நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...நாகத்தணை கிடந்த நாராயணமூர்த்தி
வேகத்தால் குரோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார்
வெட்டினார் ஆறு மிகுத்துண்டம் அம்மானை
கெட்டிதான் என்று கிருபை கூர்ந்தே தேவர்
துண்டமது ஆறும் தொல்புவியிலே போட்டு
பிண்டமதைச் சுமந்து போட்டனர்காண் அம்மானை
அந்தக் குறோணி அவணுதிரம் ஆனதையும்
கொந்து கொந்தாகக் குளம்போலக் குண்டு வெட்டி
உதிரமதை விட்டு உயர்ந்த பீடம் போட்டு.

---------
உரை
---------
நாகத்தில் பள்ளி கொள்ளும் விஷ்ணு, விரைவாகக் குறோணியை வெட்டிப் பிளந்து ஆறு துண்டுகளாக்கினார். இது சரியான செயல்தான் என்று கூறி மகிழ்ச்சியுற்றுத் தேவர்கள் எல்லாரும் அத்துண்டங்கள் ஆறையும் பழமை பொருந்திய பூமியிலே ஆறு இடங்களில் சுமந்து கொண்டு போட்டனர்.
பிறகு, கொந்து கொந்தாகக் குளம் போல ஆறு குண்டுகள் வெட்டி அவற்றுள் குறோணியின் இரத்தத்தை விட்டு, ஆறு துண்டுகளையும் போட்டு உயர்ந்த ஆறு பீடம் போட்டார்.
---------------------

*நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...கொன்று போட்டே நரகக் குழிதூக்க நாள்வரும்கான்
என்று விடைகொடுத்தார் ஈசுரர்காண் அம்மானை
அன்று விடைவேண்டி அதிக திருமாலும்
குன்றுபோல் வந்த கொடிய படுபாவி
குரோணிதனைச் செயிக்கக் கோபம் வெகுண்டெழுந்து
சுரோணித வேதன் துடியாய் நடந்தனராம் ...

...அவன் சீவனை நரக லோகத்துக்குக் கொண்டு செல்லும் நாள் வரும், மாயனே, இதை நீ அறிந்து கொள்வாயாக" என்று ஈசர் கூறி, விஷ்ணுவுக்கு வரம் கொடுத்தார்.
வரங்கள் பெற்ற விஷ்ணு ஈசரிடம் விடை பெற்றதும், மலை போன்று வந்த கொடிய படுபாவியான குறோணியுடன் போரிட்டு வெற்றி பெற நினைத்துக் கோபங்கொண்டு, கோபத்தால் கண்கள் இரத்தம் போன்று சிவக்க, வேகமாகக் குறோணியை நோக்கி நடந்து சென்றார். ...
---------------------
உரை
---------
...அவன் சீவனை நரக லோகத்துக்குக் கொண்டு செல்லும் நாள் வரும், மாயனே, இதை நீ அறிந்து கொள்வாயாக" என்று ஈசர் கூறி, விஷ்ணுவுக்கு வரம் கொடுத்தார்.
வரங்கள் பெற்ற விஷ்ணு ஈசரிடம் விடை பெற்றதும், மலை போன்று வந்த கொடிய படுபாவியான குறோணியுடன் போரிட்டு வெற்றி பெற நினைத்துக் கோபங்கொண்டு, கோபத்தால் கண்கள் இரத்தம் போன்று சிவக்க, வேகமாகக் குறோணியை நோக்கி நடந்து சென்றார். ...
---------------------
*நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...கெட்டுக் கிளையாய்க் கொடிய அசுரக் குலமாய்ப்
பிறக்கும் அவன் உதிரம் பொல்லாதவன் தன்னுடம்பு
துண்டம் ஒன்று தானும் தொல்புவியிலே கடிய
குண்டோம சாலியனாய்க் குவலயத்திலே பிறப்பான்
அப்படியே குறோணி அவனுதிரம் ஆனதுவும்
இப்படியே ஆறு யுகத்துக்கும் அவனுடம்பு
வந்து பிறப்பான்காண் மாற்றானாய் உன்றனுக்கு
யுகத்துக்கு யுகமே உத்தமனாய் நீ பிறந்து
அகத்துக்கு அவன் பிறப்பு ஆறு யுகமத்திலும்
உண்டு அவன் சீவன் உயிரழிவு வந்த அந்நாள்
பண்டு நடுக்கேட்டுப் பாவி அவன் உயிரைக்...

...கேடுடைய அவனது அசுரச் சந்ததியாக தோன்றுமே?
மேலும், பொல்லாத தன்மையுடைய அக்குறோணி ஆறு துண்டுகளில் ஒன்று மூலம் பூமியில் அடுத்த யுகத்தில் கொடுமை பொருந்திய குண்டோமசாலியனாய்ப் பிறப்பான்.
இனித் தோன்றும் ஆறு யுகத்துக்கும் ஆறு பிண்டங்கள் மூலம் அவன் உனக்கு ஆறு எதிரிகளாகத் தோன்றுவான்.
அவ்வாறு அவன் தோன்றும் ஒவ்வொரு யுகமும் நீயும் உத்தமனாய் அவன் பிறக்கின்ற யுகத்தில் (அகத்தில்) பிறந்து, அவன் உடலை அழிக்கும் அன்று நியாய நீதி கேட்டு, அவன் உடம்பை அழித்து விட்டு, ...

...என்றும் கயிலை இலங்கி இருந்திடவும்
முண்டு செய்த பாவி முகமும் அவனுடம்பும்
துண்டு ஆறாகத் தொல்புவியில் இட்டிடவும்
கண்டம் கண்டமாய்ப் போடக் கடிய வரம் எனக்குத்
தண்டமிழீர் நீரும் தரவே தவசு இருந்தேன்
என்று திருமால் எடுத்துரைக்கவே ஈசர்
மன்றுதனை அளந்த மாலோடு உரைக்கலுற்றார்
கேளாய் நீ விஷ்ணுவே கேடன் குறோணிதனைத்
தூளாக்கி ஆறு துண்டமது ஆக்கி
விட்டு எறிந்தால் அவன் உதிரம் மேலும் ஒருயுகத்தில்...

...2. எப்பொழுதும் கயிலை பிரகாசம் பொருந்திய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
3. முன்பு பல அழிவினைச் செய்த பாவி குறோணியின் முகத்தோடு அவன் உடம்பையும் நான் ஆறு துண்டுகளாக வெட்டிக் கண்டம் கண்டமாகப் பழமை பொருந்திய இந்தப் பூமியில் போட்டிட வேண்டும். குளுமை பொருந்திய தமிழரான நீவீர் இவ்வளவு கடினமான வரங்களும் எனக்குத் தந்தருள வேண்டும் என்று தவம் இருந்தேன்." என்று திருமால் எடுத்துரைத்தார்.
ஈசர், உலகளந்த திருமாலிடம் "விஷ்ணுவே, கேள். கேடுடைய குறோணியை இல்லாமல் செய்ய முதலில் ஆறு துண்டுகள் ஆக்கிப் பூமியில் விட்டெறிந்தால், அவனது இரத்தமானது இன்னும் ஒவ்வொரு யுகத்திலும்...

...தவசுதனில் ஈசன் சன்னாசி போலே வந்து
ஆரு நீ இந்த ஆழ வனந்தனிலே
ஏது நீ தவசு எனை நினைந்தவாறு ஏது
என்று சன்னாசி ஈதுரைக்க மாயவரும்
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தார் அவரோடே
கயிலை எமலோகம் கறைக்கண்டர் சத்திவரை
அகிலம் அதைக் குறோணி அசுரன் என்னும் மாபாவி
விழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பி வந்தேன்
பளிங்குமலை நாதன் பாரத்தேவாதிமுதல்
பண்டுபோல் நாளும் பதியில் இருந்திடவே...

...இதை அறிந்த ஈசர், சன்னியாசி போல வேடம் தரித்து, மாயன் முன்னிலையில் தோன்றினார். அங்கு ஈசர் மாயனை நோக்கி. "யாரப்பா நீ? இந்தக் கடுமையான காட்டில் வந்து என்னை நினைத்துத் தவம் செய்யும் காரணம் என்ன? என்று கேட்டார்.
ஈசர் இவ்வாறு கூறாக கேட்ட மாயவர், "ஐயா, கயிலை, எமலோகம், வைகுண்டலோகம் (அகிலம்) கறைக்கண்டர் மனைவி சக்திவரை எல்லாச் சக்திகளையும் குறோணி என்னும் அசுரனாகிய பாவி விழுங்கினான். நான் தந்திரமான முறையில் தப்பித்து இங்கு வந்தேன்" என்றார். பிறகு, "எனக்குச் சில வரங்கள் நீர் தர வேண்டும்" என்று கூறி வரங்களைக் கேட்கலானார்.
1. "வீரம் பொருந்திய தேவர்கள்முதல் பளிங்கு மலை நாதனாகிய சிவன்வரை எல்லோரையும் பழைய நிலை போல் எப்பொழுதும் அவரவர் இருப்பிடங்களில் இருக்கும்படி செய்ய வேண்டும்...
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக