும்
ஆயர்பாடி தன்னில் அண்ணர் வளருகிறார்
போய்ப் பார் என்று புகன்றான் பகவதியும்
கேட்டு அந்தக் கஞ்சன் கிலேசம் மிகவாகி
வீட்டுக்குப் போயிருந்து விசாரமுற்றான் அம்மானை

அச்சமயம், உலகை அளந்த மாயனின் தங்கை பகவதி கஞ்சனை நோக்கி "குழந்தையாகிய என்னைத் தூக்கும் அளவு ஈடுள்ள பலம்கூட இல்லாது கெட்டு நிற்கும் கஞ்சனே, உன்னை வதைத்துக் கொல்ல எங்களுக்கு விருப்பமான திருமால் ஆயர்பாடியில் வளருகின்றார் அங்கே போய்ப் பார்" என்று கூறி மறைந்தாள். இதைக் கேட்ட கஞ்சன் தன் மனச் சஞ்சலம் அதிகமாகி வீட்டுக்குப் போயிருந்து இதையே சிந்தித்தான்.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக