துரியோதனனும் வீமனும் போருக்குப் புறப்படுதல்*****
விரிமாறு தூவி வெளியில் வந்தான் மாபாவி
தம்பி படைகள் தலைவர் புதல்வர்முதல்
வம்பில் இறந்தாச்சே வாழ்வது ஏன் என்று சொல்லி
எல்லாரும் இறந்திடிலும் எண்ணம் இல்லை என்றிடலாம்
வெல்லாரும் வெல்ல விசகர்ணன் மாண்டதனால்
இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்று எனவே
விருப்பமுள்ள கர்ணனை வெற்றி கொண்ட அருச்சுனனை
இன்று கொல்ல வேணும் என்று எழுந்தான் படைக்கெனவே
அன்று மால்தான் அறிந்து அருச்சுனனைத் தான் அழைத்து
இத்தனை நாளும் என்ன போர் செய்தாய் நீ
அதனால் உன்மேல் அரவக் கொடியோனும்
வாறான் படைக்கெனவே வாள்வீமனை அழைத்து

---------
உரை
---------
பின்பு அதிக எதிர்ப்போடு போர்க்களம் வந்த துரியோதனன், "தம்பிகள், படைகள், தலைவர்கள், புதல்வர்கள் எல்லாரும் வம்பாக இறந்து விட்டார்களே! நான் இனி வாழ்வதால் என்ன பயன்?" என்று சொல்லி மனமொடிந்து மேலும் தொடர்ந்து "எல்லாரும் இறந்திடினும் எனக்குக் கவலையில்லை. ஆனால் யாராலும் வெல்ல முடியாத வேகம் பொருந்திய கர்ணன் இறந்ததால் இனி இப்பூவுலகில் இருப்பதா? இறப்பதுவே மேலானதாகும்" என்று கூறிக் கொண்டே "எனது விருப்பத்திற்குரிய கர்ணனைக் கொன்ற அருச்சுனனை இன்று கொன்று விடுகிறேன்" என்று வீரச் சபதம் கூறிப் படை திரட்ட எழுந்தான்.
அன்றைக்கு இதைக் கிருஷ்ணன் அறிந்து, அருச்சுனனை அருகில் அழைத்து, "அருச்சுனா, இத்தனை நாளும் நீ எவ்வளவு சிறப்பாகப் போர் செய்தாய். எனவே, அதைக் கண்டு உன்னை அழிக்க வேண்டுமென்று அரவக்கொடியோனாகிய துரியோதனன் படை திரட்டி வருகிறான். எனவே கவனமாக இருப்பாயாக" என்று கூறினார்.
---------------------

*கிருஷ்ணன் தூதும் உதவியும்*****
மாயருட கையில் வளர்ந்த திருமுடியில்
ஓசையிட ஒன்று ஒத்துதே பாரதப் போர்
ஐபேருட படையும் அரவக் கொடியோன் படையும்
கைப்போரும் விற்போரும் கணைப்போரும் வாட்போரும்
அம்புப்போரும் கருவி நச்சுப்போரும் பொருது
கன்னன் சகுனி கனத்த வலுச் சல்லியனும்
மன்னன் ஸ்ரீபீஷ்மரும் வாய்த்த துரோணர்முதல்
சராசந்தன் வரையும் சத்திய கீசகனும்
பூராச வீமன் பலி இட்டான் அம்மானை
இத்தனை பேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும்
அத்தனை பேரையும் அறுத்தான் அருச்சுனனும்
துரியோதனன் படைகள் சேர மடிந்த பின்பு

அவர் (கிருஷ்ணர்) கையில் வளர்ந்த திருமுடிகளில் ஒன்று அசைந்து ஓசையிடவே பாரதப் போர் ஒருங்கு கூடியது. பஞ்சபாண்டவர் படையும், அரவக் கொடியையுடைய துரியோதனன் படையும், கைப்போர், விற்போர், கணைப்போர், வாட்போர், அம்புப்போர், விஷம் அடங்கிய ஆயுதப்போர் ஆகிய போர்கள் புரிந்தனர்.
கர்ணன், சகுனி, பலம் பொருந்திய வலிமையான சல்லியன், மன்னன் ஸ்ரீ பீஷ்மன், துரோணர், சராசந்தன் சத்தியகீசன் ஆகியோரைப் பூர்வசக்தி பெற்ற வீமன் கொன்று பலியிட்டான்.
இப்படியாக முக்கிய நிலையிலுள்ள இத்தனை பேரும் மாண்டிருந்தால் நூறு பேர்களும் உயிருடன் இருந்திருப்பார்களா?
எல்லாரையும் அருச்சுனன், தனது அம்பினால் அறுத்து அழித்தான். இவ்வாறு துரியோதனனின் படைகள் முழுவதும் மடிந்தன.

கிருஷ்ணன் தூதும் உதவியும்*****
வன்ன விசயனுக்கு ஆளிபலம் கொடுத்து
வீமனுக்கு நல்ல விசை தண்டாயுதம் கொடுத்து
தாமன் சகாதேவனுக்குச் சத்தி சூலம் கொடுத்து
நகுலனுக்கு ஆயுதமும் நல்ல பரியும் கொடுத்து
புகலான தர்மருக்குப் பொறுமை அரி கொடுத்து
மங்கை திரௌபதைக்கு வாய்த்த கனல் கொடுத்து
செங்கையிலே பாரதத்தைச் சேவித்தார் மாயவரும்

அழகான அருச்சுனனுக்குச் சக்தி வாய்ந்த அம்புகள் பல கொடுத்தும்; பீமனுக்கு நல்ல விசை பொருந்திய தண்டாயுதம் கொடுத்தும்; கீர்த்தியுள்ள சகாதேவனுக்குச் சத்தி சூலத்தைப் பெற்றுக் கொடுத்தும்; நகுலனுக்கு ஆயுதம், நல்ல குதிரை போன்றன கொடுத்தும் தம்மிடம் தஞ்சம் புகுந்த தருமருக்குப் பொறுமை கொடுத்தும்; பசித்தார்க்குப் பசி தீர்க்க அரியும் சூரியபாண்டம் கொடுத்தும்; நல்ல மங்கை திரௌபதைக்குக் கற்பென்னும் அக்கினியைக் கொடுத்தும்; சிவந்த தமது கையில் பாரதத்தை வைத்தும் காத்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஈயேன் என உரைத்த இயல்பு கேட்டு எம்பெருமாள்
கன்னன் பலமும் கடிய விதுரன் பலமும்
மன்னன் ஸ்ரீபீஷ்மர் வாழ் துரோணர் பலமும்
தென்னன் துரியோதனன் பலமும் தான் அழித்து

"சிறிதளவும் பூமி கொடேன்" என்று கூறியச் சொல்லைக் கேட்டு எம்பெருமானாகிய கிருஷ்ணன் கர்ணன் பலத்தையும், கடுமையான விதுரன் பலத்தையும், மன்னர் ஸ்ரீ பீஷ்மர் பலத்தையும், வெற்றியுடன் வாழ்ந்து வந்த துரோணர் பலத்தையும், தென்னனாகிய துரியோதனன் பலத்தையும் அழித்தார்.
---------------------
உரை
---------
"சிறிதளவும் பூமி கொடேன்" என்று கூறியச் சொல்லைக் கேட்டு எம்பெருமானாகிய கிருஷ்ணன் கர்ணன் பலத்தையும், கடுமையான விதுரன் பலத்தையும், மன்னர் ஸ்ரீ பீஷ்மர் பலத்தையும், வெற்றியுடன் வாழ்ந்து வந்த துரோணர் பலத்தையும், தென்னனாகிய துரியோதனன் பலத்தையும் அழித்தார்.
---------------------
*கிருஷ்ணன் தூதும் உதவியும்*****
மாயன் தூது போனார் வஞ்சம் இல்லாப் பஞ்சவர்க்கு
தீய துரியோதனனும் திருமாலைப் பாராமல்
தாழ் போகிற புத்தி தான் உரைத்தான் பஞ்சவர்க்கு
வாழ்வு பெறப் பூமி பார் என்றார் வாமனுமே
எள்போல் இடங்கள் ஈயோன் என உரைத்தான்
மாயனையும் பாவி வா போ எனப் பேசி

பிறகு மாயன் பஞ்சவர்க்காக நாடு கேட்டுத் தூது போனார். வஞ்சகத் தன்மை இல்லாத பஞ்சவர்க்குத் தூது போன கிருஷ்ணனைப் பற்றி நினைத்துக் கூட பார்க்காமல் தீயதுரியோதனன் தாழ்வுற்றுப் போகிற புத்தியுடன் பதிலுரைத்தான். கடைசியாகக் கிருஷ்ணன் பஞ்சவர்க்கு வாழ்வதற்குரிய சிறு அளவு பூமியாவது கொடுத்து உதவ வேண்டினார். அதற்குத் துரியோதனன் "எள்ளளவுகூட இடம் கொடுக்க மாட்டேன்" என உறுதியாக உரைதான். மாய கிருஷ்ணனையும் பாவி துரியோதனன் 'வா' 'போ' எனப் பேசி இகழ்ந்தான்.

*பஞ்சவரைக் கொல்லத் துரியோதனன் சதிகள்*****
இப்படியே மாயன் காத்து ஆண்டனரே ஐவரையும்
அப்படியே மாயன் துணை செய்தார் அம்மானை
பாவி அவன் செய்தது எல்லாம் பலியாமல் ஐவருக்கும்
சோவிதமாய் மாயன் துணை செய்தார் அம்மானை
பின்னும் அந்தப் பஞ்சவர்க்குப் பெரும் பாவி சொன்னபடி
பன்னிரண்டு ஆண்டு பரிவாய்க் கழிந்த பின்பு

இப்படித் துரியோதனன் செய்த அநியாயங்களை ஆங்காங்கே அழித்து மாயனாகிய கண்ணன் பஞ்சவரையும் காத்தார். பாவியாகிய துரியோதனன் செய்த செய்கைகள் பஞ்சவரைப் பாதிக்காவண்ணம் நன்மையாகத் துணை செய்தார். துரியோதனன் வேண்டுகோளின்படி பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் பஞ்சவர்க்கு மிகுந்த துயரத்துடன் கழிந்தது.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக