துரியோதனன் சூழ்ச்சி*****
உடக்கிச் சூது பொருது ஓட்டி வைத்தான் ஐவரையும்
பாவி துரியோதனனும் பஞ்சவரைத்தாம் விரட்டிச்
சோவிதமாய் நாட்டைச் சுற்றி அரசாண்டிருந்தான்

---------
உரை
---------
பாவியான துரியோதனன், தான் நினைத்தபடி சூது விளையாட்டில் அவர்களை வஞ்சகமாக வெற்றி கொண்டு, பஞ்சவர்களை வனத்தில் வசிக்க அனுப்பி வைத்தான். பஞ்சவரை விரட்டி விட்டு, ஆடம்பரமாக நாட்டைச் சுற்றிக் காவல் வைத்து ஆண்டு வந்தான்.
---------------------

இப்படியே ஆண்டு இருக்கும் அந்த நாளையிலே
முப்படியே விட்ட குறை முடிவாகும் நாளையிலே
வணங்கா முடிபெற்ற மன்னன் துரியோதனனும்
இணங்காமல் பிணங்கி ஏது செய்தான் அம்மானை
தலை வீதம் பங்குதான் வையா வண்ணமுந்தான்
நிலை பகிர்ந்து விட்டோமே நினைவு சற்றும் இல்லாமல்
இனி அவன் பூமிதனை யாம் பறித்து ஐவரையும்
தனியே வனத்தில்தான் அனுப்பி இராச்சியத்தை
அடக்கி அரசாள்வேன் என்று அவன் நினைத்து மாபாவி

இப்படியாக நாட்டை ஆண்டு வரும் காலத்தில் முன் விதிப்படி விட்ட குறை முடிவாகின்ற சமயத்தில் நல்லவற்றிற்கு வணங்காது ஆட்சி புரியும் மன்னனான துரியோதனன் சமப் பங்கு வைத்து அரசாட்சி புரிவதற்கு இணங்காமல் தகராறு செய்தான்.
"கௌரவர்களும் பஞ்சவர்களும் சேர்ந்து தலைக்கு ஒரு பங்காகப் பாகம் வைப்பதற்கு நினைவு சிறிதுகூட இல்லாமல் ஒரு சமப் பிரிவாகப் பிரித்து விட்டோமே? இனி என்ன செய்வது? அவர்கள் சொத்துக்களை ஏதாவது வழியில் பறித்துப் பஞ்சவர்களை வனத்தில் ஒன்றுமின்றி அனுப்பி விட்டு முழுத் தேசத்தையும் அடக்கி அரசாள வேண்டும்" என நினைத்தான் துரியோதனன்.

*குருநாட்டு வளமை*****
அந்நாடு நாடு அரன் நாட்டுக்கு ஈடாகும்
பொன்னாடு நாடு புத்தி உள்ளோர் தந்நாடு
அரன் அருளைப் பெற்றிருக்கும் ஐவருட நன்னாடு
இரவலர்க்கும் ஈயும் ஏற்ற தர்மர்தம் நாடு
மாயன் அருள் பெற்ற மன்னவர்கள்தம் நாடு
தாய் நாடான தமிழ்க் குரு நன்னாட்டில்
மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் நேர்பாதி
பொய்யில்லாத் தர்மருக்குப் பூ பாதியாகவேதான்
ஆண்டார் சிலநாள் ஆளுக்கு ஒரு பங்காக
தாண்டவராயர் தன்மையால் அம்மானை

அந்த நாடு(குருநாடு) அரன் வாழும் கயிலைக்கு ஈடாக விளங்கி வந்தது. பொன் நாடாகிய அந்த நாடு புத்தியுள்ளவர்கள் நாடாகும். சிவனின் அருளைப் பெற்றிருக்கும் பஞ்சவர்களின் நாடு அதுவாகும்.
அந்த நாடு பிறநாட்டிலிருந்து அங்கு வந்து இரக்கின்றவர்களுக்குக் கொடுத்தருளும் தருமருடைய சிறந்த நாடாகும். மாயவருடைய அருள் பெற்ற மன்னவர்கள் வாழ்ந்த நல்ல நாடு அதுவாகும்.
தாய் நாடாகிய தமிழர்கள் வாழும் அக்குரு நாட்டை உண்மையில்லாத மன்னன் துரியோதனன் முதலியோருக்குப் பாதியும், பொய் பேசாத தருமருக்குப் பாதியுமாகத் தாண்டவராயர் அருளால் சில காலம் ஆண்டு வந்தனர்.

குருநாட்டு வளமை*****
திருநாட்டுக்கு ஒவ்வும் சிறந்த குருநாடு
ஒருநாடும் அந்தக் குருநாட்டுக்கு ஒவ்வாதே
பருநாடு பத்தியுள்ள பஞ்சவர்கள்தம் நாடு
தேவரும் வானவரும் தெய்வத் திருமாலும்
மூவரும் நன்றாய் உகந்த குரு நாடு
ஆளியொடு சிங்கம் ஆனை இறாஞ்சிப் புள்ளும்
வேழிசையாய் உள்ள வெகு ஐந்துதலை அரவம்
வெள்ளானை வெள்ளை மிகுசாரை ஆனதுவும்
துள்ளாடி நித்தம் துலங்கி வரும் நன்னாடு
திருநாட்டுக்கு ஒவ்வும் சிறந்த குருநாடு
ஒருநாடும் அந்தக் குருநாட்டுக்கு ஒவ்வாதே
பருநாடு பத்தியுள்ள பஞ்சவர்கள்தம் நாடு
தேவரும் வானவரும் தெய்வத் திருமாலும்
மூவரும் நன்றாய் உகந்த குரு நாடு
ஆளியொடு சிங்கம் ஆனை இறாஞ்சிப் புள்ளும்
வேழிசையாய் உள்ள வெகு ஐந்துதலை அரவம்
வெள்ளானை வெள்ளை மிகுசாரை ஆனதுவும்
துள்ளாடி நித்தம் துலங்கி வரும் நன்னாடு
---------
உரை
---------
இலட்சுமி வாழும் வைகுண்டத்தைப் போன்று குரு நாடு காட்சியளித்துக் கொண்டிருந்தது. குரு நாட்டோடு எந்த நாட்டையும் ஒப்பிட முடியாது. சிறந்து பக்தியுள்ள பஞ்சவர்களுடைய நாடு மிகவும் உயர்வு பொருந்திய நாடு ஆகும். தேவர்களும் ஏனைய வானலோகத்தவர்களும், தெய்வமாகிய திருமாலும், முதல் மூவரும் மகிழ்வு பொருந்த இருக்கும் நாடு குருநாடு. நன்மையான அந்தக் குரு நாட்டில் ஆளியும், சிங்கமும், ஆனையும், இறாஞ்சிப் பறவையும், பெரிதான ஐந்துதலைப் பாம்பும், வெள்ளை யானையும், வெள்ளாடும், சாரைப்பாம்பும் ஒன்றை ஒன்று அணைத்துத் தினந்தோறும் துள்ளிக் குதித்து விளையாடும்.

தர்மரவர் வீமன் விசயன் சகாதேவன்
நன்மை பரிநகுலன் நாடான நாடதுதான்
குருநாடு எனவே கூறுவார் அந்நகர்
திருநாடு தன்னுடைய சிறப்பு கேள் அம்மானை
துரியோதனாதி செலுத்தும் அத்தினபுரத்தில்
பரி ஒட்டகமும் பலமிருகம் ஆனதுவும்
பசியால் தகையால் பட்சி பறவைகளும்
விசையாய்க் குருநகரில் மேவித் தகையாறி வரும்
அத்தினபுரத்தில் அரதேகி ஆவரெல்லாம்
பத்தியாயுள்ள பஞ்சவர்கள் ஆண்டிருக்கும்
குருநாடு தன்னில் குழாம்கூடி இருந்தனராம்

தருமர், வீமன், அருச்சுனன் சிறப்புப் பொருந்திய நகுலன் சகாதேவன் ஆகியோர் ஆண்டு வந்த நாட்டைக் குருநாடு என்று மக்கள் கூறுவர். அந்தத் திருநாட்டின் வளமைகளைக் கூறுகிறேன், இலட்சுமிதேவியே நீ கேட்பாயாக.
துரியோதனன் முதலிய கௌரவர்கள் ஆட்சி செலுத்தும் அத்தினபுரத்தில் பசியாலும், தாகத்தாலும் வாடும் சிறப்பான ஒட்டகங்களும், பல மிருகங்களும், பட்சிகளும், பறவைகளும் விரைவாகக் குரு நாட்டிற்குச் சென்று தாகவிடாய் தீர்த்துக் கொண்டு திரும்பும். அத்தினபுரத்திலுள்ள உள்ளூர்வாசிகள் எல்லாரும் இறைவன்பால் பக்தியுள்ள பஞ்சவர்கள் ஆண்டு கொண்டிருக்கும் குரு நாட்டில் கூட்டமாகக் கூடி வாழ்ந்து வந்தார்கள்.

கௌரவர் பஞ்சவர் வரலாறு*****
பிறந்த துரியோதனனும் பிறவி ஒரு நூற்றுவரும்
சிறந்தபுகழ் ஐபேரும் தேசமதிலே வளர்ந்து
அவரவர்க்குத் ஏற்ற ஆர்க்கமுள்ள வித்தை கற்று
எவரெவரும் மெய்க்க இவர் வளர்ந்தார் அம்மானை
வளர்ந்து நிமிர்ந்து வரும் வேளை ஆனதிலே
இழந்துருகி வாடும் விசைகெட்ட மாபாவி
துடியாய் மறுவழக்குச் சொல்லித் துரியோதனனும்
முடியை வினை சூடி உலகாண்டான் அம்மானை
பாவி இருந்து பாராண்ட சீமையிலே
கோவுகளுக்கு நீர் குடிக்கக் கிடையாது

ஏற்கெனவே, பூலோகப் பிறவி எடுத்த துரியோதனனுடன் கௌரவர்களும், சிறந்த புகழையுடைய பஞ்சவரும் அத்தினபுரத் தேசத்தில் வளர்ந்து, அவரவர்க்குத் தகுதியான உயர்வு பொருந்திய வித்தைகள் எல்லாம் கற்று, எல்லாரும் ஆச்சரியப்படத் தக்க வகையில் வளர்ந்து வந்தனர்.
இவர்கள் வளர்ந்து உயர்வுற்று வருகின்ற சமயத்தில், அங்கே தருமம் தன் இயல்பு இழந்து உருகி வாடும்படி செய்த நல்ல தன்மையில்லா மகாபாவி துரியோதனன், இல்லாத பொய் வழக்குகளைக் கூறி, துணிச்சலாக அநீதி வழங்கி, தீவினையாகிய கிரீடத்தை அணிந்து, அந்நாட்டை அரசாண்டு வந்தான். அந்தப் பாவி ஆண்டுவந்த தேசத்தில் பசுக்களுக்குக் குடிக்கக்கூட தண்ணீர் கிடையாது.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக