விருத்தம் (ஆசிரியர் கூற்று)*****
இராவணன் தன்னைக் கொல்ல இராம பாணங்களோடே
சீராமராய் மாயன் தானும் தசரதன் தனக்குத் தோன்றி
விராகன் மாது சீதை வில்லோடு உதிக்கத் தேவர்
மாராமரக் குலங்களாகி வந்தனர் புவியின் மீதே

---------
உரை
---------
இராவணனைக் கொல்ல மாயன் தசரதன் என்பவனுக்கு ஸ்ரீஇராமன் என்னும் பெயரோடு மகனாகத் தோன்றினார்.
திருமாலின் மனைவியாகிய இலட்சுமிதேவி சீதை என்னும் பெயருடன் வில்லோடு பிறந்தாள். தேவர்கள் குரங்குகளாகவும் இப்பூவுலகில் வந்து பிறந்தனர்.
---------------------

தேவர்கள் மகிழ்ச்சியும் சீதை முதலியோர் பிறவியும்*****
... கூடப் பிறக்கக் குன்றெடுத்தார் தாம்துயிலும்
நீட அரவணையை நீத இலட்சுமணர் ஆக்கி
தலையணை மெத்தையையும் சத்துரு பரதனுமாய்
நிலைவரமாய் ஈசன் நெறியாய்ப் பிறவி செய்ய
தேவரையும் வானரமாய்ச் சிவனார் பிறவி செய்ய
மூவரும்தாம் பிறவி உள்ளது எல்லாம் செய்திடவே
கொடு முடியாய்ப் பிறந்த கோள் இலங்கைப் பாவிகளை
முடிஅடிவேர் இல்லாமல் முற்றும் அறுப்பதற்கு
வேண்டும் பிறவி எல்லாம் விமலன் அருளிமிக
தாண்டவச் சங்காரம்தான் இது என்றார் அம்மானை

மலையைக் குடை போல் பிடித்து மக்களைக் காத்த மாயன் துயிலுகின்ற அரவணையாகிய பாம்பை இலட்சுமணராகவும்; தலையணை, மெத்தை இரண்டையும் சத்துருக்கன், பரதனுமாகவும் ஒழுங்கான முறையில் பிறவி செய்தார்.
எல்லாப் பிறவிகளையும் மூவரும் செய்து முடித்து விட்டபடியால் கொடுமை புரியும் கிரீடம் தரித்துக் கொண்டிருக்கும் இலங்கையில் பிறந்த இராவணனையும் ஏனைய பாவிகளையும் சந்தியார் இல்லாமல் அழிப்பதற்கு வேண்டிய தேவையான பிறவிகளை எல்லாம் ஈசன் அமைத்தார்.
இவர்கள் மூலம் வரும் அழிவுதான் "தாண்டவச் சங்காரம்" என்று கூறினார் ஈசர். இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.

*தேவர்கள் மகிழ்ச்சியும் சீதை முதலியோர் பிறவியும்*****
...வில்லோடுடன் பிறந்த வீரலட்சுமி எனவே
வல்லோர்கள் ஆராலும் வந்து இந்த வில்லதையும்
வளைத்தோர்க்கு நல்ல மாலை சூட்டலாம் எனவே
தளைத்த சுகசீல தாட்டீக மாமுனியைத்
தினகரராய்ப் பூமிதனில் செய்து வைத்து இலட்சுமியை
மனோகரமாய் பூமிதனில் வைத்த பெட்டகத்தோடே
வில்லோடு உடன் பிறக்க விமலன் அருளினராம்
நல்ல துருவாச மாமுனியை நாடதிலே
தசரதராய்த் தோன்ற வைத்துத் தேசாதி ராசனுக்கு
விசைமாலை ராமருமாய் வீரக் கணையோடே ...

"வீர இலட்சுமியுடன் பிறந்தது 'வீரவேல்' ஆகும். எனவே, அதிக பலம் கொண்டவர்கள்கூட வந்து இந்த வீரவில்லை வளைக்க முடியாது. அந்த வில்லை வலைத்தவர்க்குத் திருமண மாலையைச் சீதை சூட்டுவாள்" என்றனர்.
அதற்குக் கட்டுப்பட்ட பலம் பொருந்திய சுகசீல மாமுனியை, ஈசர் தினகரராய்ப் பூலோகத்தில் பிறவி செய்தார். பிறகு, இலட்சுமியை, அழகு பொருந்த பூமியில் வைத்த பெட்டகத்தினுள் வில்லோடு வைத்துப் பிறக்க வகை செய்தார்.
அடுத்து, துருவாச மாமுனிவனைப் பூலோகத்தில் தசரதராய்ப் பிறவி செய்து தேசாதி ராஜனான அந்தத் தசரதருக்கு மகனாகத் திருமாலைச் சக்தி வாய்ந்த இராமபாணத்தோடு இராமராய்ப் பிறவி செய்தார்.

எல்லோரும் கண்டு இது கண்மாயம் எனவே
வல்லோர்களான வாய்த்த தேவாதி எல்லாம்
சங்கடங்கள் தீர்ந்தது என்று சந்தோசம் கொண்டாட
அங்கணங்களான அலகை மிகக்கூத்தாட
இராம பாணத்தாலே இராவண சூரன்தனையும்
ஸ்ரீராமர் மிகச்சென்று தென்னிலங்கை தன்னிலுள்ள
அரக்கர்குலம் அறுப்பார் அச்சுதனார் என்று சொல்லி
இரக்கமுள்ள தேவர் இரங்கி மிகக்கொண்டாட ...

இப்படி இதைக் கண்டு மகிழ்ந்த எல்லாரும், "இது கண்ணை மறைக்கும் மாயச் செயல் போன்றது" என்று கூறினார்கள்.
வலிமை பொருந்தியவர்களான தேவர் முதலிய எல்லாரும் "நம்முடைய துன்பங்கள் தீர்ந்தன" என்று கூறி மகிழ்ந்து குதித்தனர்; சிவகணங்களாகிய பேய்கள் கூத்தாடின.
இரக்கச் சிந்தனையுள்ள தேவர்கள், "அரக்கன் இராவணையும், தென் இலங்கையிலுள்ள அரக்கர் குலத்தையும் அச்சுதராகிய ஸ்ரீஇராமர் தமது இராமபாணம் கொண்டு அழிப்பார்" என்று சொல்லிக் குதித்து ஆடினர்.

இராமபாணமும் வில்லும் உற்பத்தி*****
பிறிதி கொண்டு இலட்சுமியும் பலத்த திருக்கரத்தில்
சுண்டு விரலில் துய்ய நரம்பு உருவி
வேண்டும் பெரிய வீரவில் ஈதெனவே
ஆராரும் இந்த வில்லை அம்பு ஏற்றக் கூடாமல்
சீராமர் ஏற்றச் சிந்தித்தாள் அம்மானை
உடனே அது வில்லாய் ஓமமதிலே பிறக்க
திடமாக ராமர் திருக்கணைக்கால் உள்நரம்பு
பணமதாய் வேள்விதனில் பரிவாய்ப் பிறந்திடவே
தாணரும் வானோரும் சங்கத்தோரும் காண

இதைப் பார்த்த இலட்சுமியும் இராமபாணத்திற்குப் பிரதி பலனாகத் தமது பலம் பொருந்திய கரத்தின் சுண்டு விரலிலிருந்த அழகான ஒரு நரம்பினை உருவியெடுத்து, "மிகவும் பெரிய வீர வில் என எல்லாரும் போற்றும் அளவில் பெரிய வில்லாக வேண்டும்" என்று கூறி வேள்வியில் எறிந்தாள்.
அப்போது "ஸ்ரீ இராமபாணத்தைத் தவிர வேறு யாரும் இந்த வில்லில் அம்பேற்ற முடியாவண்ணம் உறுதி கொண்ட வில்லாக இஃது அமைய வேண்டும்" என்றும் இலட்சுமிதேவி தியானித்தாள். உடனே அந்த நரம்பு வில்லாக வேள்வித் தீயில் பிறந்தது. ஸ்ரீஇராமருடைய கணைக்காலில் உள்ள நரம்பும் வில்லாக வேள்வியில் இராமபாணமாகப் பிறந்தது. சிவனும், தேவர்களும், அங்குக் கூடி இருந்தவர்களும் சாட்சியாக இந்த நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.

*இராமபாணமும் வில்லும் உற்பத்தி*****
இராமபாணம் அதையும் நன்றாய்ப் பிறவி செய்ய
சீராம திரியம்பகனும் சிவனும் அகம் மகிழ்ந்து
என்ன விதமாய் இது பிறவி செய்வோம் என்று
பொன்னம் பலத்தோர் புத்தி நொந்துதாம் இருந்தார்
ஈசுரரும் அப்போது இரத்தின கிரிதனிலே
ஈசுபரனும் வேள்வி அது வளர்க்க
வேள்வி வளர்த்து விமலன் உருவேற்ற
ஆதி திருமால் அப்போது உபாயமதாய்த்
திருக்கணைக் காலில் செய்ய நரம்பு உருவிக்
கருக்கணமாய் ராமபாணக் கணை எனவே
உறுதி கொண்டு வேள்விதனில் விட்டெறிந்தார் அம்மானை ...

அடுத்து, இராமபாணத்தை நல்ல முறையில் உருவாக்கிட ஸ்ரீ இராம திரியம்பகனாகிய மாயனும் சிவனும் மனம் மகிழ்ச்சியுற்று இருந்தனர். ஆனால், எந்த முறையில் இராமபாணத்தைச் செய்வது? என்று பொன்னம்பலமாகிய கயிலையில் இருக்கும் ஈசர் மிகவும் மன வேதனையுற்று இருந்தார். பிறகு கயிலையில் இருக்கும் ஈசர் மிகவும் மன வேதனையுற்று இருந்தார். பிறகு கயிலையில் ஈசர் இராமபாணம் உருவாக்க வேள்வி ஒன்று வளர்த்தார். அவ்வாறு வேள்வி வளர்த்து உருவெற்றிய சமயத்தில் அங்கே அமர்ந்திருந்த திருமால் தனது கணைக் காலிலிருந்து அழகான ஒரு நரம்பை உருவி எடுத்து "செய்யப் போகும் ஆயுதத்தின் பல் பகுதி சீரிய இலக்கணமுள்ள இராமபாணமாக உருவாகட்டும்" என்று கூறி நரம்பை வேள்வியில் எறிந்தார்.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக