*சூரர்கள் வரம் பெற்று ஆட்சி புரிதல்*****
... உடனே சிவனாரும் உற்ற அச்சூரர்களுக்கு
அடமாய் அவன் கேட்ட அவ்வரங்கள்தாம் கொடுத்து
நீசர் இருக்க நெடியுகம் வகுத்து
பாசருக்குப் பேரும் பகர்ந்தே விடைகொடுத்தார்
விடைவேண்டிப் பாவிகள் விமலன்தனைத் தொழுது
மடைப் பாவியான மல்லோசி வாகனனும்
தில்லை மல்லாலனுமாய்ச் சேர்ந்து அங்கு இருபேரும்
வல்ல சிவன் வகுத்த வையகத்தில் வந்தனராம்
வந்தார் சிவன் வகுத்த வையகத்தில் அம்மானை
அந்த அசுரர் அவர் இருக்கும் அந்நாளில்
உதிரமது சூரர் ஒக்க உதித்து எழுந்து...

---------
உரை
---------
சிவன் இவ்வரங்களைக் கண்டிப்புடன் கேட்ட சூரர்களுக்கு அவர்கள் கேட்டபடியே கொடுத்தார்.
ஈசர், அந்த நீசர்கள் வாழ்ந்திருக்க 'நெடியுகம்' ஒன்றை உருவாக்கி, உலகப் பந்த பாசமுடைய அவர்களுக்கு மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன் என்னும் பெயர்களைச் சூட்டி விடை கொடுத்து அனுப்பினார். விடை பெற்ற பாவிகள் சிவனை வணங்கி விட்டு, அவர் உருவாக்கிய நீடிய யுகம் நடப்பிலுள்ள பூலோகத்தை அடைந்தனர்.
இவ்வாறு அசுரர்கள் இருவரும் அங்கு இருக்கின்ற சமயத்தில், குறோணியின் ஆறில் ஒரு பங்கு இரத்தம் சேர்ந்து திறமான அசுரப்படைகளாய் உருவெடுத்தது.
---------------------

சூரர்கள் வரம் பெற்று ஆட்சி புரிதல்*****
... மாதவரே தேவர்களே மறையவரே மூவர்களே
ஆதவரே எங்களுக்கு அதிகவரம் வேணும் என்றான்
அம்புவியில் உள்ள அஸ்திரங்கள் வாளாலும்
தம்பிரான் ஆனாலும் தாண்ட முடியாத வரம்
வானமது பூமி மலைகள் இவை மூன்றில் உள்ள
தானவராய் வாழுகின்ற தங்களால் எங்களையும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்
மல்லுக்கு உபாயமதுவும் வலுவும் பலமதுவும்
ஏவலாய் வானோர் என்னைத் தொழுது நின்றிடவும்
தவறாமல் இந்த வரம் தரவேணும் என்றுரைத்தான் ...

.... "மாதவரே, தேவர்களே, மறையவரே, மூவர்களே, ஆதவரே, எங்களுக்குச் சக்தி வாய்ந்த பல வரங்கள் நீங்களும் தர வேண்டும்.
இனி, அவற்றைக் கேட்கிறேன்.
1. பூலோகத்தில் உள்ள அஸ்திரங்கள், வாள் ஆகியவற்றாலும். தம்பிரானாலும் எங்களை அழிக்க முடியாத வாரமும்,
2. வானம், பூமி, மலைகள் இவை மூன்றிலும் வாழுகின்ற உயிர்களாலும் எங்களை அழிக்க முடியாத வாரமும்,
3. மல்யுத்தத்தில் வெற்றி பெறுகின்ற வழிகளையும், அதற்குரிய வலுவையும், பலத்தையும் அடையும் வரமும்,
4. வான லோகத்தார் எங்களைத் தொழுது, ஏவல் வேலை செய்யும் வரமும் தாங்கள் கண்டிப்பாகத் தர வேண்டும்" என்றான். ...

**சூரர்கள் வரம் பெற்று ஆட்சி புரிதல்*****
சுருதி முனி தவத்தைத் தொலைத்தே அவன்தனையும்
பொருதி கடல்மீதில் போட்டு எறிந்து வந்தவர்கள்
ஈசர்தமைத் தொழுது ஏற்ற வரம் கேட்டனராம்
வாசமுள்ள ஈசர் மாதுமையைத் தான் நோக்கி
தூயவளே மாயவளே சூரர் இருவருக்கும்
நேயமுள்ள வரங்கள் நீ கொடுக்க வேணும் என்றார்
வரம் கொடுக்க வேணும் என்று மறையோன் அதிசயித்து
சிரசு அன்பதுடைய சீர் சூரரை நோக்கி
ஏதுவரம் உங்களுக்கு இப்போது வேணும் என்றார்
தீது குடிகொண்ட சிரசு அன்பத்தோன் உரைப்பான் ...

சுருதி முனிவன் தவத்தை அழித்துவிட்டு, அவனோடு போரிட்டு அவனைக் கடலில் எறிந்து வந்த அசுரர்கள் ஈசரைத் தொழுதனர்.
பிறகு, தங்களுக்குத் தேவையான வரங்களைக் கேட்டனர்.
ஈசரையும், மிகவும் வாசம் பொருந்திய ஈசரின் மனைவியாகிய உமையவளையும் பார்த்து, "மாயவளே, தூய்மையுள்ளவளே, சூரர்களாகிய எங்கள் இருவருக்கும் தேவையுள்ள வரங்களை நீங்களும் தர வேண்டும்" என்றனர்.
இதைக் கேட்ட மறையோனாகிய ஈசர் ஆச்சரியப்பட்டு, ஐம்பது தலையுடன் சிறப்பு வாய்க்கப் பெற்ற சூரர்களை நோக்கி, "சூரர்களே, உங்களுக்கு என்ன வரங்கள் இப்போது வேண்டும்? கேளுங்கள்" என்று கூறினார்.
உடனே ஐம்பது தலைகள் பொருந்திய சூரன்.

விருத்தம் (ஆசிரியர் கூற்று)*****
சுருதி முனியுட நிஷ்டை தொலைத்தவர்
கருதிய சூரர் கயிலை மேவியே
பருதி சூடும் பரமனைப் போற்றியே
வருதி கேட்டு வணங்கினர் சூரரே
சுருதி முனியுட நிஷ்டை தொலைத்தவர்
கருதிய சூரர் கயிலை மேவியே
பருதி சூடும் பரமனைப் போற்றியே
வருதி கேட்டு வணங்கினர் சூரரே
---------
உரை
---------
சுருதி முனியின் தவத்தை அழித்து விட்டுத் தம்முடைய எண்ணத்தை நிறைவேற்றிய சூரர்கள் கயிலைக்குச் சென்று, ஒளி பொருந்திய சிவனைத் துதித்தனர். துதித்த ஒலி கேட்டு வந்த சிவனிடம் வரங்கள் கேட்டுச் சூரர்கள் வணங்கினார்கள்.

*III. நெடியுகம் ( மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன்)*****
... மந்திரபுரக் கணையாய் வாரி அலைக்குள் இருந்தான்
சுருதி முனிதனையும் தோயமதில் விட்டெறிந்து
உருதிகுடி சூரர் ஓடிவந்தே கயிலை
மோசமுடன் வந்த முழுநீசப் பாவியர்
ஈசர்தமைத் தொழுது இறைஞ்சி நின்றார் அம்மானை

...மந்திரபுர அம்பாகக் கடல் அலைக்கும் இருந்தான்.
இவ்வாறு சுருதி முனியைக் கடலில் எறிந்து கொன்று விட்டு, இரத்தத்தைக் குடிக்கும் அந்தச் சூரர்கள் கயிலைக்கு ஓடி வந்தனர். தீய எண்ணத்துடன் வந்த முழுமையான நீசப்பாவிகள் ஈசரைத் தொழுது வணங்கி நின்றனர்.
இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.

III. நெடியுகம் ( மல்லோசிவாகனன், தில்லைமல்லாலன்)*****
... என்னை எடுத்து இக்கடல்மேல் போட்டாலும்
உன்னை அறுக்க ஓர் அம்பாய் உருவெடுத்துப்
பங்கயக்கண் மாயன் பக்கமதில் நான் அறுத்து
இந்தக் கடலதிலே எடுத்து உங்களை எறிந்து
உந்தம் ஊரை ஒக்கக் கரிக்காடாக்கி
நானும் வைகுண்டம் நற்பேறு பெற்றிருப்பேன்
வானுதிரு ஆணை என்ற மாமுனியும் சாபம் இட்டான்
உடனே முனியை உயர்த்தி எடுத்தே சூரர்
கடல்மேல் எறிந்தார் கர்ம விதிப்படியால்
அந்த முனியும் அரனார் அருளாலே ...

... என்னை எடுத்து இந்தக் கடலில் எறிந்து அழித்து விட்டாலும் உங்களை அழிப்பதற்கு ஓர் அம்பாக உருவெடுத்துத் தாமரைப்பூ போன்ற அழகிய கண்களையுடைய மாயன் உங்களை அழிக்கும்போது அவருடன் சேர்ந்து, அசுரர்களாகிய உங்கள் இருவரின் உடம்புகளிலும் அம்பாகிய நான் ஊடுருவி உங்களைக் கொன்று இதே கடலில் எறிந்து அழிப்பேன், பிறகு உங்கள் நாடு முழுவதையும் காடுபோல் அழித்துவிட்டு, நான் வைகுண்டம் சென்று நல்ல கதி அடைந்திருப்பேன். இது சத்தியம். இலட்சுமிமேல் ஆணை." என்று முனிவன் கூறி அரக்கர்களை சாபமிட்டான்.
உடனே, அவ்வசுரர்கள் அந்த முனியைத் தூக்கி எடுத்துக் கடலில் எறிந்து கொன்றனர். அந்த முனியின் முன்வினை விதிப்படி சிவன் அருளால் ...
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக