**அகில (வைகுண்ட) வளமை*****
...தேவரீர் என்னைத் திருக்கல்யாணம் முகித்துக்
கோவரி குண்டக் குடியிருப்பிலே இருத்திப்
போவது என்ன புதுமை எனக்கறியத்
தேவரீர் நீர்தான் செப்பிடீர் என்றுரைத்தாள்
பின்னும் அந்த இலட்சுமியாள் பெருமாள்தமைத் தொழுது
என்றும் இருக்க இறவாது இருப்போனே
ஆதியால் சூச்சம் அளவெடுக்கக் கூடாத
நாதியாய் நின்ற நாராயணப் பொருளே...

---------
உரை
---------
... "தேவரீரே, தாங்கள் என்னைப் திருமணம் முடித்த பிறகு, இந்த வைகுண்டத்தில் குடியிருக்க வைத்தீர். பிறகு தாங்கள் என்னைப் பிரிந்து போன காரங்களா என்ன? அப்புதுமையான காரியம் பற்றி எனக்கு விளங்கும்படி நீவிர் கூறியருள வேண்டும்" என்று கூறி, மீண்டும் தொடர்ந்தாள்.
"என்றும் இருப்பவனே, இறவாதநிலை பெற்றோனே, ஆதி பொருளால்கூட அளவெடுத்துக் கூற முடியாது அநாதியாய் நின்ற நாராயணப் பொருளே,
---------------------

அகில (வைகுண்ட) வளமை*****
கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது
அகில வளமை அருளக்கேள் அம்மானை
தேவாதி தேவர் திருக்கூட்டமாய் இருக்க
மூவாதி மூவர் மிக்கஒரு மிக்கஒரு
சிங்காசனத்தில் சிறந்து இருக்கும் வேளையிலே
மங்காததேவி மாது திரு இலட்சுமியாள்
ஈரேழு உலகும் இரட்சித்த உத்தமியாள்
பார் ஏழும் படைத்த பரமதிரு இலட்சுமியாள்
நன்றாய் எழுந்திருந்து நாராயணர் பதத்தைத்
தெண்டனிட்டு இலட்சுமியும் செப்புவாள் அம்மானை...

இதுவரை கூறிய கயிலையின் வளமை முழுவதும் கூறமுடியாத ஒன்று. இனி (நமது) வைகுண்டத்தின் (அகிலத்தின்) வளமை பற்றிக் கூறுகிறேன்.
ஒரு சமயம், வைகுண்டத்தில் தேவர்கள் கூடியிருந்தார்கள். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் ஆளுக்கொரு சிம்மாசனத்தில் எழுந்தருளி இருந்தார்கள். அவ்வேளையில், எப்போதும் பிரகாசித்துக் கொண்டும், பதினான்கு உலகங்களையும் பாதுகாத்துக் கொண்டும், ஏழு உலகங்களையும் படைத்த பெருமைக்குரிய இலட்சுமிதேவி, அழகாக எழுந்து, நாராயணர் பாதங்களை வணங்கி, ...

விருத்தம் (ஆசிரியர் கூற்று)*********
ஆறுசெஞ்சடை சூடிய அய்யனார் அமர்ந்து வாழும் கயிலை வளமதைக்
கூறக்கூறக் குறையவில்லை காணுமே கொன்றை சூடும் அண்டர் திருப்பாதம்
வாறுவாறு வகுக்க முடிந்திடாத மகிழுங் குண்டவளம் சொல்லி அப்புறம்
வேறுவேறு விளம்பவே கேளுங்கோ மெய்யுள்ளோராகிய வேத அன்பரே.

செம்மை நிறத்தையுடைய ஆறு சடைகளைச் சூடிய ஈசர் அமர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கயிலையின் நிலையினைப் பற்றி விளக்கிக் கூறக் கூற அதன் விளக்கம் குறையாதவண்ணம் விரிந்து கொண்டே இருக்கும். கொன்றை மலர் சூடும் அண்டர் பிரானின் பெருமையான பாதத்தினைப் பற்றி ஒவ்வொரு வழியாகப் பிரித்துப் பெருமையான பாதத்தினைப் பற்றி ஒவ்வொரு வழியாகப் பிரித்துப் பிரித்துக் கூறுவது முடியாது. இனி, மகிழ்ச்சி பொருந்திய வைகுண்டத்தின் வளமை பற்றிச் சொல்லி விட்டு அதன் மூலமாக வேறு பல காரியங்களையும் நாராயணர் சொல்லுவார். உண்மைத் தன்மை பொருந்தியவர்களாகிய வேதம் அறிந்த அன்பர்களே, கேட்பீர்களாக.

கயிலை வளமை ****************
...மறைவேத சாத்திரங்கள் மலரோன் அடிவணங்க
இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்க
எமதர்ம ராசன் எப்போதும் வந்து நிற்க
பூமகளும் வேதப் புரோகிதர் வந்து தெண்டனிட
காமதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர்
நாம நெடியோன் பதத்தை நாள்தோறும் போற்றி நிற்க
தலைவன் எடுத்துரைக்க நிலையாது அம்மானை
நிலைமை எடுத்துரைக்க நிலையாது அம்மானை.

மறை வேத சாத்திரங்களும், இறவாத தன்மையுள்ள தேவர்களும் இறைஞ்சி வணங்கி நின்றார்கள்.
எமதருமராஜன் எப்பொழுதும் நின்று கொண்டிருக்க, பூமாதேவியும், லோகத்தை ஓதும் புரோகிதர்களும் வணங்கி நிற்க. காமதேவன் முதல் கணக்கில் அடங்காத முனிவர்களும், சிறந்த பெயரையுடைய நாராயணரின் பாதத்தைத் தினந்தோறும் போற்றி நின்று கொண்டிருக்க, எல்லாருக்கும் தலைவனாகிய ஈசர் வீற்றிருக்கும் தங்கத்தினால் ஆகிய திருக்கயிலையின் நிலைமையை எவ்வளவு கூறினாலும் எடுத்துரைப்பது முடியாது. இலட்சுமியே, நீ கேட்பாயாக.

வேதப் புரோகிதர் விளங்குகின்ற மண்டபமும்
சீத உமையாள் சிறந்து இலங்கும் மண்டபமும்
நீதத் திருமால் நிறைந்து இலங்கும் மண்டபமும்
சீதை மகிழ்ந்து சுரந்திருக்கும் மண்டபமும்
ஆதவனும் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும்
வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும்
ஆரும் மிக அறிந்து அளவிடக் கூடாத
பாரு படைத்த பரமேசுரனாரை
விசுவாச மேலோர் விமலன் அடிவணங்க
வசுவாசு தேவன் வந்து மிகவணங்க...

... வேதப் புரோகிதர்கள் தாங்கும் மண்டபமும், குளுமை பொருந்திய பார்வதிதேவி வீற்றிருக்கும் மண்டபமும், நீதியினைப் பரிபாலிக்கும் திருமாலின் மண்டபமும், சீதை மகிழ்ந்திருக்கும் சிறப்பான மண்டபமும், சூரியனும், சந்திரனும் மேலிருந்து இறங்கித் தங்கும் மண்டபமும், பிரம்மனும், உருத்திரனும் எழுந்தருளும் மண்டபமும் உள்ளன.
அவற்றின் பெருமையினை யாரும் அறிந்து அளவிட முடியாது.
இத்தகைய கயிலை உலகினைப் படைத்த பரமேசுரனாரை விசுவாசமான தேவர்களும், வாசுவுகம், வாசுதேவனும் வணங்கி நின்றார்கள்.

முத்தான சீமை மூன்று நீதத்தோடு
பத்தாசையாகப் பண்பாய்த் தழைத்திடவே
நாலான வேதம் நல்ல கலியுகமாய்
மேலாம் பரமாய் விளங்கி இருந்திடவே
தேவர் உறையும் திருக்கயிலைதன் வளமை
பாவலர்கள் முன்னே பாடினார் அம்மானை
ஈசர் உறையும் இரத்தின கிரிதனிலே
வாசவனும் தேவர் மறையோரும் வீற்றிருக்க
பொன்னம்பல நாதர் பொருந்தி இருக்கும் மண்டபமும்
கின்னர்கள் வேதம் கிளிர்த்துகின்ற மண்டபமும்

மூன்று நீத்ததோடு முத்துக்கள் நிறைந்த தெச்சணாபூமி இறைவனைப் பற்றும் ஆசையுடைய மக்களைப் பெற்றுத் தளைத்து, நான்கு வேதங்களும் பரந்து நல்ல தன்மையுள்ள கலியுகமாய் மேன்மை பொருந்திய தருமபதி போன்று அது விளங்கி இருந்தது. இப்படி இருக்க பாவலர்களால் முன்னரே பாடப்பட்ட தேவர்கள் வாசம் செய்கின்ற கயிலாயத்தின் வளமைப் பற்றி இனிச் சொல்லுகிறேன்.
ஈசர் வீற்றிருக்கும் இரத்தினகிரியில் (கயிலையில்) இந்திரனும் தேவர்களும், பிரம்மனும் அமர்ந்திருந்தார்கள்.
அங்கே பொன்னம்பலநாதர் தாங்குகின்ற மண்டபமும், கின்னர்கள் வேதம் ஓதுகின்ற மண்டபமும், ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக