*ஸ்ரீராமர் வனவாசம்*****
என்றனுட மூக்கு அரிந்தோர் இருவர் உண்டு அல்லாது
மற்றொருவர் அங்கே வாழ்ந்திருக்கக் கண்டதில்லை
கற்றொருவர் காணாது கையில் அம்பு காணாது
மருவனைய அண்ணே உன் வாய்த்த விரலதிலே
ஒரு இறைக்கே உண்டு உற்ற அவர்தம் உயரம்
என்று அந்த அரக்கி ஈனம் பலது உரைக்க
அன்று அந்த ராவணனும் ஆகாசத் தேரேறிப்
பிச்சைக்கு எனவே புறப்பட்டான் காடதிலே

---------
உரை
---------
அவளைப் போல அழகுள்ள ஒரு பெண்ணை நமது நாட்டில் நான் கண்டதில்லை. எனவே, அண்ணா உனக்கு அவள் ஏற்றவள் என்று எண்ணி அவளைப் பிடித்து இழுத்தேன்.
உடனே, இருவர் என்னுடைய மூக்கு முதலியவற்றை அரிந்து விட்டனர். அவர்கள் இருவரைத் தவிர வேறு ஒருவரையும் நான் அங்குக் காணவில்லை. அவர்கள் யுத்தம் முதலிய எதையும் கற்றவர் இலர்.
கையில் அம்பு முதலிய ஆயுதங்கள்கூட இல்லை. அண்ணா, மலை போன்ற உன் விரல்களில் ஒரு விரல் அளவுக்கே அவர்கள் உயரம் இருக்கும்" என்று அவர்களைக் குறை கூறினாள்.
உடனே, இராவணனும் அவனுடைய ஆகாயத் தேரில் ஏறிக் காடுகளில் பிச்சை எடுப்பவன் போன்று புறப்பட்டான்.
---------------------

உறவாடி நின்ற ஒயிலை அவர் அறிந்து
பறபோடி என்று பம்பஸ்தன மூக்கு அரிந்தார்
மூக்கும் முலையும் முகமும் வடிவு இழந்து
நாக்கு உரைக்க வாடி நாணம் கெட்ட தீய அரக்கி
தன்னுடனே கூடித் தமையன் எனப் பிறந்த
மன்னன் ராவணன் தனக்கு வகையாய் உரைக்கலுற்றாள்
காட்டில் ஒருபெண் கமலத் திருமகள்போல்
நாட்டில் ஒவ்வாக் கன்னி நான் கண்டதில்லை அண்ணே
உன்றனக்கு ஆகும் என்று உற்றவளை நான் பிடித்தேன்

தகாத மொழிகளைப் பேசி நின்ற அந்தப் பெண்ணைப் பற்றி அறிந்த இலட்சுமணர் சூர்ப்பநகையிடம் "போடி, இங்கிருந்து ஓடிப் போய் விடு" என்று கூறி, அவளது சுருண்ட தலைமயிரையும், மார்பகங்களையும், மூக்கையும் அரிந்தார். இவ்வாறு மூக்கு, முலை, முகம் ஆகியவற்றின் வடிவு இழந்து பேசுவதற்கு நாவின் சக்தி இழந்து, நாணமில்லாத அந்தத் தீமையான அரக்கி சூர்ப்பநகை தன்னோடு கூடிப் பிறந்த தமையனான மன்னன் இராவணனிடம் சென்று, தனக்குச் சாதகமான முறையில் பேசலுற்றாள். "அண்ணா, காட்டில் இலட்சுமிதேவி போன்ற அழகுள்ள ஒரு பெண்ணைக் கண்டேன்

ஸ்ரீராமர் வனவாசம்*****
அரக்கன்தாய் கண்டு அலறி வெகுண்டு எழுந்து
இரக்கம் இல்லாச் சூர்ப்பநகை இலட்சுமணரைத் தேடித்
தேடிச் சீராமர் சீர்பாதம் கண்டணுகி
நாடி எனைத் தாவும் என்று நாணம் இல்லாதே உரைத்தாள்
என்பாரி இங்கே இருக்க வேறொருவர்
தன் பாரிதன்னைத் தான் விரும்பேன் போடி என்றார்
போடி நீ என்னும் புத்திதனைக் கேட்டு அரக்கி
தேடியே இலட்சுமணரைச் சேர உறவாடி நின்றாள்

தன் மகன் வெட்டுண்டதை அறிந்த இரக்கமில்லாச் சூர்ப்பநகை, அலறி அழுது கோபம் கொண்டு எழுந்து, இலட்சுமணரைத் தேடி வரும்போது ஸ்ரீ இராமரைக் கண்டு அவரை அணுகி, "என்னை அணைத்துக் கலவி கொள்ளும்" என்று நாணமின்றிக் கூறினாள். இதைக் கேட்ட இராமன், "பெண்ணே, என் மனைவி இங்கே இருக்கின்றபோது வேறொருவர் மனைவியை நான் விரும்பமாட்டேன். நீ உன் வழியே போடி" என்றார்.
இப்புதிமதியைக் கேட்ட அரக்கி இலட்சுமணரைத் தேடிக் கண்டு பிடித்து அவனைத் தன்னோடு உறவு கொள்ளக் கேட்டு அவன் அருகில் போனாள்.

லச்சுமணரும் அங்கே இனிய கனிதான் பறிக்கக்
கச்சுவுடன் நடந்து காட்டில் மிகப்போக
சூர்ப்பநகை மகனும் துய்ய தவசு நிற்க
ஆர்ப்பரிவாய் ஈசர் ஆகாசத்து வழியே
வாளை அயைச்சார் வாய்த்த பரமேசுரரும்
தாழே வரும்போதுதாம் அனந்த இலட்சுமணர்
கண்டு அந்த வாளைக் கைநீட்டித் தாம்பிடித்துத்
துண்டம் விழ ஆலைத் துஞ்சி விழ வெட்டினார்காண்
பட்டந்த ஆலும் படபட எனச் சாய்ந்திடவே
வெட்டந்து வீழ்ந்தான் மீண்டும் உதிரம் பாய்ந்ததுவே

ஒருநாள், இலட்சுமணர் இனிமையான கனிகளைப் பறித்து வர இடுப்பில் இடைக்கட்டுக் கட்டிக் காட்டில் நடந்துபோகும் வழியில், சூர்ப்பனகையின் மகன் பரிசுத்தமாகத் தவசு நிலையில் நின்றான். அவன் தவத்துக்காக ஒரு சக்தி வாய்ந்த வாளை ஆகாயவழியே ஈசர் அனுப்ப, அஃது ஆரவார ஒலியை எழுப்பிய வண்ணம் ஆகாயத்திலிருந்து கீழே வந்து கொண்டிருந்தது. நாராயணர் பள்ளி கொள்ளும் ஆதிசேசனாகிய இலட்சுமணர் வானத்தில் வந்த வாளைக் கண்டு தமது கைகளை நீட்டி வாளைப் பிடித்தார். விதிப்படி பக்கத்தில் நின்ற ஆலமரத்தைத் துண்டாக விழும்படி அந்த வாளால் வெட்டித் தள்ளினார்.
இவ்வாறு வெட்டுண்ட ஆலமரம் படபடவெனச் சாய்ந்து விழுந்திடவும் அவ்விடத்தில் தவமிருந்த சூர்ப்பநகை மகன் வெட்டுண்டான்; அங்கே இரத்த வெள்ளம் பாய்ந்தோடியது.

அயோத்தியா புரியில் ஆன தம்பிமாரோடும்
கையேற்று வந்த கன்னி திருவோடும்
வாழ்ந்திருக்கும் நாளையிலே மாதா கைகேசி அம்மை
தாழ்ந்த மொழி சொன்னதனால் தம்பி பரதனையும்
நாடாள வைத்து நல்ல ஸ்ரீராமருந்தான்
கூட ஒரு தம்பியோடும் குழல் சீதை மாதோடும்
நாடி நடந்தார் நல்ல வனவாசமதில்
வாடி வந்து கானகத்தில் வாழ்ந்திருக்கும் நாளையிலே

அயோத்தியா புரியில் தமது அன்புத் தம்பிகளோடும், தாம் கைபிடித்து வந்த சீதையோடும் வாழ்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது, இராமர், தம் தாயார் கைகேசியம்மை தாழ்வு பொருந்திய ஒரு வரத்தைத் தசரதனிடம் கேட்டதனால் தம்பி பரதனை நாடாள வைத்து விட்டு, இன்னும் ஒரு தம்பி இலட்சுமணனோடும், அழகு பொருந்திய கூந்தலையுடைய சீதையோடும் வனவாசத்தை நல்ல இடமாகத் தேர்ந்து அதை நோக்கிச் சென்றார். வனவாச வாழ்க்கையில் உடல் வாடி வந்து கொண்டிருந்த எல்லாரும் அக்கானகத்திலேயே வாழ்ந்தனர்.

அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக