கன்னியர் கஞ்சனுக்குத் தங்கைகளாகப் பிறத்தல்*****
மின்னின் ஒளியை விமலன் பிறவி செய்தார்
பிறவி அரன் செய்யப் பிறந்தார்காண் பூமியிலே
திறவு அது கேட்டுத் தெய்வகியும் ரோகிணியும்
மதுரைதனில் வந்து மாபாவி கஞ்சனுக்கு
இருதையல் மாமயிலார் ஏற்ற பிறப்பெனவே
கூடப் பிறந்தால் கொடியதோசம் எனவே
தேட ஒருராசன் சிறுவி எனப் பிறந்தார்
பிறந்தேதான் கஞ்சனுக்குப் பிறப்பெனவே பேசுவாராம்

---------
உரை
---------
பிறகு, மின்னல் போன்ற ஒளியையுடைய அப்பெண்களை ஈசர் பிறவி செய்தார். எல்லா வழிகளையும் ஈசரிடம் கேட்ட தெய்வகியும், ரோகிணியும் மதுரையில் வந்து பிறந்தனர். 'மாபாவி கஞ்சனோடு கூடிப் பிறந்தால் அது கொடிய தோசம்' என நினைத்து, தாங்கள் குழந்தையாகப் பிறக்க உடல் தேடி கடைசியில் அதே தேசத்தை சார்ந்த ராஜன், கஞ்சனின் சிற்றப்பாவான தேவகனுக்குப் பெண் குழந்தைகளாகப் பிறந்தனர். ஆனால், அப்பெண்களும் கஞ்சனும் 'உடன் பிறப்பு' போல வாழ்ந்தனர்.

*கன்னிகள் ஈசுரரைத் துதித்தல்*****
வாயு மகாதேவன் வடிவு என்னும் இச்சையினால்
ஆசையால் உங்களுக்கு அவனே புருஷன் என்றார்
சங்கு சக்கரம் கொண்ட தம்பி என்னும் இசையினால்
அங்குப் பகவதியும் அச்சுதரும் உங்களுக்கு
மதலை என வந்து உதிப்பார் வையமது கொண்டாட
குதலை மொழியாரே கொம்பேறி இடையாரே
விலங்குச் சிறையும் மிகுசிறையும் உங்களுக்கு
மலுங்குவது மெத்த மாய்ச்சல் உண்டாகியபின்
ஸ்ரீகிருஷ்ணனாகத் திருமால் உதித்த பின்பு
குறுக்கிட்ட தோசக் கொடுமை மிகத்தீர்ந்து
பின்னே பதவி பேறு உண்டு உங்களுக்கு

மீண்டும் ஈசர் தொடர்ந்து கூறியதாவது "
1. "காட்டில் கிடந்த குழந்தையைப் பார்த்து நீங்கள் 'வாயு மாகாதேவன் வடிவில் இக்குழந்தை இருகிறது' என்று காம இச்சை கொண்டு எடுத்த காரணத்தால் வாயுதேவனே உங்களுக்குப் புருஷனாவான்.
2. 'திருமாலின் சங்கு சக்கரத்தையும், சக்தியின் சக்கரத்தையும் கொண்ட அழகு பொருந்திய குழந்தை இது' என்று ஆசை கொண்டதால் பூலோகத்தில் சக்திதேவியும் திருமாலும் குழந்தைகளாக உங்களுக்குப் பிறப்பர். உலகம் இதைக் கொண்டாடி வரவேற்கும்.
3. மழலை மொழியும், கொம்பேறும் கொடி போன்ற சிற்றிடையும் உடையவர்களே, பூலோகத்தில் நீங்கள் விலங்கு இடப்பட்டுச் சிறையில் அடைப்பட்டுப் பல வகைகளிலும் துன்பப்பட்டு உள்ளம் சோர்வாகும்போது திருமால் கிருஷ்ணன் என்னும் பெயரோடு தோன்றுவார், பிறகு உங்களைக் குறுக்கிட்ட துன்பங்கள் தீர்க்கப்பட்டு உயர்வான பதவியாகிய வீடுபேறு அடைவீர்கள்." என்றார்.

இப்படியே கன்னி இரங்கி அழுதிடவே
அப்படியே கன்னி அவர்களுக்கு ஆதியுந்தான்
சொல்லுவார் வேதச் சுடரோன் அதிசயித்து
நல்லதுகாண் பெண்ணே நம்மை இரண்டும் சொல்லாதே
மாயன் துவாபர வையகத்தில் போய்ப் பிறக்க
உபாயமாய் உங்களையும் முறைத்தாய் தானாக்க
நாம் என்ன செய்வோம் நவ்வி மால் செய்ததற்கு
போம் என ஈசர் பிறவியது செய்தாராம்

ஆதியும், வேதச் சுடரோனுமான ஈசுரர் அவர்கள் வேண்டுதலைக் கேட்டு மிகுந்த ஆச்சரியப்பட்டு, அவர்களைப் பார்த்து, "பெண்களே, நீங்கள் கூறுவது நல்ல காரியம்தான், உங்களுடைய நிலைமைக்காக என்னை நன்மை தீமை ஆகிய இரண்டும் செய்யச் சொல்லி எந்தப் பலனும் இல்லை. மாயன் துவாபர யுகத்தில் போய்ப் பிறக்க வேண்டி இருப்பதால் உங்களை அவருக்குத் தாயார் ஆக்க இந்த வழியை உருவாக்கி உள்ளார். நான் என்ன செய்வேன்?. உங்களை விரும்பி மாயன் செய்த செயலுக்கு ஏற்ப நீங்கள் பிறக்கப் போங்கள்" என்று கூறிப் பிறவி செய்தார்.
---------------------

கன்னிகள் ஈசுரரைத் துதித்தல்*****
அம்மை உமையாள் அருகே மிகஇருந்து
உம்மையும் போற்றி உம் ஊழியங்கள் செய்து
பூவுலகில் நாங்கள் பெண்ணாய்ப் பிறந்ததுண்டால்
பாவிகட்கு வேலை பண்ணி முடியாதே
பூவும் முடித்துப் பூ மேடையும் பெருக்கி
நாவுலகு மெய்க்க நல்ல கவிதான் பாடி
தம்புரு வீணை சப்த சூழலுடனே
இன்புருக ராகம் இசைந்த முறைதான் நிகழ்த்தி
நரசென்மம் வாழும் அசுரக் குலங்களிலே
அரசே நீர் எங்களையும் அழுந்தப் படையாதேயும்

அம்மை உமையாள் பக்கத்தில் எப்பொழுதும் இருந்து அம்மையையும் உம்மையும் துதித்து, உம்முடைய வேலைகளை மட்டுமே செய்து வந்த எங்களைப் பூவுலகில் பெண்ணாகப் பிறவி செய்தால் அங்குள்ள பாவிகளுக்கு வேலைகள் செய்து அவர்களை மன நிறைவு செய்ய முடியாதே? அழகாகப் பூவினைச் சூட்டி, பூவினாலான மேடைகளையும் சுத்தம் செய்யப் பெருக்கி, பாவலர்கள் அதிசயிக்கும் வகையில் உம்மைப் பற்றி நல்ல பல கவிகளைப் பாடி, தம்புரு வீணை, இனிய குழல் ஆகியவற்றின் இனிய ஒலியுடன் மனம் முழுவதும் உருகும்வண்ணம் இனிய ராகம் சேர்த்து இசைத்துக் கொண்டிருக்கும் எங்களை, நரசென்மமாகிய மக்கள் வாழ்ந்துவருகின்ற அசுரக்குலத்தில் துன்பத்தை அனுபவிப்பதற்காகப் படைத்து விட வேண்டாம், இறையரசே" என்று இருக்கன்னிகளும் இரங்கி அழுதனர்.

மாயன் எடுத்த மகவான கோலமதை
நேயம் அறியாமல் நெறி தவறிப் போனதனால்
பின்னே நீர் எங்களையும் பிறவி செய்ய வேண்டாம்காண்
எந்நேரம் கயிலை இப்பூமி ஆனதிலே
தெய்வப் பசுபோல் தேவரீர் எங்களையும்
மெய்யறிவு கூடி மிகைப்படையும் மேலோனே
அல்லாதே போனால் அடியார்கள் எங்களையும்
இல்லாதே செய்யும் இனிப் பிறவி வேண்டாம்காண்

மாயன் எடுத்த குழந்தை உருவத்தின் உண்மையை அறியாமல் கற்பு நெறி இழந்து போனதால் இப்பிறவிக்குப் பிறகு நீர் எங்களைப் பிறவி செய்ய வேண்டாம். அப்படியே பிறவி செய்வதாக இருந்தால் எப்பொழுதும் இந்தக் கயிலை உலகில் உண்மை அறிவு பொருந்திய தெய்வப் பசுவாய் எங்களைப் படைக்க வேண்டும். அது முடியாவிட்டால் தங்களுக்கு அடியவர்களாகிய எங்களை இனிப் பிறவி இல்லாத தன்மையுள்ளவர்களாகச் செய்ய வேண்டும்.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக