வீரவாகுதேவர் தூது*****
... சூரன் மடிந்து துடித்து உயிர் போகையிலே
வீரமுள்ள நாதன் வீணன் அவன் முன்பில்வந்து
சொன்ன மொழி எல்லாம் சூட்சமாய்க் கேளாமல்
இந்நிலம்மேல் பாவி இறந்தாயே வம்பாலே
நாட்டமுடன் நான் உரைத்த நல்லமொழி கேளாமல்
கோட்டையும் உன்னுடைய குஞ்சரமும் தோற்றாயே
சந்துவிட்ட சொற்படிக்குத் தந்த அரசு ஆளாமல்
விந்துக் குலங்களற்று வீணாய் நீ போனாயே
மாளா வரங்கள் மகாகோடி பெற்றோம் என்று
பாழாக மாண்டாயே பண்டாரம் கையாலே
என்று அந்த ஆதி இத்தனையும் தாம்கூற
முன்பு பிறந்த முற்பிறப்புச் சூரமதால் ...

---------
உரை
---------
சூரனுடைய உயிர் பிரிகின்ற சமயத்தில் கந்தன் சூரனின் முன்பாக வந்து, "சூரனே, நான் சொன்ன உபதேச மொழிகளை எல்லாம் கருத்துடன் கேட்டுத் திருந்தாமல் உன்னுடைய வம்பான செய்கையினால் இந்தப் பூமி மீது விழுந்து இறந்துபோகும் தறுவாயில் உள்ளாயே! உன்னுடைய உறுதியான நல்ல கோட்டையையும், பட்டத்து யானையையும் இழந்து விட்டாயே! என் தூதுவன் மூலம் நான் சொன்ன சொற்படி நடக்காமலும், உனக்குத் தந்த அரசை ஆட்சி மூலம் நான் சொன்ன சொற்படி நடக்காமலும், உனக்குத் தந்த அரசை ஆட்சி புரியாமலும் சந்ததிகூட இல்லாமல் வீணாக நீ இறந்து போகிறாயே! நீ இறக்காமல் இருக்கப் பலகோடி வரங்கள் பெற்று விட்டோம் என்று இறுமாந்து, இந்தப் பண்டாரத்தின் கையினால் இறந்து போகிறாயே!" என்று கந்தன் கூறினார்.
இதைக் கேட்ட சூரன் முன்பு பிறந்த முற்பிறப்பிலுள்ள அரக்கக் குணத்துடன் பேசலானான்.

... பண்டாரத்தோடே படை எடுத்தான் அம்மானை
சூரனுட படைகள் துண்டம் துண்டமாய் விழவே
வீரர்களும் வந்து வெட்டினார் அம்மானை
வெட்டதனால் செத்தார் மிகுசூரக்குலங்கள்
பட்டார்கள் என்று பாலசூரன்தான் கேட்டு
வந்து எதிர்த்தான் மாயாண்டி தன்னோடே
இன்று வந்து வாய்த்தது என்று எம்பெருமாளும் மகிழ்ந்து
வேலாயுதத்தை விறுமா பதம் செபித்து
மேலாம் பரனார் விமலன் அருளாலே
எறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில்
பறிந்தே வேலாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே ...

பிறகு, கந்தனோடு போர் புரியப் படைகளுக்குக் கட்டளை பிறப்பித்தான். உடனே, கந்தனுடைய படை வீரர்கள் சூரனுடைய படைகளைத் துண்டு துண்டாய் வெட்டி வீழ்த்தினர்.
இவ்வாறாகச் சூரக்குலத்தினர் அழிந்தனர்.
தம்முடைய குலத்தினர் எல்லாம் அழிக்கப்பட்டனர் என்பதை அறிந்த சூரன், கந்தனோடு நேரடியாக எதிர்த்தான்.
"இன்றுதான் இச்சந்தர்ப்பம் வாய்த்தது" என்று கந்தன் எண்ணி மகிழ்ந்தார், பிறகு வேலாயுதத்தை எடுத்து, பிரம்ம மந்திரத்தை உச்சரித்து, எல்லாவற்றுக்கும் மேலான பரம்பொருளாம் சிவனின் அருளால் வேலாயுதத்தைச் சூரனை நோக்கி எறிந்தார். வேலாயுதம் தாக்கிடவே சூரன் மண்மீதில் உணர்வற்று விழுந்தான், சூரனை அழிக்க உதவிய வேலாயுதம் அங்கிருந்து சென்று பாற்கடலில் மூழ்கித் திரும்பியது. ...
---------------------

*வீரவாகுதேவர் தூது*****
... புத்தி இல்லாப் பாவி போர் சூரன் எதுரைப்பான்
இரந்து திரிகின்ற இரப்போனுக்கு உள்ள மதி
பரந்த புவி ஆளும் பாரமுடிக் காவலற்கு
ஏற்குமோ ஞானம் இரப்போனுக்கு அல்லாது
ஆருக்குமே சொல்லாதே ஆண்டி உன் ஞானமதை
சண்டைக்கு வா எனவேதான் கூறித் தூதுவிட்ட
பண்டாரம் என்னும் படைக்காரன் நீதானோ
என்னுடைய சேனை எல்லாம் மிகஅழித்து
என்னையும் நாய் நரிக்கு இடுவேன் என்றதும் நீயோ
என்றே அச்சூரன் இயம்பி மிகநகைத்துப் ...

புத்தி கேட்ட நிலையிலுள்ள வலிமை பொருந்திய சூரன் கந்தனை நோக்கி, "இரந்து திரியும் இரப்பன் சொல்லும் உபதேசம் இப்பரந்த தேசத்தை ஆளும் சக்தி வாய்ந்த கிரீடம் தரித்திருக்கும் அரசனுக்கு தேவையோ? (தேவையில்லை). உன் உபதேசம் இன்னுமொரு இரப்பனுக்கே பொருந்தும். வேறு யாருக்கும் ஒத்துவராது.
எனவே, உன் உபதேசத்தை விட்டுவிட்டுப் போர் புரிவதற்கு வா, ஏற்கனவே போர் புரிய வா என்று கூறித் தூதுவிட்ட இந்த படைக்குச் சொந்தக்காரனான அந்தப் பண்டாரம் நீதானோ? என் ஆயுதங்கள் படைகள் எல்லாம் அழித்து, என்னையும் கொன்று நாய் நரிகளுக்கு இடுவேன் என்று சொன்னது நீதானோ?" என்று கூறி அச்சூரன் பலமாகச் சிரித்தான். ...

... அற்பம் இந்த வாழ்வு அநியாயம் விட்டுவிடு
கரணம் ஈது இல்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து
மரணம் வந்து சீவன் மாண்டு போகும்பொழுது
நன்மை அது கூட நாடுமே அல்லாது
தின்மை வராது தேவரையும் விட்டுவிடு
தீட்சையுடன் புத்தி செவ்வே நேரிட்டு ஒரு
மோட்சமது தேட முடுக்கமதை விட்டுவிட்டு
இத்தனையும் நாதன் எடுத்து மிகஉரைக்க ...

மனித வாழ்வு மிகவும் சிறிது காலமே ஆகும்; எனவே, அநியாய செயல்களை விட்டுவிட்டு; நன்மைகளைச் செய்து துன்பமற்று வாழ்ந்து வா; மரணத் தறுவாயில் உடல் மாண்டு உயிர் போகும்போது மோட்சபதவிக்கு உதவியாய் இருப்பது நன்மையே ஆகும். அப்பதவியைத் தருவது தீமையன்று. இதைப் புரிந்து கொண்டு தேவர்களை விட்டுவிடு.
இந்த நல்ல உபதேசத்தை கேட்டு நல்ல புத்தியுடன் செம்மை பொருந்திய நேர்மையான செயல்களைச் செய்து மோட்சபதவி கிடைக்க ஆணவமான செயல்களை விட்டுவிடு" என்று கந்தன் உபதேசித்தார். ...

... கண்டார் ஈராறு கரத்தோன் அகம் மகிழ்ந்து
பண்டார வேசம் பண்பாய் எடுத்து இறுக்கி
முன்னே வரும் சூரன் முகத்தை அவர் பார்த்துப்
பின்னே சுவாமி புத்தி மிகஉரைப்பார்
வம்பில் இறவாதே வாழ்வு இழந்து போகாதே
தம்பி தலைவன் தளமும் இழவாதே
பற்பக் கிரீடமும் பவுசும் இழவாதே ...

இதைக் கண்ட பன்னிரண்டு கரங்களுடைய கந்தன் அகம் மகிழ்ந்து பண்டார வேசத்தை நல்ல அழகுடன் எடுத்துக் காட்டி, படைகளின் முன்னால் வரும் சூரனின் முகத்தைப் பார்த்து, அவனுக்குப் புத்திமதி உரைக்கலானார்.
"சூரனே, நீ வம்பாக இறந்து வாழ்விழந்து போகாதே; உன் தம்பியையும், படைத்தலைவனையும், படைத்தளங்களையும், இழந்து விடாதே; உன்னுடைய தாமரை போன்று அமைக்கப்பட்ட கிரீடத்தையும் நீ வாழும் சொகுசு வாழ்க்கையையும் இழந்துவிடாதே.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக